Reading Time: < 1 minuteஇலங்கையில் இந்திய முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென` இலங்கை இந்திய சங்கத்தின் உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர். இலங்கை இந்திய சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பில் வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட இருதரப்பு பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிகள் மற்றும் மூலோபாயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பின் வளர்ச்சியை சுட்டிக்காட்டிய பிரதமர்,Read More →

Reading Time: < 1 minuteஅபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அபுதாபியின் எயார் அரேபியா விமான சேவை அறிவித்துள்ளது. இதன்படி குறித்த நிறுவனமானது அபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையில் வாராந்தம் மூன்று விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவுக்கும், திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கட்டுநாயக்கவிலிருந்து அபுதாபிக்கும் விமான சேவைகள்Read More →

Reading Time: < 1 minuteதேசிய வருமானத்திற்கு வடக்கிலிருந்து கிடைக்கும் தொகையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பிரச்சன்ன ரணவீர தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற ஜப்னா எடிசன் 2023 கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையிலேயே இந்தக் கண்காட்சியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டின் தேசிய வருமானத்தில் 46 வீதமானவை மேல்மாகாணத்திலிருந்தே கிடைத்து வருகின்றன. தென்Read More →

Reading Time: < 1 minuteயாழ்மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் இன்று (Sep 03, 2023) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் இன்று அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியுதவியில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கட்டிடத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ.எல் ரத்நாயக்க திறந்து வைத்தார். கட்டிடத்திற்கான பெயர் பலகை திரையினை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க திரை நீக்கம் செய்து வைத்தார். இந்நிகழ்வில், யாழ் மாவட்ட அரசாங்கRead More →

Reading Time: < 1 minuteயாழ் மத்திய பேருந்து நிலையமானது இன்று முதல் 24 மணிநேர சேவையை வழங்க ஆரம்பித்துள்ளது. நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த பேருந்து நிலையத்துக்கு வருகை தரும் நிலையில், பொது மக்களின் நலன் கருதியே இச்சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் லம்பேட் கருத்துத் தெரிவிக்கையில் ” கடந்த யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடற்றொலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் 24Read More →

Reading Time: < 1 minuteசீனாவை தளமாகக் கொண்ட முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனமான சினோபெக், இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. கொழும்பில் மத்தேகொடவில் நிறுவப்பட்ட அதன் முதல் நிலையத்தில் எரிபொருள் விநியோகம் ஆரமபமாகியுள்ளது. சீன பெட்ரோலிய நிறுவனங்களின் உள்ளூர் துணை நிறுவனமான சினோபெக் லங்கா இன்று (புதன்கிழமை) சந்தை ஊக்குவிப்பு பிரச்சாரத்துடன் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது. அதன்படி பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் விலைக் கழிவோடு எரிபொருள் நிரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் எண்டர் பிரேன்ச் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த உலகில் சுமார் 20 நாடுகளில் விரைவாக மீண்டு, இயல்பு நிலைக்கு வந்த இலங்கையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாக ராஜபக்ஷ் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின்Read More →

Reading Time: < 1 minuteயாழில் கனடாவில் இருந்து வந்தவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் (26) யாழில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தெல்லிப்பழையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களது ஒன்றுகூடல் நடைபெற்றது. பாடசாலை ஒன்றுகூடலில் நடனமாடிய நபர்இதன்போது கனடாவில் இருந்து வருகை தந்த நபர், பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவேளை திடீரென கீழேRead More →

Reading Time: < 1 minuteகுற்றவியல் சட்ட விதிகளின் கீழ் பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த வார ஆரம்பத்தில், இலங்கை மத்திய வங்கி பல்வேறு பெயர்களில் ஊக்குவிக்கப்படும் பிரமிட் திட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்தது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஏழு நிறுவனங்களின் பட்டியலையும் மத்திய வங்கி பெயரிட்டுள்ளது.Read More →