Reading Time: < 1 minuteரயில் இருக்கைகளை முன்பதிவு செய்வதில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு ரயில்வே திணைக்களம் புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி RDMNS.LK போன் அப்ளிகேஷன் பல புதிய அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இருக்கை முன்பதிவு ரயில்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் மிக எளிதாக தெரிந்துகொள்ளும் வகையிலும், ரயில் பெட்டிகளுக்குள் சென்று பார்க்கும் திறன், இருக்கை முன்பதிவு கட்டணம், ரயில் பெட்டிகளின் புகைப்படங்கள், இருக்கை வகைகள், இருக்கை எண்கள், இருக்கைRead More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கும் சீன எக்சிம் வங்கிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் நல்லதொரு படியென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அனைத்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களிடமிருந்தும் நிதி உத்தரவாதங்களைப் பெற்றவுடன், ஐ.எம்.எப். இன் மீளாய்வு இடம்பெறும் என சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் கூறியுள்ளார்.Read More →

Reading Time: < 1 minute1990ம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவரால் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட தமிழீழ தேசிய கொடியை கடந்த 3 ஆண்டுகளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நவம்பர் 21ஐ தமிழீழ தேசிய கொடிநாளாக கொண்டாடிவருகின்றது. இன்று Nov 21, 2023 கனடா பிராம்ப்டன் நகரசபை தமிழீழ தேசிய கொடிநாளைஅங்கீகரித்து நகரசபை கொடிக்கம்பத்தில் தமிழீழ தேசியக்கொடி நகரபிதா பற்றிக் பிரவுன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது. இந்நிகழ்வை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களும் பொதுமக்களும் ஏற்ப்பாடு செய்திருந்தனர். தமிழை பிரதிநிதித்துவப்படுத்தRead More →

Reading Time: < 1 minuteதமிழ்தேசிய கொடிதினம் மரணிக்காத தமிழர்களின் உணர்வு சுயநிர்ணய உரிமை சுதந்திரம் ஆகியவற்றிற்கான போராட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றது என கனடா பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கொடி தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாரு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்தேசிய கொடி தின அறிக்கைதமிழ்தேசிய கொடி தினம் சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றிற்கான தொடரும் போராட்டம் பாரம்பரியம் மீளுந்தன்மைRead More →

Reading Time: < 1 minuteஉலகின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 110 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தின்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 உரிமையுடைய எரிபொருள் நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவவுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் நீண்ட கால ஒப்பந்தத்தின்படி ஷெல் தயாரிப்புகள் இலங்கையில் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும்Read More →

Reading Time: < 1 minuteபசுபிக் வேர்ல்ட் என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 1691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்களுடன் எகிப்தில் இருந்து வருகை தந்துள்ளது. இங்கு ஜப்பானிய மற்றும் சீன பயணிகள் அதிகம் இருப்பதால் அவர்கள் கொழும்பு, காலி மற்றும் கண்டிக்கு செல்ல உள்ளனர். பனாமா நாட்டின் கொடியுடன் வந்த பசுபிக் வேர்ல்ட் கப்பல் இன்று இரவு மலேசியா நோக்கி புறப்படும்Read More →

Reading Time: < 1 minuteCelebrity Edge’ எனும் அதிசொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தியாவின் கொச்சியில் இருந்து 2,780 பயணிகளுடன் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1,273 பணியாளர்கள் இந்த கப்பலில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. 306 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் 15 தளங்கள் மற்றும் நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. நவம்பர் 13 ஆம் திகதி டுபாயில் இருந்து புறப்பட்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் குடியேற்றத்துடன் அதிகரிக்கும் சனத்தொகை காரணமாக புதிதாக செல்வோர் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக இலங்கையில் உள்ளவர்கள் கனடா, பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் குடியேறுவதற்கு முயற்சி செய்துவருகின்றனர். எனினும் மேற்குலக நாடுகளில் உள்ளவர்கள், தமது வாழ்க்கை இயந்திரத்தை போன்றது என கூறினாலும் பலர் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. அண்மைய நாட்களாக கனடாவிற்கு செல்வதில் தமிழர் தாயகம் மாத்திரமல்லாமல் இலங்கை முழுவதும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் இருந்து ஒரு தொகை குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொள்கலன் மீது சந்தேகத்தின் பேரில் சுங்க வருவாய் கண்காணிப்புப் பிரிவினர் இதனைக் கைப்பற்றியிருந்தனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அங்கு 6 கிலோ குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்தRead More →