Reading Time: < 1 minuteகியூபெக் நகரில் தனது முன்னாள் மனைவி மீது தீ மூட்டிய ஆண் ஒருவரைக் கைது செய்துள்ள பொலிஸார் அவர்மீது கொலை முயற்சி மற்றும் மோசமான தாக்குதல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். கியூபெக் நகரில், மொன்றியலில் இருந்து கிழக்கே சுமார் 110 கிலோமீடடர் தொலைவில், ட்ரோமின்வில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து, 39 வயதான அந்த ஆணை நேற்று (சனிக்கிழமை) கியூபெக் மாநில பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இதேவேளை தீயினால் எரியுண்டRead More →

Reading Time: < 1 minuteவோன் பகுதியில் ஆண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸாரின் மனிதக் கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று (சனிக்கிழமை) அதிகாலை இரண்டு மணியளவில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் வைத்தியசாலைக்குச் சென்று சேர்ந்த தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பமானதாக பொலிஸார் கூறியுள்ளனர். இன்று அதிகாலை 1:45 அளவில் குறித்த இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகள்Read More →

Reading Time: < 1 minuteஹொங்கொங் செல்லும் கனடியர்களுக்கான பயண எச்சரிக்கை, கனடிய மத்திய அரசினால் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வலுப்பெற்றுவரும் ஜனநாயக ஆதரவு போராட்டங்களை அடுத்து, இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கணிசமான பாதுகாப்பு பிரச்சினைகளும், நிலைமைகள் குறுகிய பொழுதில் அபாயகரமானதாக மாறக்கூடிய சூழலும் ஹொங்கொங்கில் நிலவுவதாக, கனடிய அரசு தெரிவித்துள்ளது. அங்கு ஏற்கனவே உள்ள கனடியர்களும், கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறும், உள்ளூர் ஊடகங்களை கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteவீடற்ற 30 கல்கேரியர்களுக்கு, புதிய வீட்டுத் திட்டத்திற்கு செல்லும் வாய்ப்பினை மிகவிரைவில் கனேடிய அரசாங்கம் வழங்கவுள்ளது. நகரின் வடமேற்கில் அமைக்கப்பட்டு வரும் இந்த வீட்டு திட்டத்திற்கே, இந்த கோடையில் அவர்கள் செல்லவுள்ளனர். 7000 பிளொக்- பவுனஸ் வீதியில் அமைந்துள்ள புதிய வசதிகளை கொண்ட வீடுகள் 5.7 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இந்த வீட்டு திட்ட வேலைகள் விரைவில் நிறைவடையும் என மத்திய மற்றும் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவின் கிழக்கு யோரக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவத்தில், உயிரிழந்தவர் 29 வயதான கெவீன் ரெட்டிக் என பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர். வகுண்டா பிளேஸ் மற்றும் ஓ’கானர் டிரைவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் ரொறன்ரோவை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தின் போது தப்பிச் சென்றவரை அடையாளங்காட்டRead More →

Reading Time: < 1 minuteசாஸ்கடூனில் போதைப் பொருள் கடத்தல் விசாரணை தொடர்பாக, மூவரை போதைப்பொருள் பிரிவினர் கைது செய்துள்ளனர். யுனிவர்சிட்டி டிரைவின் 600 தொகுதிகளில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் வைத்து, 28 வயது இளைஞன் ஒருவரையும், 24 வயது பெண் ஒருவரையும், பொலிஸார் கைது செய்தனர். இதன்போது சிறிய அளவு மீதாம்பேட்டமைன் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும், சந்தேகத்திற்கிடமான வீட்டில் இருந்த 39 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதில், 28 வயதானRead More →

Reading Time: < 1 minuteசாஸ்கடூன்- லாயிட்மின்ஸ்டரில் உள்ள கோல்ட் ஹார்ஸ் சூதாட்ட விடுதியில் அதிக்கூடிய கோல்டன் பணத்தொகையை, இந்த வாரம் ஒரு பெண் வென்றுள்ளார். இந்த வார ஸ்மோக் சிக்னல் அதிஷ்டத்தில், பிரெண்டா லோயிட் என்ற பெண், 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வென்றுள்ளார். கோல்ட் ஹார்ஸ் சூதாட்ட விடுதியில், ஒருவர் மிகப் பெரிய பரிசை வென்ற முதல் சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகின்றது. ‘நான் இவ்வளவு மிகப் பெரிய பணப் பரிசை வெல்வேன் என்றுRead More →

Reading Time: < 1 minuteபுதிய மருந்து விலைகளை மதிப்பிடும் விதத்தில் மத்திய அரசு, பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. இந்த மாற்றமானது, எதிர்வரும் 10 ஆண்டுகளில் கனேடியர்களின் பில்லியன்களை மிச்சப்படுத்தும் என்று மத்திய அரசு நம்புகின்றது. 1987ஆம் ஆண்டில் முதன்முதலில் அமைக்கப்பட்ட காப்புரிமை பெற்ற மருத்துவ விலைகள் மறுஆய்வு செய்த மாற்றங்களை சபையில் மத்திய அரசு, வெளியிட்டது. இதில், ‘அதிகப்படியான விலைகள்’ என்பதை எதிர்த்து அரசாங்கம் இந்த மாற்றங்களை வெளியிட்டது. இதற்கமைய எதிர்வரும் ஆண்டுRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் அண்மைக் காலமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருவதாக, ரொறன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சௌன்டர்ஸ், தெரிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் ரொறன்ரோவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், 11 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. அவற்றுள்ள 33 சதவீத சம்பவங்கள் ரொறன்ரோ நகரின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், அனேகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரவு வேளைகளிலேயேRead More →