Reading Time: < 1 minuteஇலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வர்த்தமானி அறிவித்தல் அமுலாகின்றது. மன்னார் மற்றும் இந்தியாவிற்குள இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteஇந்தியா, கனடாவுக்கிடையிலான தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் முடிந்தபாடில்லை போல் தோன்றுகிறது. இரு நாடுகளின் தூதர்களும் அமைதியாக பரஸ்பரம் பேசித் தீர்க்கவேண்டிய விடயங்களை வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் பேசி பிரச்சினையை பெரிதாக்கினார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. தூதரக உறவுகள் பாதிக்கப்பட்ட பின்னரும், இந்தியா வியன்னா ஒப்பந்தத்தை மீறி கனேடிய தூதர்களை வெளியேற்றியதாக இந்தியா மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார் ட்ரூடோ. இந்நிலையில், மனித உரிமைகள் தொடர்பில் கனடா இன்னும் என்னென்னRead More →

Reading Time: < 1 minuteஉலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5 வருடங்களில் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கலந்துறையாடுவதற்காகவே குறித்த குழுவினர் வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த குறிவினர் நேற்று கொழும்பு – மாளிகாவத்தை சுகாதாரப் பிரிவுக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில் சுகாதார நிபுணர்களுடன் பொருளாதார நிபுணர்களும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பை பலப்படுத்த உலக வங்கி 150 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. உலக வங்கியின் நிறைவேற்று சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteதபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ( 08) மாலை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளது. நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்யும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்Read More →

Reading Time: < 1 minuteசீன தொழிற்துறை முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஷென் ஹொங் தெரிவித்துள்ளார். யாழ் மக்களுக்காக சீன உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நான் வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ளேன். சீன பௌத்த மக்களால் 5000 உணவு பொதிகளை வடக்கு மாகாண மக்களுக்குRead More →

Reading Time: < 1 minuteவடமாகாண மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று பயணித்திருந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும் அதற்கு தீர்வு காணும் வகையில் சீனா அரசாங்கம் கடந்த காலத்திலும், தற்காலத்திலும் செயற்படுவதுடன், எதிர்காலத்திலும் அதற்காக செயற்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சீனாRead More →

Reading Time: < 1 minuteநாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளை, அரசாங்க அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டியது அவசியமெனவும், நாட்டை பின்நோக்கி கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்றுRead More →

Reading Time: < 1 minuteமூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது யாழில் நடைபெற்ற புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக கண்காட்சியை பார்வையிட்ட அவர் அதன் பின்னர் யாழ். நூலகம் மற்றும் நல்லூர் ஆலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். அத்துடன் இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) யாழ்ப்பாண கிளையின் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர்Read More →