Reading Time: < 1 minuteகனடாவில் சாத்தான் என கூறி பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி கொலை செய்த நபரை நீதிமன்றம் விடுவிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த முடிவுக்கு உயிரிழந்த பெண்மணியின் குடும்பம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கனடாவின் பீட்டர்பரோ பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. பீட்டர்பரோ பகுதியைச் சேர்ந்த சிண்டி டோர்பார் என்பவரின் குடியிருப்பு ஒன்றில் 47 வயதான ஜோன் லாய் என்பவர் வசித்துRead More →

Reading Time: < 1 minuteகனடா மற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இரத்த அழுத்தத்தை தெரிந்துகொள்வதற்காகவே புதிய செல்ஃபி கமரா ஒன்றை வடிவமைத்துள்ளனர். ட்ரான்ஸ்டெர்மல் ஒப்டிகல் இமேஜிங் பல்கலைக் கழக உளவியலாளர் காங் லீ மற்றும் ஆய்வாளர் போல் ஜெங் ஆகிய இருவரும் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர். இந்த புதிய தொழில்நுட்பமானது, நமது முகத்தோலில் இருந்து கசியும் ஒளியை ஸ்மார்ட் கைத் தொலைபேசிகளில் இருக்கும் ஒப்டிகல் சென்சார்கள் உள்வாங்கி, அதன் மூலம் நம் தோலின் கீழ்Read More →

Reading Time: < 1 minuteநேற்று இரவு நெடுஞ்சாலை 401இல், மிசிசாகா பகுதியில் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 401இன் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில், டிக்சி வீதிப் பகுதியில் சரக்கு ஊர்தி ஒன்றும் மேலும் இரண்டு வாகனங்களும் மோதுண்டதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையின் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார். நெடுஞ்சாலையில் கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டினை இழந்து சரக்குRead More →

Reading Time: < 1 minuteநேற்றுப் பிற்பகல் வேளையில் நோர்த் யோர்க் பகுதியில் வைத்து ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானமை குறித்து ரொரன்ரோ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Sheppard Avenue Westற்கு தெற்கே, Yonge Street மற்றும் Florence Avenue பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அங்கு சென்றதாகவும், சம்பவ இடத்தில் வாகனம் ஒன்று பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும் ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளைRead More →

Reading Time: < 1 minuteநேற்று காலை Danforthஇன் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாரதூரமான காயங்களுக்கு உள்ளான 16 வயதுச் சிறுவன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Donlands Avenue மற்றும் Strathmore Boulevard பகுதியில் அமைந்துள்ள பாடசாலை வாகன நிறுத்துமிடத்தில், நேற்று அதிகாலை 12:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அங்கு விரைந்த போது, அங்கே குறித்த அந்தச் சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் சுற்றுலாத்தளம் ஒன்றில் கம்பிகள் அறுந்ததில் 30 கேபிள் கார்கள் பல அடி உயரத்தில் இருந்து வீழ்ந்து சேதமடைந்துள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரின் ஹொவே சவுண்ட் பகுதிக்கு அருகே, The Sea to Sky Gondola என்ற கேபிள் கார் மூலம் அப்பகுதியை சுற்றிப்பார்க்கும் சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது. அது சுமார் மூவாயிரம் அடி உயரத்தில், கேபிள் கார்கள் கடற்பரப்பின் மேல் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: 2 minutesஒரே நாளில் சகோதரனையும் இழந்து, தந்தையின் அரவணைப்பையும் இழந்த இந்திய வம்சாவளி பெண்ணொருவர் தனது சிறுவயதில் எடுத்த முடிவால் இன்று கனடாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். 1970 களில் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த நீனா என்ற குறித்த பெண்ணின் குடும்பம், ரொறென்ரோவில் வாழ்ந்து வந்தது. வெளியுலகுக்கு மகிழ்ச்சியாக வாழ்வது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஓயாத பிரச்சினை நீடித்து வந்தது. 22 ஆண்டு கால போராட்டRead More →

Reading Time: < 1 minuteரொரன்ரோ Willowdale பகுதியில் வாகனத்தினால் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை முற்பகல் பத்து மணியளவில், டோறிஸ் அவனியூவுக்கு மேற்கே, ஃபின்ச் அவனியூ ஈஸ்டில் தெற்கு பக்கமாக குறித்த அந்தப் பெண் நடந்து சென்று கொண்டிருந்ததாகவும், அநத வேளையில் கிழக்கு நோக்கப் பயணித்த வானம் ஒன்று அங்குள்ள அறிவிப்புப் பலகைக் கம்பத்துடன் மோதி, குறித்த இந்தப் பெண் மீது மோதி பின்னர் அங்கிருந்த மின்விளக்கு கம்பம்Read More →

Reading Time: < 1 minuteநேற்றுக் காலை ஈட்டோபிக்கோ வீதியொன்றில் வைத்து துப்பாக்கி ஒன்றினைக் கைப்பற்றிய காவல்துறையினர், இந்தச் சம்பவம் தொடர்பில் நான்கு ஆண்களைக் கைது செய்துள்ளனர். Park Lawn வீதி மற்றும் The Queensway பகுதியில், Burma Driveவில் வாகனம் ஒன்றின் சாரதி விதிமுறைகளுக்கு முரணாக வாகத்தைச் செலுத்திச் செல்வதாக நேற்று சனிக்கிழமை காலை 7:10 அளவில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். அங்குள்ள வீடு ஒன்றின் முகப்பில் வாகனம் ஒன்றின்Read More →