Reading Time: < 1 minute ரொரன்ரொ Bloor Street மற்றும் Park வீதிப் பகுதியில் தனது கணவருடன் நடந்து சென்றுகொண்டிருந்த 86 வயது மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, அந்த வழியே வந்த வழிப்பறித் திருடன் ஒருவரால் அறுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், குறித்த அந்தச் சம்பவம் தொடர்பிலான காண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரத்தினை வெளியிட்டுள்ள காவல்துறையினர், திருடிய நபரை தேடிவருவதாகத் தெரிவித்துள்ளனர். Bloor Street East ற்கு வடக்கே, Asquith Avenueவில் உள்ள பூங்கா வீதியில்,Read More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவின் Orillia பகுதியில், உள்ளூர் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து காணப்பட்டதனை அடுத்து, குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அங்குள்ள நகரக் குடியிருப்பு வீடு ஒன்றுக்கு வெளியே பெண் ஒருவர் காயமுற்ற நிலையில் காணப்படுவதாக வெள்ளிக்கிழமை காலை வேளையில் கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அங்கு விரைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் உயிராபத்தான நிலையில் காணப்பட்ட பெண், உடனடியாகவேRead More →

Reading Time: < 1 minute நோர்த் யோர்க் பூங்காவில் நஞ்சூட்டப்பட்ட நிலக்கடலைப் பாகு (பீநட் பட்டர்) உட்கொண்ட சில விலங்கினங்கள் உயிரிழந்துள்ள நிலையில், அது குறித்து ரொரன்ரோ காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். Don Valley Parkway மற்றும் York Mills வீதிப் பகுதியில், Cassandra Boulevardற்கு அப்பால் உள்ள நகரான்மை குடியிருப்பு வீடுகளுக்கு பின்புறமாக உள்ள பூங்காப்பகுதியில் சில காட்டு விலங்குகள் உயிரிழந்து கிடப்பதாக நேற்று அதிகாலை 2 மணியளவில் தமக்கு தகவல் கிடைத்ததாகவும்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு தம்பத்தியினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அலாஸ்கா நெடுஞ்சாலை லியார்ட் ஹாட் ஸ்பிரிங்ஸிலிருந்து தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த சின்னா நோயல் டீஸ் மற்றும் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த லூகாஸ் ஃபோலர் என்ற தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. விபத்து குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக Northern Rockies RCMP at 250-774-2700 என்றRead More →

Reading Time: < 1 minute கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, கனடாவில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minute எட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 16 மற்றும் 27 வயதான இருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு காயமடைந்த குறித்த இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.Read More →

Reading Time: < 1 minute சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவின் லண்டன் பகுதியில் வைத்து நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பயணித்த காரினை சோதனைக்கு உட்படுத்தியபோது போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே குறித்த காரில் பயணித்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகRead More →

Reading Time: < 1 minute சர்ச்சைக்குரிய ட்ரான்ஸ் மவுண்டைன் குழாய் பதிப்பு திட்ட விரிவாக்கத்திற்கு கனேடிய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு உற்பத்தியில் உலகளவில் கனடா ஐந்தாம் இடம் வகிக்கிறது. இந்த குழாய்பதிப்பு திட்டமானது, எட்மன்டன், அல்பேர்டா ஆகிய பகுதிகளிலிருந்து புர்னாபி, பிரிட்டிஷ் கொலம்பியா என பழங்குடி மக்கள் இருக்கும் பகுதி வரை மசகு எண்ணெயை கொண்டு செல்லும். தற்போது 1,150 கிமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழாய்பதிப்பு இரு மடங்குRead More →

Reading Time: < 1 minute ருவிற்றர் சமூக வலைத்தளத்தில் பதில்களை மறைக்கச் செய்யும் புதிய ஹைட் ரிப்ளைஸ் (hide replies) எனும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த அம்சம் கனடாவில் வழங்கப்பட்டுள்ளது. கனடாவை தொடர்ந்து ஏனைய நாடுகளிலும் இந்த அம்சம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. புதிய அம்சம் கொண்டு பயனர்கள் எதிர்மறைக் கருத்துக்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைக்கச் செய்ய முடியும். எனினும் மறைக்கப்பட்ட பதில்களை புதிய ஐகனை கிளிக் செய்து பின்பற்றுபவர்கள் மட்டும் பார்க்க முடியும்.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் லண்டன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று(வியாழக்கிழமை) காலை இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது 64 வயதான லறி ரெனோல்ட் மற்றும் 62 வயதான லின் வான்எவர் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, கனடாவில் அண்மைக்காலமாகவே இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.Read More →

Reading Time: < 1 minute மூன்று வயதுக் குழந்தையை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, எட்மன்டன், பாடசாலை ஆசிரியர் ஒருவர் தன்னிடம் இசை பயில வரும் மூன்று வயதுக் குழந்தையை துஸ்பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பான தகவலை, பாடசாலை நிர்வாகம் பெற்றோருக்கு தெரியப்படுத்தியது. இதையடுத்து, குறித்த ஆசிரியர் மீது கடந்த மே 13, 2019 திகதி அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கமையRead More →

Reading Time: 2 minutes முன்னாள் இலங்கை பாதுகாப்புச் செயலர் `கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக அவருக்கு நேற்றிரவு எழுத்துமூல அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதலாவது வழக்கை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickremetunga) மகள் அசிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்துள்ளார். இரண்டாவது வழக்கை, சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட கனடிய தமிழர் ஒருவரின் சார்பில் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் என்ற மனித உரிமைRead More →