Reading Time: 2 minutesTGTE இன் தலைமை தேர்தல் ஆணையாளரின் நான்காவது பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு! நான்காவது பாராளுமன்ற தேர்தல் பற்றிய விவரங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (நா.க.த.அ) தலைமை தேர்தல் ஆணையாளர் திரு. ரஞ்சன் மனோரஞ்சன் அறிவித்துள்ளார். நான்காவது பாராளுமன்றத்தேர்தல் மூலம் 12 நாடுகளில் இருந்து 115 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். நா.க.த.அ அதன் முதல் தேர்தலை மே 2010 இல் நடத்தியது, அதன் முதல் பாராளுமன்றம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முதலாம் ஆண்டுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் 06 இலங்கையர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான இலங்கையை சேர்ந்த இளைஞன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது நீதிமன்றில் , சந்தேக நபர் மிகக் குறைவாகவே பேசியுள்ளதாகவும், நீதிமன்றத்தில் மீண்டும் அமர்வதற்கு முன்பு தனது பெயரையும் பிறந்த இடத்தையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். கனேடிய அதிகாரிகள் அதிர்ச்சிஇந்நிலையில், எதிர்வரும் 14ம் திகதி சந்தேக நபர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சந்தேகநபர் மீது கொலைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவாவில் இலங்கைர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இரங்கல் வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இந்த இரங்கலை வெளியிட்டுள்ளார். படுமோசமான ஓர் வன்முறைச் செயல் எனவும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு சமூகம் உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இவ்வாறான நெருக்கடியான தருணங்களில் கனடியர்கள்Read More →

Reading Time: 2 minutesUPDATED: உயிரிழந்தவர்களில் 5 பேர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். கணவன் தனுஷ்கா விக்கிரமசிங்க (மதுரங்கா) உயிர் தப்பியிருந்தும் கை விரல்கள் மற்றும் ஒரு கண்ணில் காயங்களுண்டாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகிறது.  குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரக்கூன் முபியயான்செல (40-year-old Amarakoonmubiayansela Ge Gamini Amarakoon) (காமினி) என்பவரும் இச்சமபவத்தின்போது கத்திக்குத்துக்கு உள்ளாகி மரணமடைந்திருக்கிறார். 19 வயதான ஃபெப்ரியோ டி-சோய்சாRead More →

Reading Time: < 1 minuteஅரசாங்கம் பல்வேறு முக்கியமான வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்தியா, சீனா மற்றும் பல்வேறு மேற்கத்தைய நாடுகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பொருளாதார நெருக்கடியால், கடந்த காலத்தில் எவ்விதமான அபிவிருத்தி திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.Read More →

Reading Time: < 1 minuteதேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் ஆறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி திரு. Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர் திருமதி R. Demet Sekercioglu, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர் திரு. Tareq M.D. Ariful Islam, இந்தோனேசிய குடியரசின் தூதுவர் திருமதி DewiRead More →

Reading Time: < 1 minuteஇந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இன்று இலங்கை பிரஜா உரிமை வழங்கி வைக்கப்பட்டது. 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்களுக்கு இந்தியாவில் குழந்தைகள் பிறந்த நிலையில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தனர். இந்நிலையில் நாட்டிற்கு வந்த இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜா உரிமை பெறுவதில் சிக்கல் நிலமை காணப்பட்டிருந்தது. இதனை அடுத்து குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின்Read More →

Reading Time: < 1 minuteசர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 7ஆம் திகதி விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்காக நாட்டுக்கு வருகைத் தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுமார் 2 வாரங்களில் இரண்டாவது மதிப்பாய்வை முன்னெடுக்கவுள்ளனர். கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் நிறைவு செய்யப்பட்டுள்ள ஏனைய வாக்குறுதிகள்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி இந்த ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடகசெயலாளர் சஞ்ஜய் நல்லப்பெரும தெரிவித்துள்ளார் இந்த விடயம் தொடர்பாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் முதற்கட்டம் கொழும்பில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுRead More →