Reading Time: < 1 minute நேற்றுப் பிற்பகல் வேளையில் நோர்த் யோர்க் பகுதியில் வைத்து ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானமை குறித்து ரொரன்ரோ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Sheppard Avenue Westற்கு தெற்கே, Yonge Street மற்றும் Florence Avenue பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அங்கு சென்றதாகவும், சம்பவ இடத்தில் வாகனம் ஒன்று பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும் ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளைRead More →

Reading Time: < 1 minute நேற்று காலை Danforthஇன் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாரதூரமான காயங்களுக்கு உள்ளான 16 வயதுச் சிறுவன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Donlands Avenue மற்றும் Strathmore Boulevard பகுதியில் அமைந்துள்ள பாடசாலை வாகன நிறுத்துமிடத்தில், நேற்று அதிகாலை 12:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அங்கு விரைந்த போது, அங்கே குறித்த அந்தச் சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் சுற்றுலாத்தளம் ஒன்றில் கம்பிகள் அறுந்ததில் 30 கேபிள் கார்கள் பல அடி உயரத்தில் இருந்து வீழ்ந்து சேதமடைந்துள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரின் ஹொவே சவுண்ட் பகுதிக்கு அருகே, The Sea to Sky Gondola என்ற கேபிள் கார் மூலம் அப்பகுதியை சுற்றிப்பார்க்கும் சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது. அது சுமார் மூவாயிரம் அடி உயரத்தில், கேபிள் கார்கள் கடற்பரப்பின் மேல் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: 2 minutes ஒரே நாளில் சகோதரனையும் இழந்து, தந்தையின் அரவணைப்பையும் இழந்த இந்திய வம்சாவளி பெண்ணொருவர் தனது சிறுவயதில் எடுத்த முடிவால் இன்று கனடாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். 1970 களில் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த நீனா என்ற குறித்த பெண்ணின் குடும்பம், ரொறென்ரோவில் வாழ்ந்து வந்தது. வெளியுலகுக்கு மகிழ்ச்சியாக வாழ்வது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஓயாத பிரச்சினை நீடித்து வந்தது. 22 ஆண்டு கால போராட்டRead More →

Reading Time: < 1 minute ரொரன்ரோ Willowdale பகுதியில் வாகனத்தினால் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை முற்பகல் பத்து மணியளவில், டோறிஸ் அவனியூவுக்கு மேற்கே, ஃபின்ச் அவனியூ ஈஸ்டில் தெற்கு பக்கமாக குறித்த அந்தப் பெண் நடந்து சென்று கொண்டிருந்ததாகவும், அநத வேளையில் கிழக்கு நோக்கப் பயணித்த வானம் ஒன்று அங்குள்ள அறிவிப்புப் பலகைக் கம்பத்துடன் மோதி, குறித்த இந்தப் பெண் மீது மோதி பின்னர் அங்கிருந்த மின்விளக்கு கம்பம்Read More →

Reading Time: < 1 minute நேற்றுக் காலை ஈட்டோபிக்கோ வீதியொன்றில் வைத்து துப்பாக்கி ஒன்றினைக் கைப்பற்றிய காவல்துறையினர், இந்தச் சம்பவம் தொடர்பில் நான்கு ஆண்களைக் கைது செய்துள்ளனர். Park Lawn வீதி மற்றும் The Queensway பகுதியில், Burma Driveவில் வாகனம் ஒன்றின் சாரதி விதிமுறைகளுக்கு முரணாக வாகத்தைச் செலுத்திச் செல்வதாக நேற்று சனிக்கிழமை காலை 7:10 அளவில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். அங்குள்ள வீடு ஒன்றின் முகப்பில் வாகனம் ஒன்றின்Read More →

Reading Time: < 1 minute கியூபெக் நகரில் தனது முன்னாள் மனைவி மீது தீ மூட்டிய ஆண் ஒருவரைக் கைது செய்துள்ள பொலிஸார் அவர்மீது கொலை முயற்சி மற்றும் மோசமான தாக்குதல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். கியூபெக் நகரில், மொன்றியலில் இருந்து கிழக்கே சுமார் 110 கிலோமீடடர் தொலைவில், ட்ரோமின்வில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து, 39 வயதான அந்த ஆணை நேற்று (சனிக்கிழமை) கியூபெக் மாநில பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இதேவேளை தீயினால் எரியுண்டRead More →

Reading Time: < 1 minute வோன் பகுதியில் ஆண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸாரின் மனிதக் கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று (சனிக்கிழமை) அதிகாலை இரண்டு மணியளவில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் வைத்தியசாலைக்குச் சென்று சேர்ந்த தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பமானதாக பொலிஸார் கூறியுள்ளனர். இன்று அதிகாலை 1:45 அளவில் குறித்த இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகள்Read More →

Reading Time: < 1 minute ஹொங்கொங் செல்லும் கனடியர்களுக்கான பயண எச்சரிக்கை, கனடிய மத்திய அரசினால் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வலுப்பெற்றுவரும் ஜனநாயக ஆதரவு போராட்டங்களை அடுத்து, இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கணிசமான பாதுகாப்பு பிரச்சினைகளும், நிலைமைகள் குறுகிய பொழுதில் அபாயகரமானதாக மாறக்கூடிய சூழலும் ஹொங்கொங்கில் நிலவுவதாக, கனடிய அரசு தெரிவித்துள்ளது. அங்கு ஏற்கனவே உள்ள கனடியர்களும், கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறும், உள்ளூர் ஊடகங்களை கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute வீடற்ற 30 கல்கேரியர்களுக்கு, புதிய வீட்டுத் திட்டத்திற்கு செல்லும் வாய்ப்பினை மிகவிரைவில் கனேடிய அரசாங்கம் வழங்கவுள்ளது. நகரின் வடமேற்கில் அமைக்கப்பட்டு வரும் இந்த வீட்டு திட்டத்திற்கே, இந்த கோடையில் அவர்கள் செல்லவுள்ளனர். 7000 பிளொக்- பவுனஸ் வீதியில் அமைந்துள்ள புதிய வசதிகளை கொண்ட வீடுகள் 5.7 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இந்த வீட்டு திட்ட வேலைகள் விரைவில் நிறைவடையும் என மத்திய மற்றும் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவின் கிழக்கு யோரக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவத்தில், உயிரிழந்தவர் 29 வயதான கெவீன் ரெட்டிக் என பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர். வகுண்டா பிளேஸ் மற்றும் ஓ’கானர் டிரைவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் ரொறன்ரோவை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தின் போது தப்பிச் சென்றவரை அடையாளங்காட்டRead More →

Reading Time: < 1 minute சாஸ்கடூனில் போதைப் பொருள் கடத்தல் விசாரணை தொடர்பாக, மூவரை போதைப்பொருள் பிரிவினர் கைது செய்துள்ளனர். யுனிவர்சிட்டி டிரைவின் 600 தொகுதிகளில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் வைத்து, 28 வயது இளைஞன் ஒருவரையும், 24 வயது பெண் ஒருவரையும், பொலிஸார் கைது செய்தனர். இதன்போது சிறிய அளவு மீதாம்பேட்டமைன் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும், சந்தேகத்திற்கிடமான வீட்டில் இருந்த 39 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதில், 28 வயதானRead More →