67 விசேட வைத்தியர் நிபுணர்கள் இன்னும் இலங்கை திரும்பவில்லை – சுகாதார அமைச்சு
Reading Time: < 1 minuteபயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்தியர் நிபுணர்கள் இந்த வருடம் இலங்கைக்கு திரும்பவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்கள் வெளிநாட்டில் தங்கி இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைசாத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ShareTweetPin0 SharesRead More →