Reading Time: < 1 minuteசிங்கள கலாசாரம் முல்லைத்தீவு முழுவதும் பரந்து காணப்படுகின்றமை வெளிச்சத்திற்கு வருமாக இருந்தால், முல்லைத்தீவு என்பது தமிழர்களின் பூர்வீக நிலம் என்ற கருத்து பொய்யாகிவிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு குருந்தூர் மலைக்குச் சென்ற உதய கம்பன்பில அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தின் அனுசரணையுடன், தமிழ் பிரிவினை வாதிகளால், 2100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொல்பொருள்Read More →

Reading Time: < 1 minuteவடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு மற்றும் காங்கேசன்துறை இடையில் ரயில் கடவைகளில் உள்ள சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போதுRead More →

Reading Time: < 1 minuteஜூன் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 52,663 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில், இந்தியாவில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஜூன் மாதத்தில்Read More →

Reading Time: < 1 minuteஎதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாகக் கூட்டத்தில் இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி ஆதரவாக 700 மில்லியன் டொலர்களை உலக வங்கி அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கிடைக்கும் மிகப்பெரிய நிதி இதுவென ரொய்ட்டர்ஸ், செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிதியில், 500 மில்லியன் டொலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காகவும் 250 மில்லியன் டொலர்கள் இரண்டு தவணைகளில்Read More →

Reading Time: < 1 minuteகடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து, விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக அடுத்த வாரம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனா செல்லவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை பூர்த்திசெய்யவேண்டியுள்ள நிலையில், அதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வினவியபோதே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார். சீனாவில் நடைபெறவுள்ள பொருளாதார கூட்டமொன்றில் பங்கேற்குமாறு தமக்கு சீன அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் அடுத்த வாரம் அங்குRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பாரியளவிலான விமானங்கள் வந்து இறங்க வேண்டும் என்பது தொடர்பிலும் அதிகளவான ஆசனங்களை கொண்ட விமானங்களை சேவையில் ஈடுபடுத்த்துவதன் முக்கியத்துவம் குறித்தும் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது. அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா தலைமையில் நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மக்களுக்கு பாதிப்பில்லாதவாறு விமான நிலைய விஸ்தரிப்பை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் வலியுறுத்தினர். விமான நிலையத்தின்Read More →

Reading Time: < 1 minuteசிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சியொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது. சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது. சிறுதானிய உணவுகளான கம்பு, திணை, வரகு, சாமை என பல வகையான சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. மேலும், சிறுதானியங்களில் இருந்து எவ்வாறு உணவு தயாரிப்பது என்பதும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.சிறுRead More →

Reading Time: < 1 minuteவெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய வேலைத்திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவைமூலம் தமது வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள்Read More →

Reading Time: < 1 minuteகடந்த இருபது வருடங்களில் முதன்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் 160 மில்லியன் சிறுவர்கள், தொழிலாளியாக இருப்பதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியது. குறிப்பாக 80 மில்லியன் சிறார்கள் உடல் மற்றும் உள ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவ்வமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. இந்நிலைமையானது அரிதானதாகும் என்றும் முறையான பெற்றோர்கள் இல்லாத பட்சத்தில் இவ்வாறானRead More →

Reading Time: < 1 minuteஇந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் இலங்கையில் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆகவே வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் இடம்பெற்ற விபத்துகளில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவாக பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்Read More →