Reading Time: < 1 minuteயாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபல பாடகர் ஹரிகரன் இன்று யாழை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் யாழ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஹரிகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இத்திட்டத்தின் படி, மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாட்களில் சுற்றிவரத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோடை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இது குறித்து குறித்த இளைஞர்கள் கருத்துத் தெரிவிக்கையில்” நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறையானது வீழ்ச்சி அடைந்துள்ளதால்Read More →

Reading Time: < 1 minuteஇரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையும் தாய்லாந்தும் விசா இல்லாத பயணத்தை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தகத்தில் கையெழுத்திட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். பரஸ்பர அடிப்படையில் இலவச வீசா பயண ஏற்பாட்டிற்கான உடன்படிக்கையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க தாம் இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் முக்கிய அங்கத்துவ நாடான சிங்கப்பூருடன்Read More →

Reading Time: < 1 minuteபெப்ரவரி 4, 2024 ஸ்ரீலங்கா சுதந்திரதினமன்று அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்மீது ஸ்ரீலங்கா காவல்துறை மேற்கொண்டுள்ள அராஜகமான தாக்குதல் ஸ்ரீலங்கா அரசின் கோரமுகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.  புலம்பெயர்தேசமாக கண்டனம்  ஸ்ரீலங்காவின் சுதந்திரதினத்தை புறக்கணிக்கும் விதமாகவும் அந் நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் அமைதி வழியில் பேரணி சென்ற அரசியல் தலைவர்கள், மாணவர்கள், மக்கள்மீது மிகவும் கொடூரமான முறையில் ஸ்ரீலங்கா காவல்துறையினர் தாக்குதல் நடாத்தியுள்ளமை கண்டு புலம்பெயர் தேசமாக கடும் கண்டங்களை வெளியிடுகின்றோம்.  ஸ்ரீலங்கா அரசு ஒரு ஜனநாயக அரசென்றால், ஸ்ரீலங்கா நாடு ஒரு ஜனநாயக நாடென்றால் இப்படியான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிராது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்மீது கண்ணீர் குண்டு பிரயோகம் மேற்கொண்டு, நீர்தாரை தாக்குதலையும் தொடுத்திருந்ததுடன், அவர்கள்மீது கடுமையான தாக்குதல்களையும் ஸ்ரீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.  மக்கள் பிரதிநிதிகள்மீதும் அராஜகம்  இதேவேளை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளன. அத்துடன் மதிப்புக்குரியவர்களானபாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர்மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. மக்கள்மீதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீதும் தாக்கி, தனது கோர முகத்தை ஸ்ரீலங்கா வெளிப்படுத்தியுள்ளது.  ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தின்போது தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதையும் அவர்கள்மீது அடக்குமுறையும் ஒடுக்குமுறையையும் மேற்கொண்டதன் வாயிலாகவும் இந் நாளை கரிநாள் ஆக்கியுள்ளது ஸ்ரீலங்கா அரசு. இதனை பன்னாட்டு சமூகம் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி குறித்தும் சிந்திக்க வேண்டும்.  பொருளாதாரத்தடை வேண்டும்  இதேவேளை, ஸ்ரீலங்கா காவல்துறையினர் பெருமளவில் கிளிநொச்சியில் குவிக்கப்பட்டு, பாரிய அடக்குமுறை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுவே பாரிய பொருளாதார நெருக்கடியில் உள்ள ஸ்ரீலங்கா தமிழர்களை ஒடுக்குவதில் பாரிய மனித, பொருளாதார செலவுகளை செய்வதற்கும் இத்தாக்குதல் சிறந்த எடுத்துக்காட்டு.  எனவே ஸ்ரீலங்காவுக்கு பொருளாதார நன்மைகள் செய்யும் சர்வதேச நிறுவனங்களும் அரசுகளும் இதனைக் கருத்தில் கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நிற்கின்றேன்.  தமிழரின் தலைவிதி தமிழர் கையில். நிமால் விநாயகமூர்த்திநாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர், கனடாRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் 76 வது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வு, ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், இன்று (04.02.24) காலி முகத்திடலில் நடைபெற்றது. நிகழ்வை ஆரம்பிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பிரதான நிகழ்வுகளுக்குப் பின்னர், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதம் தமிழ்மொழியில் இசைக்கப்பட்டமை சிறப்பு அம்சமாகும். தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை மற்றும் இசைக்கப்படாமை தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறான விமர்சனங்கள்Read More →

Reading Time: < 1 minuteகடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 253 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி பெரும்பாலோர் இந்தியர்கள் எனவும், அந்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 399 எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்யாவில் இருந்து 31 ஆயிரத்து 159 பேரும் பிரித்தானியாவில் இருந்து 16 ஆயிரத்து 665 பேரும், நாட்டிற்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minuteராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு இன்று நண்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து, சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளைRead More →

Reading Time: < 1 minuteநிதித்துறை பாதுகாப்பு வலையை வலுப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியளிப்பதற்காக உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடம் (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தில் கவனம் செலுத்தி, இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பு வலையின் நிதி மற்றும் நிறுவனத் திறனை வலுப்படுத்த இந்தத் தொகை வழங்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் நிதித்துறைக்குRead More →

Reading Time: < 1 minuteகொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது இன்நிலையில் இந்த வருடத்தின் முதல் 29 நாட்களில் 330-இற்கும் அதிகமான கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மேலும் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான முனையங்களில் மாத்திரம் கடந்த 29 நாட்களில் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை, கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 60.9 வீதத்தால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.Read More →