Reading Time: < 1 minuteஇலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துரையாடியுள்ளார். இதன்படி, காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளுக்காக 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை தொடருந்து திணைக்களத்துக்கு 22 டீசல் இயந்திரங்களைப் பரிசாக வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிசக்தி, வலுசக்தி, சுகாதாரம்,Read More →

Reading Time: < 1 minuteஇலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி (Korea Eximbank) இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தபோதே இந்த இணக்கப்பட்டினை வெளியிட்டனர். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவிகள் கடந்த 2022ஆம் ஆண்டு மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது.Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (01) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 292 ரூபாவாகவும், 301.05 ரூபாவாகவும் உள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 293.50 ரூபாவாகவும், 302.56 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. மத்திய கிழக்கு உட்படRead More →

Reading Time: < 1 minuteதமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் பாடசாலை மாணவிகள் மூவர், தங்கள் வீடுகளுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது ராஜராஜ சோழன் (கி.பி. 985-1012) பெயர் பொறிக்கப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயத்தைக் கண்டுபிடித்துள்ளனர். சுரேஷ் சுதா அழகன் மெமோரியல் அரசு மேல்நிலைப் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும்,கே மணிமேகலை, எஸ் திவ்யதர்ஷினி மற்றும் எஸ் கனிஷ்கஸ்ரீ ஆகியோரே இந்த நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவருவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்க வர்த்தகRead More →

Reading Time: < 1 minuteபாடசாலைகளில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள், வலய கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் தினம், ஆசிரியர் தினம் போன்ற விசேட நிகழ்வுகளுக்காகப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடுவது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெறுவதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகொழும்பு, ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள சர் பாரன் ஜயதிலக்க மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த வீதிகள் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார். இதுவரை காலதாமதமாகி வரும் அனைத்து தேர்வு முடிவுகளையும் வெளியிடுமாறு பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை,பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாகRead More →

Reading Time: 2 minutesஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம். எங்கள் வேலைத்திட்டத்தில்Read More →