Reading Time: < 1 minuteஇலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய இருநாடுகளுக்கும் இடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட விமான சேவைகள் அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேநேரம் இலங்கையின் சுதந்திரதின நிகழ்விற்கு கௌரவ அதிதியாகRead More →

Reading Time: < 1 minuteஇந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த திகதியில் சேவைகளை மீண்டும் தொடங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால் பயணிகள் படகு சேவையைத் தொடங்குவதற்கான ஆரம்ப திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 20Read More →

Reading Time: < 1 minuteசிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நிலத்திலும் புலம்பெயர் தேசத்திலும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை ஒன்றிணைக்கும் காலப் பணியை அவர் ஆற்ற வேண்டும் என்றும் செயலூக்கமான நடவடிக்கை வாயிலாவே ஈழத் தமிழ் மக்களின்Read More →

Reading Time: < 1 minuteசர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பின்னரே நாட்டில் மூன்றாம் தவணையை வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். வர்த்தகர்களிடம் இருந்தும் வட் வரியை அறவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல் தமது சொந்த இலாபமாக மாற்ற சிலர் செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்கRead More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை, வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் , அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. மேலும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி செய்யும் என தெரிவித்த உயர்ஸ்தானிகர், விசேடமாக வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தமைRead More →

Reading Time: < 1 minute40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சமடைந்து அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கையின் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் இந்த கடவுச்சீட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட அசாதாரண யுத்த சூழ்நிலைகளின்போது தமிழகத்தில் தஞ்சமடைந்த வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறுRead More →

Reading Time: < 1 minuteநாட்டை கட்டியெழுப்ப தற்போதைய பொருளாதார கொள்கைகளை தொடர்ச்சியாக பின்பற்றுவது அவசியமாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று வடக்கிற்கு சென்று, வடமாகாண ஆளுநரை சந்தித்தபோதே, இதனைக் குறிப்பிட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, சிரேஷ்ட பிரதம அதிகாரி தலைமையில் நிரந்தர வதிவிட பிரதிநிதி, சிரேஷ்ட பொருளியலாளர், சிரேஷ்ட நிதித்துறைசார் நிபுணர், பொருளியலாளர், உள்ளூர் பொருளியலாளர் உள்ளிட்டRead More →

Reading Time: 3 minutes2009 இனவழிப்பு யுத்தத்திற்குப் பின்னரான காலபகுதியில் ரொறொன்ரோவுக்குச் சென்றிருந்த போது, எனது உறவினர் ஒருவரது விட்டில் தெரிந்தவர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அப்போதைய அரசியல் நிலவரம் பற்றி என்னுடன் பேசவிரும்பினார். முன்னர் தமிழ்த் தேசியத் தளத்தில் மிகவும் தீவிரமாகச் செயற்பட்ட அவர் இப்போது விரக்தியடைந்திருப்பது அவரது பேச்சில் தெரிந்தது. எமக்கிடையிலான உரையாடலின்போது, அவர் “வன்னியில் உள்ளவர்களுக்கு படித்தவர்களைப் பிடிக்காது” எனக் கூறினார். விடுதலைப் புலிகளின் தலைமையையே வன்னியில் உள்ளவர்கள்Read More →

Reading Time: < 1 minuteவட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றையதினம் (10.01.2024) இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போது, கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில் வட மாகாண ஆளுநர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். நாட்டில் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என ஆளுநர்Read More →