Reading Time: < 1 minute ரொக்கி மவுண்டன் ஹவுஸ் அருகே இரு வாகனங்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில், பெண்னொருவர் உயிரிழந்துள்ளதாக எட்மண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 11 இற்கு அருகாமையில் சன்சைல்ட் சுற்றுப்பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து சம்பவித்துள்ளது. நெடுஞ்சாலை 11இல் கிழக்கு தடம் நோக்கிச் சென்ற ஒரு பிக்ப் ரக வாகனம், எதிரே வந்த டிராக்டரை மோதியதாக பொலிஸார் நம்புகின்றனர். இவ் விபத்தில், உயிரிழந்தவர் 41வயதான பெண் எனவும், இவர்Read More →

Reading Time: < 1 minute சீனாவுடன் வர்த்தக மற்றும் இராஜ தந்திர ரீதியில் முரண்பட விரும்பவில்லை என தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எனினும் கனடாவின்  நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் இருந்தும் பின்வாக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். மொன்றியலில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “இரு கனேடியப் பிரஜைகளைக் கைது செய்து சீனா தடுத்து வைத்துள்ளது. அத்துடன் கனோலா எண்ணெய் வித்துக்கள் மற்றும் விலங்குணவுகளை கனடாவில்Read More →

Reading Time: < 1 minute கடந்த திங்கட்கிழமை பிற்பகல் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த ரொரன்ரோவைச் சேர்ந்த தந்தை ஒருவர் Huntsville பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை மாலை ஐந்து மணியளவில், பெனின்சுலா ஏரிப்பகுதியில் இருவர் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைத்ததாகவும், தனது கணவரும் மகனும் நீந்தச் சென்று திரும்பவில்லை என்று படகு ஒன்றிலிருந்த பெண் ஒருவர் முறைப்பாடு செய்ததாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். வேகமாக காற்று வீசியதால், குறித்த அந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் வெஸ்டன் வீதி மற்றும் 401 வது அதிவேக வீதிக்கு அருகே ஒரு டாக்ஸி சாரதி, யாரோ ஒருவரைத் தாக்கி விட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றதை சாட்சிகள் சிலர் உறுதிப்படுத்தியதை அடுத்து ரொறெண்ரோ பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். வாகன சாரதி தனது வாகனத்தில் ஏறிச்செல்லும் முன், இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதைக் காட்டும் சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களிலும், இணையங்களிலும் பகிரப்பட்டு வருகின்றது. கைகலப்பின் பின்னர் டாக்ஸி சாரதி மற்றவரை மோதித்Read More →

Reading Time: < 1 minute வடக்கு யோர்க்கில் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரொறெண்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9 மணிக்குப் பின்னர் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். பேலிவியூ ஒழுங்கைக்கு அருகிலுள்ள லோவர்லீஃப் வீதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் குறித்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. குறித்த விபத்துடன் சம்பந்தப்பட்ட வாகன சாரதி சம்பவ இடத்திலேயே இருந்துள்ளார். அவர்Read More →

Reading Time: < 1 minute தெற்காசிய நாடுகளைச் ​சேர்ந்த இரண்டு பெண்கள் கனடாவின் பிராம்ப்டன் (Brampton) பகுதியில் வைத்து ஒருவார இடைவௌியில் காணாமல் போயுள்ளனர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பரிந்தர் கவுர் (Barinder Kaur -34) என்ற பெண் பிராமலியா (Bramalea) தெரு பகுதியில் வைத்து மதியம் 1 மணியளவில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவர் திடீரென காணாமல போனதால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் சிறைச்சாலையொன்றில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மிராமிச்சி (Miramichi) நகருக்கு தென்மேற்கு பகுதியில் 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அட்லாண்டிக் நிறுவகம் (Atlantic Institution) என்ற சிறைச்சாலையிலேயே இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறைச்சாலையில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஓலிவர் (Oliver -32) என்ற கைதி தடுத்துவைக்கப்பட்டிருந்தார். கடுமையான தாக்குதல் நடத்தியமை, உடலில் காயம் ஏற்படுத்தியமை, ஆபத்தான ஆயுதங்களைRead More →

Reading Time: < 1 minute இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கனடா அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்த நியமனம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை பலவீனமாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான கனடிய தூதரகம், இவ்விடயம் தொடர்பில் தாம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பாரிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள சவேந்திர சில்வா, புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதை, சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்து வருகின்றன. கனடா மட்டுமன்றி,Read More →

Reading Time: < 1 minute ஓகஸ்ற் 30 – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி கனடாவில் பல்வேறு விழிப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது. விழிப்பு பரப்புரை, கருத்தாடல் என பல்வேறு நிகழ்வுகள் இந்நாளையொட்டில மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30-08-2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை, Dundas Square சதுக்கத்தில் துண்டுப்பிரசுர விழப்பு பரப்புரை செய்யப்படவுள்ளன. பின்னர் மாலை 6:30 மணி முதல் இரவுRead More →

Reading Time: < 1 minute ரொரன்ரோ பெரும்பாகத்தில் ஒரு சில மணி நேர இடைவேளையில் இடம்பெற்ற பல்வேறு தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் படுகாயமடைந்த நான்குபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவற்றுள் இரண்டு சம்பவங்கள் திங்கள் பின்னிரவு வேளையில் இடம்பெற்றுள்ளன. Kipling Avenue மற்றும் Mount Olive வீதிப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் இரவு 10:40 அளவில் இரண்டுபேர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்கான இருவரும் தாங்களாகவே மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்ததாகவும்,Read More →

Reading Time: < 1 minute நெடுஞ்சாலை 427இல் திங்கட்கிழமை காலை வேளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி ஓட்டுனர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Derry வீதிக்குத் தெற்கே, நெடுஞ்சாலை 427இன் வடக்கு நோக்கிய வழித்தடத்தில் நேற்று காலை ஆறு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. அந்த வழியே சென்றுகொண்டிருந்த சரக்கு ஊர்தி ஒன்றின் மீது, பின்னால் வந்த உந்துருளி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி ஓட்டுனர் பலத்த காயங்களுடன் உயிராபத்தான நிலையில்Read More →

Reading Time: < 1 minute நேற்று இரவு ஸ்காபரோவில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொணட விபத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்ட இந்த விபத்து மார்க்கம் வீதி மற்றும் ஃபின்ச் அவனியூ பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆண் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதனை அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அதேபோல குறித்த அந்தப் பெண்ணும் பலத்த காயங்களுடனேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகRead More →