Reading Time: < 1 minuteஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தடைப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் 12வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த 30ஆம் திகதி முதல் நவம்பர் 1ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, 2016 மற்றும் 2018 க்கு இடையில் நடைபெற்ற 11 சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் புதுடில்லிக்கும் கொழும்புக்கும்Read More →

Reading Time: < 1 minuteசர்வதேச ஒத்துழைப்பு, கல்வித்துறை ஒத்துழைப்பு, கலாச்சார இடைச் செயற்பாடுகள் மற்றும் நட்புறவை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு உயர்கல்வி ஒத்துழைப்புக்களுக்காக சீனாவின் ஷெங்காய் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒத்துழைப்பு பிரிவின்கீழ் சீன மொழி நிலையமொன்றை எமது நாட்டில் ஸ்தாபிப்பதற்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகம், ஷெங்காய் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் வரையறுக்கப்பட்ட சீனா வங்கிக்கும் இடையிலானRead More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கு வருகை தந்துள்ள ‘உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட்‘ தலைமையிலான குழுவினர் இன்று (30) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த குழுவினர் உலக வங்கியின் நிதியுதவியில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டத்தைப் பார்வையிட்டனர். இவ்விஜயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.Read More →

Reading Time: < 1 minuteகொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூர் இடையில் வாராந்த முன்னெடுக்கும் விமான சேவைகளின் எண்ணிக்கையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகரித்துள்ளது. அதன்படி, நாளை (31) முதல் வாரந்தோறும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் விமான சேவைகள் இடம்பெறும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாகிஸ்தானின் கராச்சிக்கு வாரந்தோறும் 4 விமான சேவைகளை இயக்குகின்றது.Read More →

Reading Time: < 1 minuteஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதனடிப்படையில் இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விசா இன்றி நாட்டிற்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் 31 ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டுRead More →

Reading Time: < 1 minuteதூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது, துபாய் நிறுவனமொன்றுடன் தூத்துக்குடி வ. உ. சி துறைமுக ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் கப்பல் போக்குவரத்திற்காக இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக துறைமுக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை மையமாகக்Read More →

Reading Time: < 1 minuteஎதிர்பார்த்ததை விட அதிக பயணிகளை ஈர்த்துவரும் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கூடத்தை ரூ. 200 மில்லியன் செலவில் மேம்படுத்த இலங்கை துறைமுக, கப்பல், விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் மற்றும் சர்வதேச பயணிகளின் பயணத் தேவைகளை நிறைவேற்றும் முக்கிய கடவையாக பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது விளங்குகின்றது. முக்கியமாக சென்னை – பலாலி விமானநிலையங்களிடையே இதுவரை 200 பறப்புகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மனைவியை கொலை செய்த குற்றசாட்டில் தமிழர் ஒருவருக்கு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் ஸ்காபரோவில் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் கணவரான சசிகரன் தனபாலசிங்கம் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்பவம்Read More →

Reading Time: < 1 minuteமேலும் 9 தனியார் பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இரண்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் p சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். குறித்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.Read More →