Reading Time: < 1 minuteடொரோண்டோ பெரும்பாகத்தில், பாரவூர்திகளை இலக்குவைத்து விசேட போக்குவரத்து பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் காவல்துறையினரால் இன்று முன்னெடுக்கப்படுகின்றன. டொரோண்டோ, யோர்க், பீல், ஹோல்ட்டன் ஆகிய பிராந்தியங்களின் காவல்துறையினருடன், ஒண்டாரியோ மாகாண காவல்துறை, மாகாண போக்குவரத்து அமைச்சு ஆகியன இணைந்து இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இன்று காலை மிசிசாகாவில் ஆரம்பித்த இந்த கண்காணிப்புக்களில், அனைத்து வகையான வர்த்தக வாகனங்களும் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. பாரவூர்திகள் பாதுகாப்பானவையா என்பதுடன், அவற்றில், பாதுகாப்பான அளவில் எடைRead More →

Reading Time: < 1 minuteகியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையிலான முன்பகை காரணமாகவே நேற்றிரவு(புதன்கிழமை) இந்தக் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், குறித்த தாக்குதல் தொடர்பாக இதுவரையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ShareTweetPin0Read More →

Reading Time: < 1 minuteஎட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்றிரவு(புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 26 மற்றும் 25 வயதான இருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த குறித்த இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteமிகவும் திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வந்த கார் திருட்டு கும்பல் ஒன்றை கைது செய்துள்ளதாக, பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது. சுமார் 620,000 டொலர்கள் பெறுமதியிலான விலையுயர்ந்த கார்கள், மிசிசாகாவில் உள்ள சேமிப்பு கட்டடமொன்றில் கண்டறியப்பட்டதை அடுத்து, இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. முதல்கட்டமாக, மாணவர் விசாவில் தங்கியிருந்த சீனாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து, ஒண்டாரியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களிலிருந்து, 2.2 மில்லியன் டொலர்கள் பெறுமதியிலானRead More →

Reading Time: < 1 minute1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை படுகொலையின்போது உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களையும் இடம்பெயர்ந்தவர்களையும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைவுகூர்ந்தார். ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட மிலேச்ச தனமான கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் மக்களால் நினைவு கூரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கனேடிய பிரதமர் வெளியிட்டுள்ளRead More →

Reading Time: < 1 minuteமொன்றியலின் வட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டு பாடசாலை பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் பாதிக்கப்பட்ட 25 மாணவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறித்த அந்த பேரூந்துகளில் 5 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 50 மாணவர்கள் பயணித்த நிலையில், அவர்களில் எவருக்கும் பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை எனவும், சிறிய காயங்களுக்கு உள்ளானவர்கள் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர மருத்துவப் பிரிவினரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும்Read More →

Reading Time: < 1 minuteநேற்று பிற்பகல் த்ரோன்ஹில் பகுதியில் உள்ள வங்கிக்கிளை ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. John Streetற்கு தெற்கே, Yonge Street பகுதியில் அமைந்துள்ள HSBC வங்கியில் நேற்று பிற்பகல் 12:08 அளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதனை யோர்க் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த வங்கியினுள் நுளைந்த சந்தேக நபர் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றினைக் காட்டி சுட்டுவிடுவேன் என்று அங்குள்ளவர்களை மிரட்டி ஒரு தொகைப் பணத்தினைக் கொள்ளையிட்டுக்கொண்டு, அங்கிருந்துRead More →

Reading Time: < 1 minuteஎதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கனேடிய பொதுத் தேர்தல் இடம்பெறுவதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த அந்தக் காலப்பகுதியில் யூதர்களுடைய விடுமுறை வருவதனால், தேர்தல் திகதியை மாற்றியமைப்பது குறித்து கனேடிய தேர்தல் தலைமை அதிகாரி பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கனேடிய மத்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்ற நிலையில், குறித்த அந்த ஒக்டோபர் 21ஆம் திகதிRead More →

Reading Time: < 1 minuteபிலிப்பைன்ஸூக்கு அண்மையில் சுற்றுலா சென்றிருந்து வௌிநாட்டவர்கள் சிலர் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளான போதும், அதில் பயணித்த கனடா நாட்டவர் ஒருவர் அனைவரையும் காப்பாற்றியுள்ளார். 20 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சென்ற படகொன்று சிபு மாகாணத்தில் உள்ள சிறிய தீவுப் பகுதிக்கு அருகில் பயணித்த போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதன்போது, சுற்றுலாப்பயணிகள் நீரில் தத்தளித்தனர். பெரும்பாலானவர்களின் கைத்தொலைபேசிகள் நீரில் மூழ்கியதால் செயலிழந்து போயின. ஆனால் ஜிம் எம்டி என்றRead More →

Reading Time: < 1 minuteமிக அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையான காலணியின் பெறுமதி நேற்று (செவ்வாய்க்கிழமை) முறியடிக்கப்பட்டது. Nike நிறுவனம் 1972 இல் வெளியிட்ட Waffle Moon Shoes என்ற காலணி ஏலத்தில் 437,500 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் காலணி ஏலத்தில் பெறப்பட்ட மிக அதிகத் தொகையாக 190,373 டொலரே சாதனையாக இருந்து வந்தது. 1984 இல் இடம்பெற்ற ஒலிம்பிக் கூடைப்பந்து இறுதிச்சுற்றில் மைக்கல் ஜோர்டன் அணிந்த காலணிRead More →

Reading Time: 2 minutesஇறுதியுத்தக் காலப்பகுதிக்குப்பின்னர் நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து சென்று கனடாவின் வான்கூவர் தீவை அடைந்த எம்.வி. சன் சீ (MV Sun Sea) கப்பல் உடைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெடரல் அரசாங்கம் MV Sun Sea என்னும் அந்த கப்பலை உடைப்பதற்காக 4 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. 2010 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்களைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் க்யூபெக் (Quebec), ஒன்ராறியோ (Ontario) போன்ற பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடும் வெப்பத்தால் சிறார்களும், முதியவர்களும் அதிகம் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால், எதிர்பாராமல் உலகின் பல இடங்களில் மிதமிஞ்சிய வெப்பநிலை ஏற்படுவதாகப் பருவநிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேவேளை, அமெரிக்காவின் பல பகுதிகளில் இந்த வாரயிறுதியில் வெப்பநிலை 38 பாகை செல்சியஸை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் நியூயோர்க்,Read More →

Reading Time: < 1 minuteஈட்டோபிக்கோ பகுதியில் இடம்பெற்ற பாரிய ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றில் வைத்து கத்திக் குத்துக்கு இலக்கான சிறுவன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Eglinton Avenue West மற்றும் Centennial Park Boulevard பகுதியில் நேற்று இரவு 10:40 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்த நிகழ்வின்போது, ஒரு குழுவினர் மோதலில் ஈடுபட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே இந்த கத்திக் குத்து இடம்பெற்றதாகவும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டோர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்துக்கு இலக்கானRead More →