Reading Time: < 1 minuteகடனை நிலைநிறுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான இலங்கைக் குழுவிற்கும் சர்வதேச நாணய நிதியம்-உலக வங்கிக் குழுகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மொராக்கோவில் உள்ள மராகேச்சில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது, சர்வதேச நாணயRead More →

Reading Time: < 1 minuteநாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை நாளை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று பரீட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெற்றன. நேற்று காலை இந்தியா – நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட குறித்த கப்பல் பகல் 1.15 இக்கு காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே இந்த பரிட்சார்த்த நடவடிக்கைகளின் போது வருகை தந்திருந்தனர் என்றும் குறித்த கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இருந்து கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு பரிசாக அனுப்பப்பட்ட மூன்று பொதிகளில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 16 கிலோ குஷ் போதைப்பொருளும் 01 கிலோ ஐஸ் போதைப்பொருளுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்துகள் மூன்று மரப் பொதிகளில் அடைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும், குறித்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 122 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஇந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு யாழில் இன்று இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில் இந்திய துணைத் தூதர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் வடக்கு மாகாண அவைத் தலவைர் சிவஞாணம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராசா மற்றும் வர்த்தகர்கள் எனப் பலரும்Read More →

Reading Time: < 1 minuteதலைமன்னார், ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இச்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (05) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இக்கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்ததாவது,‘தலைமன்னார், ராமேஸ்வரம் கப்பல் சேவைகள் விரைவில்Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு நேற்று புறப்பட்ட கப்பல், இன்று நாகப்பட்டினத்தை வந்தடைந்தது. இந்த நிலையில், குறித்த கப்பலானது நாளைய தினம் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைக்கான போக்குவரத்தை சோதனை முறையில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், துறைமுகத்திற்கான அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம்Read More →

Reading Time: < 1 minuteதனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளையும் அடுத்த வாரம் தளர்த்த எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர், தேவையான உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என கூறியுள்ளார். இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை சுங்கத்தின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது என்றும் இது சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் வர்த்தகRead More →

Reading Time: < 1 minuteநெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை, பணவீக்கத்தை குறைப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளது என உலக வங்கி அறிவித்துள்ளது. சுற்றுலா வருவாய் மற்றும் அதன் நாணயத்தின் மதிப்பீட்டின் மூலம் இலங்கை பயனடைந்துள்ளது என்றும் உலக வங்கி கூறியுள்ளது. ஆகவே முன்னதாக 2024 இல் ஒரு விகிதம் என மதிப்பிடப்பட்ட பொருளாதாரம் 1.7 விகிதம் விரிவடையும் என எதிர்பார்ப்பதாகவும் உலக வங்கி அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் இலங்கையின் கண்ணோட்டம் இன்னும் நிச்சயமற்ற தன்மையினால் மங்கலாக இருப்பதாகவும் பாதகமானRead More →

Reading Time: < 1 minuteTimes Higher Education World University 2024 தரவரிசையின் அடிப்படையில் இவை இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. எனினும் இந்த பல்கலைக்கழகங்கள் இரண்டும் குறித்த தரவரிசையில் முதல் 1000 இடங்களுக்குள் இடம்பிடிக்கவில்லை என்றும் அறியப்படுகின்றது.Read More →