Reading Time: < 1 minuteநவம்பர் 1 முதல் 19ஆம் திகதிவரை ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் (Gurpatwant Singh Pannun) எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட நாள்களில் ஏர் இந்தியா விமானம் ஒன்றின்மீது தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியாகக் கூறியிருப்பதாவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. பல தடவைகள் மிரட்டல்நாற்பது ஆண்டுகளுக்குமுன் இதே காலகட்டத்தில்தான் சீக்கிய இனப் படுகொலை நிகழ்ந்தது.Read More →

Ripudaman Singh Malik

Reading Time: < 1 minute1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானம் குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் இரு சந்தேக நபர்கள் கனடா நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். திங்களன்று (21) நியூ வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள நீதிமன்றத்தில், ஃபாக்ஸ் மற்றும் லோபஸ் இருவரும் இரண்டாம் நிலை கொலைக்கான குறைந்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 1985, ஜூன் 23 இல் கனடாவிலிருந்து லண்டன் வழியாக இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த ஏர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் தலைவர் நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இந்திய தூதரான சஞ்சய் வர்மா கனடா செய்தி தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்திய நிலையில் இரு நாடுகளின் உறவில் விரிசல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் அமைப்பபின் தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டிருந்தார். இதனால் இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த பிரச்சனை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பூதகரமாகத் தொடங்கியுள்ளது. இதேவேளை, நிஜ்ஜார் கொலையிலும், கனடாவில் நடக்கும் குற்றச்செயல்கள் பலவற்றிலும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக கனடா புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதனால் கோபமடைந்த இந்தியாRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகங்களை மூடுமாறு சீக்கிய குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வான்கூவார் மற்றும் டொரன்டோவில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகங்களை மூடுமாறு பிரிட்டிஷ் கொலம்பிய சீக்கிய ஆலய பிரதிநிதிகள் கோரியுள்ளனர். கடந்த ஆண்டு இந்த ஆலயத்தின் பிரதம குரு ஹார்திப் சிங் நிஜார் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துடன் இந்தியாவிற்கு நேரடி தொடர்பு உண்டு என குறித்த குழுவும் கனடிய அரசாங்கமும் குற்றம் சுமத்தி இருந்தது.Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் சிக்காகோ மாநிலத்திற்கு பயணம் செய்த இந்தியாவின் எயார் இந்தியா விமானம் கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. புது டில்லியிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சிகாகோவுக்கு புறப்பட்டுச் சென்ற போயிங் ரக ‘எயார் இந்தியா 127’ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் கனடாவின் இகுவாலிட் விமான நிலையத்துக்கு திசை திருப்பப்பட்டுள்ளது. பின்னர், இகுவாலிட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து சோதனைRead More →

Reading Time: < 1 minuteஇராஜதந்திர முறுகலின் மற்றுமொரு நகர்வாக, இந்தியாவின் உயர்ஸ்தானிகர் உட்பட்ட ஆறு இராஜதந்திரிகளை கனடா (Canada), இன்று(14) தமது நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது. இந்தியா, கனடாவுக்கான தமது உயர்ஸ்தானிகரை கனடாவில் இருந்து திருப்பியழைப்பதாக அறிவித்த நிலையிலேயே கனடாவின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர்கள் செயற்பட்டமைக்கான ஆதாரங்களை பொலிஸார் சேகரித்த பின்னர் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், இந்தியRead More →

Reading Time: < 1 minuteஇந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், கனடாவில் சாலை விபத்தொன்றில் பலியாகியுள்ளார்கள். இந்த விபத்து எதனால் நேர்ந்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியாத நிலையில், விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் Mohali என்னுமிடத்தையும், மற்றவர் Bathinda என்னும் இடத்தையும் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவருடைய பெயர் Harshanur Singh (20). அவர் 2023ஆம் ஆண்டு டிசம்பரில்தான் கல்வி கற்பதற்காக கனடாவுக்குச் சென்றுள்ளார். மிக நன்றாக படிக்கக்கூடியவரான Harshanurஇன் இழப்பு அவரதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு வேலைகனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர் வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வெளியிட்டது. சமூகவலைத்தளங்களில் வெளியான பதிவுஇதையடுத்து 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த வேலைக்காக உணவு விடுதி முன்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துரையாடியுள்ளார். இதன்படி, காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளுக்காக 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை தொடருந்து திணைக்களத்துக்கு 22 டீசல் இயந்திரங்களைப் பரிசாக வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிசக்தி, வலுசக்தி, சுகாதாரம்,Read More →