Reading Time: < 1 minute கனடாவில் கஞ்சா வைத்திருந்தமைக்காக குற்றப்பதிவுகளை எதிர்கொண்டவர்கள், தற்போது அதற்கான பொது மன்னிப்பினை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியுமென, மத்திய நீதியமைச்சு அறிவித்துள்ளது. முன்னர் இவ்வாறான சிறிய குற்றப்பதிவுகளுக்கான மன்னிப்பினை பெற, 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதுடன், 631 டொலர்களும் செலுத்தவேண்டும். கனடிய அரசு கொண்டுவந்துள்ள C93 சட்டமூலத்தின் அடிப்படையில், தற்போது, உடனடியாகவும் இலவசமாகவும், கஞ்சா வைத்திருந்தமைக்கான குற்றப்பதிவுகளை அகற்றமுடியும். சுமார் 250,000 கனடியர்கள், கஞ்சா வைத்திருந்தமைக்கான சிறிய குற்றப்பதிவுகளை கொண்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minute தந்தையின் துஸ்பிரயோகங்களில் இருந்து தப்பி துருக்கியில் தலைமறைவாகவுள்ள சவுதி அரேபிய சகோதரிகள் இருவர் கனடாவில் புகலிடம் கோரியுள்ளனர். சவுதி அரேபியாவை சேர்ந்த 22 வயதான துவா மற்றும் 20 வயதான தலால் அல் ஷோவாக்கி ஆகிய இரு சகோதரிகளுமே இவ்வாறு புகலிடம் கோரியுள்ளனர். தங்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கும் தந்தையிடமிருந்து தப்பி வந்ததாக கூறும் இருவரும், தங்களின் விருப்பத்திற்கு எதிராக முதியவர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க தங்களது தந்தைRead More →

Reading Time: < 1 minute விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு விமான ஊழியர்கள் தண்ணீர் தர மறுத்தாக வெளியான செய்தி குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஹமில்ட்டனிலிருந்து லொஸ் ஏஞ்சல்சுக்கு செல்லும் விமானம் ஒன்றில் பயணித்த Wayne Fernandes, தாகமாக இருக்கவே பணிப்பெண் ஒருவரிடம் தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீருக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என விமான ஊழியர்கள் கூற, கட்டணம் செலுத்துவதில்லை என முடிவு செய்திருக்கிறார்Read More →

Reading Time: < 1 minute வெஸ்ட் நைல் வைரஸ்களை பரப்பும் நுளம்பு வகைகள் பிரம்டனில் உலாவுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், இவ்வாறன நுளம்புகள் மற்றும் ஏனைய பூச்சிக் கடிகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு பீல் பிராந்திய சுகாதாரத் துறையினர் அந்தப் பிராந்திய மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். பீல் பிராந்தியத்தில் இவ்வாறான வைரசைக் காவிச்செல்லும் நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டமை இந்த ஆண்டில் இதுவே முதல்முறை என்று நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். MclaughlinRead More →

Reading Time: < 1 minute மார்க்கம் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நால்வர் கொலையுண்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 23 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது நான்கு முதல்தர கொலைக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். Mingay Avenueவுக்கு கிழக்கே, Castlemore Avenueவில் அமைந்துள்ள வீடொன்றில் பலர் காயமடைந்து இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ப்ராஸர் ஆற்றில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் எதிர்நீச்சலிட்டு இனப்பெருக்க பகுதிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் சல்மன் வகை மீன்களை உலங்குவானூர்திகளின் உதவியுடன் மீட்டு வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. கனடாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டபோது, லில்லூயட் நகரின் வடக்குபுறம் உள்ள பாறைகள் உருண்டு ப்ராஸர் ஆற்றில் விழுந்தன. ஆனால் குறித்த ஆறு, அடர்ந்த பகுதியில் இருந்ததால், பாறைகள் உருண்டு விழுந்து நீர்வீழ்ச்சி போல் உருவாகியிருந்தமை தற்போதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில், ‘ஸ்ரார் வார்ஸ்’ விண்கலத்தை போன்ற தலையுடன் கூடிய பழங்கால கடல் உயிரினத்தின் நூற்றுக்கணக்கான புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கனடாவில் உள்ள கூட்டெனே தேசிய பூங்கா பாறைகளில் இந்த அரிய புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்ரோரஸ்ரர் ஃபல்கேற்ரஸ்’ (Cambroraster Falcatus) என்று அழைக்கப்படும் இந்த உயிரினம் இன்றைய ‘ஆர்த்ரோபாட்’ வகை விலங்குகளின் குடும்பத்தை சார்ந்தது என்றும், அவை 506 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ‘கம்ப்ரியன் காலகட்டத்தில்’ வாழ்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள்Read More →