Reading Time: < 1 minuteமதுரை மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மற்றும் கொழும்பு இடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம்Read More →

Reading Time: < 1 minuteநாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் தொடர்பில் 196 திருத்தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பின் பின்னர், ஊழல் ஒழிப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஜூலை மாதம் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ் பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.Read More →

Reading Time: < 1 minuteஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று 15 வருடங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, சாவகச்சேரி மிருசுவிலைச் சேர்ந்த சண்முகரட்ணம் சண்முகராஜன் (16 வருடம்), 200 வருடம் சிறைந்தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா நவட்ணம் (14 வருடம்) ஆககியோரே விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவுக்கு பயணித்திருந்தRead More →

Reading Time: < 1 minuteசர்வதேச நாணய நிதியம் முன்வைத்த 33 நிபந்தனைகளை ஜூன் இறுதிக்குள் நிறைவேற்றியுள்ள இலங்கை அரசாங்கம் மேலும் எட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. ‘IMF Tracker’ எனும் இணையக் கருவி மூலம் இலங்கையின் செயல்திறனைக் கண்காணித்து வரும் வெரிடே ரிசர்ச் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. மே மாதத்தில் நான்காக இருந்த நிறைவேற்றப்படாத நிபந்தனைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி, ஜூன் எட்டாக அதிகரித்துள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுதல்,Read More →

Reading Time: < 1 minuteசூப்பர் நடிகர் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வழியாக வேறு நாட்டிற்கு செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் பல மணி நேரம் செலவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கை வழியாகமாலைதீவிற்குச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.Read More →

Reading Time: < 1 minuteகொழும்புக் கோட்டையில் இருந்து விசேட புகையிரதமொன்று இன்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. ஓமந்தை முதல் அனுராதபுரம் வரையிலான புகையிரதப் பாதையின் திருத்த பணிக்காக, கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை, யாழில் இருந்து ஓமந்தை வரையிலும், அதேபோன்று கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை இடம்பெற்றது. இந்நிலையில் தற்போது புகையிரத பாதை புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்றைய தினம் கொழும்பில் இருந்து விசேட புகையிரதம்Read More →

Reading Time: < 1 minuteஉயர் கல்வியைத் தொடருவதற்காக கனடா சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 28 வயதான எம்.எச். வினோஜ் யசங்க ஜெயசுந்தர என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். மதுபோதையில் வாகனமோட்டிய நபர்கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியலில் பட்டம் பெற்ற வினோஜ் யசங்க , கலாநிதி பட்டம் பெறுவதற்காகச் சென்றபோதே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார். கனடாவின் வான்கூவர் நகரில் மதுRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை இன்று புதன்கிழமை காலை கூடியது. இதன்போது, துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த தற்போதைய துணைவேந்தர்Read More →