Reading Time: < 1 minuteநாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட வீசா நீடிப்புகளை இரத்து செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடா செல்ல ஆசைப்படும் யாழ்ப்பாண மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ். மக்களை கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் யாழிலிருந்து 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ள பொலிஸார்,Read More →

Reading Time: < 1 minuteநாட்டிலுள்ள கடலோரப்பகுதிகளில் பொழுதுபோக்கு நிலையங்களை உருவாக்கி இரவு நேரப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதற்கமைய , ஒரு நாட்டின் பொருளாதாரம் அதிகரிப்பதற்கு இரவு நேர பொழுதுபோக்கு நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கானRead More →

Reading Time: < 1 minuteவிவசாய தொழிநுட்பப் பரிமாற்றம் தொடர்பில் இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது மாநாடு கொழும்பில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்படி விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வியட்நாம் நாட்டின் விவசாயத்துறை உட்பட கிராம அபிவிருத்தி அமைச்சர் மின்மொஹான் ஆகியோர் இன்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். விவசாய தொழினுட்ப தொடர்பிலான ஆய்வுகள்Read More →

Reading Time: < 1 minuteசீன சுற்றுலாப் பயணிகளுடன் 50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சில கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலும், மேலும் சில கப்பல்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் நங்கூரமிடவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்தார். இதேவேளை இவ்வருடம் பெப்ரவரி 16ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கைRead More →

Reading Time: < 1 minuteஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அந்நாட்டுக்கு வருகை தந்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர்,இங்கு இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteலைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்புடன் இணைந்து முதலுதவிப் பயிற்சிகளை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் நடத்த தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சங்கம் மற்றும் பிரிகேட் உடன் இணைந்து, முதலுதவிப் பயிற்சிகளை கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் நடத்தியது. லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்புடன் இணைந்து முதலுதவிப் பயிற்சிகளை இலங்கையின்Read More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இவ்வாறான நிலையில், கனேடியத் தூதரக அதிகாரிகள் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரியை நேற்றுச் சந்தித்து அது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். யாழில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறிப் பெறுமதிப்பிலான பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கனடா அனுப்புவதாகக் கூறியே பெரும்பாலான பண மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பண மோசடிகள் தொடர்பான விசாரணைகள்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இருநாடுகளுக்கிடையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அணுகக்கூடிய இயலுமையை அதிகமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், மேம்படுத்தப்பட்ட தொடர்புகள் மூலம் கலாச்சார பரிமாற்றங்கள், கல்வி, சமய, கலாச்சார செயற்பாடுகள், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களை ஊக்குவிப்பதற்கும் இதன் ஊடாக இயலுமை உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக குறைந்த செலவிலான சுற்றுலா மற்றும் போக்குவரத்துக் கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கமையRead More →