Reading Time: < 1 minute2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் 986.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்றன. ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் இலங்கை 158.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது. அதன்படி, ஜூன் மாதத்தில் இலங்கையின் மதிப்பிடப்பட்ட சுற்றுலா வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 45.1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மே மாதத்தில் சுற்றுலாத்துறையின் வருவாய் 131.5 மில்லியன்Read More →

Reading Time: < 1 minuteஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி புது டெல்லியில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளார். இதன்போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,Read More →

Reading Time: < 1 minuteவெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளது. கடந்த வருடம் சுமார் 311,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. முக்கியமாக கட்டார், குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேலும் சுமார் 300,000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று எதிர்பாக்கப்படுவதாக வெளிநாட்டுRead More →

Reading Time: < 1 minuteகிளிநொச்சி, இரணைமடு குளத்தின் நீர் விவசாயப் பண்பாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், குறித்த நீரினை விவசாயிகள் வீண் விரயம் செய்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இரணைமடுக் குளத்தின் கீழ் விவசாயத்தை மேற்கொள்ளும் பன்னங்கண்டி கமக்கார அமைப்பிற்கு உட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் நான்காவது மைல்கலலை; அண்மித்த பகுதியில் உள்ள நெல் வயல்களுக்கு பாய்ச்சப்படுகின்ற நீரையே சிலர் வீண் விரயம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விவசாயம்Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சர்வதேச நேரடி விமானசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16ம் திகதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமானமாக இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் வாரத்தில் திங்கள்,செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 நாட்களில் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் இந்த விமான சேவையை முன்னெடுத்து வருகின்றது. மேலும் அலையன்ஸ் ஏர் விமானம் தினமும் காலைRead More →

Reading Time: < 1 minuteஈழத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13ஆம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பிரித்தானியாவுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின்போது இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவும், இலங்கையும் மிகத் தொன்மையான நாகரிகத் தொடர்பு உடையவை எனவும் 1987ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பிறகுRead More →

Reading Time: < 1 minute500 மில்லியன் டொலர் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியை வழங்குவது தொடர்பில் இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது. உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் இணையத்தளத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 700 மில்லியன் டொலர்களில் 200 மில்லியன் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் இணையதளம் தெரிவித்திருந்தது.Read More →

Reading Time: < 1 minuteஎரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் விலைகள் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எரிவாயு விலை சூத்திரத்தின் அடிப்படையில் விலைகள் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் குறிப்பிட்டார். இம்மாதம் 04ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலைRead More →

Reading Time: < 1 minuteஅமைச்சர்கள் உட்பட ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதி ஜனாதிபதிக்கும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ள நிலையில் கொழும்பில் இருந்து வெளிப்பிரதேசங்களுக்கான பயணங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். குறித்த சந்திப்பை அடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 2Read More →