Reading Time: < 1 minute மத்திய ஒன்ராறியோ, முஸ்கோகா பகுதியில் நேற்று முன்தினம் நீர் மிதப்பு விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கனேடிய விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். Upper Raft Lake பகுதியில் கடந்த திங்கட்கிழமை முற்பகல் பத்து மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விமான விபத்து தொடர்பிலான தகவல் அறிந்ததும் இரண்டு தேடி மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அதேவேளை, மேலும்Read More →

Reading Time: < 1 minute அல்பேர்ட்டா சட்டமன்றில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில், மாநில முதல்வருக்கான சம்பளம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பளம் ஆகியன குறைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழு ஏகமனதாக நேற்று மேற்கொண்ட இந்த முடிவின் அடிப்படையில், தேர்தலில் வெற்றிபெற்று தேர்வான சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ஐந்து சதவீதத்தினாலும், முதல்வர் ஜேசன் கெனியின் சம்பளம் மேலும் ஐந்து வீதம் அதிகரித்து பத்து சதவீத்தினாலும் குறைக்கப்படவுள்ளது. கடந்த ஏப்ரல் மாத்தில் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையைப்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ 24 மணிநேரத்தினுள் இரு மடங்காக பரவி, சுமார் 2.5 சதுரக்கிலோமீட்டர் பரப்பளவு வரையில் கொழுந்துவிட்டு எரிந்து வருவதாக அந்த மாநில காட்டுத்தீ முகாமைத்துவத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஒலிவர் பிராந்தியத்தின் வடபகுதியில் கடந்த நான்காம் திகதி ஆரம்பித்த இந்த காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் விமானங்கள், பாரிய உபகரணங்கள் சகிதம் நூற்றுக்கும் அதிகமானோர் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வெப்பத்துடன் கூடிய வானிலையுடன், சரிவான மலைப்பகுதியில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் சுற்றுலா பயணிகள் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ள பொலிஸார், இது மூவரின் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக அமையும் என கூறியுள்ளனர். கில்லாம் (Gillam) அருகே உள்ள நெல்சன் ஆற்றில் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அலுமினிய படகை அடுத்து, தேடுதலில் ஈடுபட்ட பொலிசார், தற்போது கொலை வழக்கிற்குRead More →

Reading Time: < 1 minute கடற்படையில் பணிபுரிவோர் தாய்நாட்டுக்கு திரும்பும்போது அவர்களை துறைமுகத்திற்குச் சென்று வரவேற்பது அவர்களின் குடும்பங்களுக்கு என்றும் சளைக்காத விடயமாகும். அவ்வாறு கடற்படை பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய கடற்படை வீரர் ஒருவர் ’வரவேற்பு நிகழ்ச்சியில்’ தன்னை வரவேற்க வந்த காதலிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். HMCS Toronto என்னும் கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பல் ஹாலிஃபாக்ஸ் துறைமுகத்தை சென்றடைந்த போது, ஆறு மாதங்களுக்குப் பின் திரும்பும் தங்கள் உறவினர்களைRead More →

Reading Time: < 1 minute கடந்த வார இறுதியில் ரொரன்ரோவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் குறித்து நேற்று தகவல் வெளியிட்ட ரொரன்ரோ காவல்துறை தலைமை அதிகாரி மார்க் செளன்டர்ஸ், கடந்த வார இறுதி நாட்கள் வழக்கத்துக்கு மாறான நாட்களாக காணப்பட்டதாகவும், சனிக்கிழமையில் இருந்து 11 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றுள்ள 33 சதவீத சம்பவங்கள் ரொரன்ரோ நகரின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், அனேகமானRead More →

Reading Time: < 1 minute சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியரை பீஜிங்கில் உள்ள கனேடிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளதாக கனேடிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும், எனினும் இந்தச் சந்திப்பு குறித்த மேலதிக விபரங்களை அந்தரங்க இரகசியப் பாதுகாப்பு கருதி வெளியிட முடியாது என்றும், தொடர்ந்தும் அவருக்கான தூதரக உதவிகள் வழங்கப்படும் என்றும் வெளியுறவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த இந்தக் கைதினை சீன அரசின்Read More →