Reading Time: < 1 minute நேற்று பின்னிரவு வேளையில் பிரம்டன் பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Dixie வீதி மற்றும் Advance Boulevard பகுதியில் நேற்று இரவு 11:45 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை பீல் பிராந்தியக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சந்தேக நபர் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஏதாவதுRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை, கரடியொன்று உடைத்துள்ளது. வன்கூவரிலுள்ள பெண்ணொருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதையடுத்து அவர் மனிதனொருவரால் உடைக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டிருந்தார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த காரின் உரிமையாளர், தன்னுடைய வீட்டு சூழலில் கரடி ஒன்று நடமாடியபோதிலும் அப்பகுதியில் கரடிகளின் நடமாட்டம் சாதாரணமானது என்றபடியால் தான் ஆச்சரியப்படவில்லை என்றும், பின்னர் சி.சி.ரி.வி. கமெராக்களை சோதனையிட்ட போது, கரடியொன்று காரின் கண்ணாடியை உடைப்பதை கண்டுRead More →

Reading Time: < 1 minute ரொன்செஸ்வெலிஸில் பகல் நேரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பத்துடன் தொடர்புடைய, குற்றவாளியை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த குற்றவாளி, 5’11 உயரம் கொண்ட ஒல்லிய தோற்றமுடைய ஆண் என விபரித்துள்ள பொலிஸார், அவர் வெள்ளை நிற எஸ்.யு.வி நிற வாகனத்தில் தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளனர். எனவே, இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். ரொன்செஸ்வெலிஸ் அவெனியூ-Read More →

Reading Time: < 1 minute பிரம்டனில் 51 வயது ஆண் ஒருவர் தனது மனைவியையும் 13 வயது மகனையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Williams Parkway மற்றும் Torbram வீதிப் பகுதியில், Josephine Courtஇல் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 5:45 அளவில் குறித்த அந்த வீட்டில் கத்திக் குத்து இடம்பெற்றதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போது, சம்பவ இடத்தில்Read More →

Reading Time: < 1 minute Roncesvalles பகுதியில் வைத்து நேற்று மாலை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், குறித்த இந்தச் சம்பவம் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக இருக்கக்கூடும் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். Roncesvalles Avenue மற்றும் Grenadier வீதியில் அமைந்துள்ள Domani உணவகத்திற்கு வெளியே, நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கே பல தடவைகள் துப்பாககிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்ததாகவும், சம்பவRead More →

Reading Time: < 1 minute கனேடியப் பெண் ஒருவரின் காதலர் நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், குறித்த இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக நியூசிலாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தின் கடற்கரை நகரான றக்லானில் குறித்த அந்த கனேடியப் பெண்ணும் அவரது காதலரான அவுஸ்திரேலிய ஆடவரும் சிற்றூர்தி ஒன்றில் தூங்கிக்கொண்டு இருந்த வேளையில், நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அவர்களை அணுகிய சந்தேக நபர் அவர்கள் மீது துப்பாக்கிப்Read More →

Reading Time: < 1 minute மனிடோபாவில் அடுத்த நான்கு ஆண்டுகளில் 40,000 தனியார் துறை வேலைகள் வழங்குவதே தனது இலக்கு என முற்போக்கு கன்சர்வேடிவ் தலைவர் பிரையன் பாலிஸ்டர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 10ஆம் திகதி மீண்டும் நடைபெறும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால், கட்சியின் ஐந்து உத்தரவாதங்களை நிறைவேற்ற தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நெடுஞ்சாலைகள், சுரங்கம், சுற்றுலா ஆகியவற்றிற்கு அதிக செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மனிடோபா ஒர்க்ஸ் வேலைகள் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக,Read More →

Reading Time: < 1 minute ஹெமில்டன்- கிரிம்ப்சியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையொன்றின் போது, வீடொன்றில் இருந்து 2000 கஞ்சா சாடிகளை மாகாண பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மாகாணத்தின் கூட்டு கஞ்சா அமுலாக்கக் குழு உறுப்பினர்கள், நயாகரா பிராந்திய பொலிஸாருடன் சேர்ந்து, ஒகஸ்ட் 10ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, கண்டுபிடித்தனர். இதன்போது, செயின்ட் கேதரைன்ஸைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரையும், மார்க்கமைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கஞ்சாRead More →

Reading Time: < 1 minute பெருநகரின் மொன்றியல்- நோர்ட் குடியிறுப்பு பகுதியில் இருந்து, 40 வயதான ஆணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. லேபியர் வீதிக்கு அருகிலுள்ள பாஸ்கல் வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே பொலிஸார் சென்றபோது, அவர்கள் போதைப்பொருட்களையும், சட்ட விரோத போதைப் பொருள் ஆய்வகமொன்றையும் கண்டுபிடித்தனர். எனினும் இதுகுறித்த மேலதிக தகவல் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை. குறித்த பகுதியினை தற்போது அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். குறித்த ஆண், அளவுக்கு அதிகமாக போதைப் பொருளைRead More →

Reading Time: < 1 minute லண்டன் பகுதியிலுள்ள மூன்று மருந்தகங்களில் திருடிய ஆணொருவரை, பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் 30 அல்லது 40 வயது மதிக்கதக்கவர் எனவும், கனமான சேட் மற்றும் முழு தாடியுடனும், பேஸ் போல் வீரர் அணியும் தொப்பியொன்றையும் அணிந்திருந்தாக பொலிஸார் விபரித்துள்ளனர். இவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், உடனடியாக அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்Read More →

Reading Time: < 1 minute ஓட்டாவா- கட்டினோ மருத்துவமனையில், செவிலியர்கள் முதியவர் ஒருவருக்கு தவறான மருந்துகளை கொடுத்தால் அவர் உயிரிழந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில், முழு அறிக்கையை உடற்கூறாய்வு செய்பவரான பவுலி வெளியிட்டுள்ளார். இதில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது. இதில் ஈடுபட்ட செவிலியர் மற்றும் துணை செவிலியர் ஆகியோரை அவர்களின் தொழில்முறை அமைப்புகளுக்கு விசாரணைக்கு அனுப்புமாறும் பவுலி அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், இதுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் மக்கள் கட்சியின் முதல் தமிழ் வேட்பாளராகின்றார் ஜெரமியா விஜயரத்னம்! எதிர்வரும் கனடிய பொதுத் தேர்தலில் Maxime Bernier தலைமையிலான கனடாவின் மக்கள் கட்சி (People’s Party of Canada) சார்பில் தமிழரான ஜெரமியா விஜயரத்னம் (Jeremiah VJ Vijeyaratnam) போட்டியிடுகின்றார். கனடாவின் மக்கள் கட்சியின் Scarborough Centre தொகுதி வேட்பாளராக இவர் போட்டியிடுகின்றார். இது குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இதன் மூலம் கனடாவின் மக்கள்Read More →