Reading Time: < 1 minuteஇந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் குறித்து நாடாளுமன்றமும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் முன்மொழிவை வழங்கும் என இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் புதுடில்லி விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தியிருந்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான படகு சேவையை தொடங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்தRead More →

Reading Time: < 1 minuteஇந்தியாவிலிருந்து சரவதேச மாணவராக கனடா வந்த இளைஞர் ஒருவரை, ஏமாற்றி கொலை செய்துள்ளது ஒரு கூட்டம். கல்வி பயில்வதற்காக கனடா வந்த இந்தியரான குர்விந்தர் நாத் (Gurvinder Nath, 24), விடுமுறையில் பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்துவந்துள்ளார். இம்மாதம், அதாவது ஜூலை 9ஆம் திகதி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிலர் பீட்சா ஆர்டர் செய்ய, அங்கு பீட்சா டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார் குர்விந்தர். ஆனால், உண்மையில் குர்விந்தரின் காரைRead More →

Reading Time: < 1 minuteஇந்தியர்கள் அதிகம் பயணிக்க விரும்பும் நாடுகளாக ஆஸ்திரேலியா, கனடாவும் மாறியுள்ளது. இந்நிலையில் இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் நாடு என்ற பெருமையை அமெரிக்கா இழந்துவிட்டது. ஒரு நாட்டின் குடிமகன் விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதை வைத்தே அந்த நாட்டின் கடவுச்சீட்டு எவ்வளவு மதிப்பு மிக்கது என்று கணக்கிடப்படுகிறது. கடவுச்சீட்டு தரவரிசைஇத்தகைய மதிப்பு மிக்க கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் பட்டியலை தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில்Read More →

Reading Time: < 1 minuteஇந்தியா மற்றும் இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒத்துழைப்பின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட திட்டங்களின் பொருளாதார அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், சூரிய சக்தி திட்டத்திற்கான எரிசக்தி அனுமதி, IPL மற்றும் லங்கா பேRead More →

Reading Time: < 1 minuteமதுரை மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மற்றும் கொழும்பு இடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம்Read More →

Reading Time: < 1 minuteசூப்பர் நடிகர் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வழியாக வேறு நாட்டிற்கு செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் பல மணி நேரம் செலவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கை வழியாகமாலைதீவிற்குச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஈழத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13ஆம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பிரித்தானியாவுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின்போது இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவும், இலங்கையும் மிகத் தொன்மையான நாகரிகத் தொடர்பு உடையவை எனவும் 1987ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பிறகுRead More →

Reading Time: < 1 minuteதங்கள் ஒரே மகனை கனடாவுக்கு கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைத்த பெற்றோருக்கு சொல்லொணா துயரத்தை ஏற்படுத்தும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள Anand என்ற இடத்தைச் சேர்ந்த விஷய் பட்டேல் (Vishay Patel) என்னும் இளைஞனை கனடாவில் கல்வி கற்பதற்காக அவனுடைய பெற்றோர் அனுப்பிவைத்துள்ளார்கள். மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு முடித்து, பட்டம் பெறவேண்டிய நேரத்தில், தற்கொலை செய்துகொண்டுள்ளார் விஷய் பட்டேல். கடந்த வெள்ளிக்கிழமையன்று, அதாவது, ஜூன் மாதம்Read More →

Reading Time: < 1 minuteஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கும்போது, ஏனைய நாடுகள் அமெரிக்காவுடன் கொண்டுள்ள உறவில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்பதால் இவ்வாறு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பை ஏற்றுRead More →

Reading Time: < 1 minuteகாலிஸ்தான் ஆதரவாளரும் இந்திய அரசால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீக்கிய மக்கள் அதிகமாக குடியிருக்கும் Surrey நகரிலேயே குருத்வாரா ஒன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சீக்கிய தீவிரவாதம் தொடர்பான குறைந்தது நான்கு NIA வழக்குகளில் நிஜ்ஜார் தேடப்பட்டு வந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அவர் தொடர்பிலான தகவல் அளிப்போர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வெகுமதியும் NIARead More →