Reading Time: < 1 minute சீனாவின் தொலைத்தொடர்பு முன்னோடியான ஹூவாவேயின் தலைமை நிறைவேற்று அதிகாரி மெங் வாங்ஷோவை, உடனடியாக விடுத்து அவர் பாதுகாப்பாக நாடு திரும்ப வழிவகை செய்ய வேண்டும் என கனடாவுக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் டோமினிக் பார்டோன் தெரிவித்துள்ளார். புதிதாக பதவியேற்றதன் பின்னர், இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தற்போதய நிலவரப்படி கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவானது மிகவும் மோசமான நிலையினைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரபலமான நகரான மொன்ரியலில், டொரியன் புயலால் பாதிக்கப்பட்ட பஹாமாஸ் வாசிகளுக்காக உலர் உணவுப்பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. பஹாமாஸை தாக்கிய டொரியன் புயலால் அதன் இரண்டு தீவுகள் உருக்குலைந்துள்ளதுடன், பலர் அங்கிருந்து வெளியேறி இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான உலர் உணவுகளை சேகரிக்கும் பணிகளில் ஜேசன் போர்ப்ஸ் என்பவர் தனது வார இறுதி நாட்களை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். பஹாமாஸில் தனது தூரத்து உறவினர்கள் டொரியன் புயலால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு உடனடி உதவிகள்Read More →

Reading Time: < 1 minute பஹாமாஸ் மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்திவரும் டொரியன் புயல் கனடாவையும் விட்டுவைக்கவில்லை. டொரியன் புயல் காரணமாக கனடாவின் நோவா ஸ்கோரியா மாகாணத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு இன்று காலை வரை 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக கலிஃபக்ஸ் பிராந்தியத்தில் நேற்று (சனிக்கிழமை) மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய புயலினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், கடல் நீரும் சில பகுதிகளில் உட்பகுந்துள்ளது. அதுமட்டுமல்லாதுRead More →

Reading Time: < 1 minute தெற்கு சர்ரே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை, பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் கைது செய்துள்ளனர். எனினும், கைது செய்யப்பட்டவர்ளின் பெயர் மற்றும் வயது உள்ளிட்ட விடயங்களை வெளியிடவில்லை. 160 வீதி மற்றும் 16 அவென்யூவுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிலேயே, குறித்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது. குறித்த பகுதிக்கு பொலிஸார் விரைந்த போது, 46 வயதான ஆணொருவர் படுகாயங்களுடன் இருந்தாகவும். அவரை காப்பாற்ற முயன்ற போது, அவர்Read More →

Reading Time: < 1 minute ஹூவாவே நிறுவனத்தின் தலைமை அதிகாரியைக் கைது செய்த விவகாரத்தில் தனது தரப்பு தவறுகளை கனடா உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும், ஹூவாவே அதிகாரியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கனடாவுக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். நேற்று தனது பதவி நியமனத்தின் போது இதனை வலியறுத்தியுள்ள அவர், தற்போதய நிலவரப்படி கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவானது மிகவும் மோசமான நிலையினை எதிர்கொண்டுள்ளதாகவும், எனவே கனடா தனது சொந்தRead More →

Reading Time: < 1 minute Clarington பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்ட இரண்டு வயதுச் சிறுவன் ஒருவர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Regional Road 57 மற்றும் Taunton Road பகுதியில், Perry Avenueவில் நேற்று முற்பகல் 10:20 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வதிவிடம் ஒன்றின் தனிப்பட்ட பாதையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பிக்கப் ரக வாகனம் ஒன்று சிறுவனின் உடலின் கீழ்ப் பாகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. மோசமான காயங்களுக்குRead More →

Reading Time: < 1 minute Bowmanville மற்றும் Whitby பகுதி ஊடாக ஆயுததாரி ஒருவரை உலங்குவானூர்தி உதவியுடன் துரத்திச் சென்ற சம்பவம் புதன்கிழமை இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது. Clarington பகுதி, Rundle வீதியில் பிக்கப் ரக வாகனம் ஒன்று சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக புதன்கிழமை இரவு 10:15 அளவில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அங்கே விரைந்ததாகவும், காவல்துறையினரின் வாகனம் அந்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தை அண்மித்த போது, அது அங்கிருந்து வேகமாகத் தப்பித்துச் சென்றதாகவும், அதனை அடுத்து அங்கேRead More →

Reading Time: < 1 minute கம்லூப்ஸில் உள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், கட்டிடமொன்று முற்றிலுமாக ஏரிந்து நாசமாகியுள்ளது. பார்க் கிறிஸ்ட் ஆரம்ப பாடசாலையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 5.15 மணியளவில், இந்த தீ விபத்து சம்பவித்துள்ளது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, கூரையிலிருந்து கருப்பு புகை வருவதைக் காண முடிந்ததாகவும், இதன்போது ஒரு காவலர் கட்டிடத்தில் உள்ளே இருந்து, பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். பின்னர் 30இற்க்கும்Read More →

Reading Time: < 1 minute மனிடோபா- வின்னிபெக் பகுதியில், காணாமல் போன 13 வயது சிறுமியை கண்டுபிடித்துதருமாறு பொலிஸார், பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். எட்ரியன் டோரியன் என்ற குறித்த சிறுமி, கடந்த ஒகஸ்ட் 24ஆம் திகதி காலை 10.30 மணியளவில், நகரின் வடக்கு முனைப் பகுதியில் இறுதியாக தென்பட்டுள்ளார். குறித்த சிறுமி, அடிக்கடி வின்னிபெக் மற்றும் தாம்சன் இடையே பயணம் செய்வதாக அறியப்படுகிறது. டோரியன் ஐந்து அடி நான்கு அங்குலம், நடுத்தர நீள சிவப்பு முடி,Read More →

Reading Time: < 1 minute உலகில் சுற்றுலா செல்ல தகுந்த நாடுகள் பட்டியலில் கனடா 9, இந்தியா 34ஆவது இடத்தில் உள்ளது என உலக பொருளாதார மன்ற அறிக்கை கூறுகிறது. உலக பொருளாதார மன்றத்தின் சமீபத்திய பயண , சுற்றுலா போட்டித்திறன் அறிக்கையில் சுற்றுலா செல்ல தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 6 இடங்கள் முன்னேறி உள்ளது. இந்தியாவின் தரவரிசை 40-வது இடத்திலிருந்து 34-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் சமீபத்திய சுற்றுலாRead More →

Reading Time: < 1 minute கனடாவில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைதாகியுள்ளனர். குறித்த பெண்கள் சிறுவர்களை வீட்டின் அடித்தளமொன்றில் தடுத்து வைத்ததுடன் அட்டைப் பெட்டியினுள் அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் எட்மென்டன் ரவுன் ஹோம் பகுதியில் சிறுவர்கள் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. சகோதரிகளான இரண்டு பெண்களும் ஆறு வாரங்களுக்கு, 3 முதல் 6 வயதுடைய சிறுவர்களை இவ்வாறு அடித்தளத்தில் பூட்டிவைத்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்,Read More →

Reading Time: < 1 minute தனது நாய்களைப் பார்வையிடச் சென்ற பெண் ஒருவர் கரடி தாக்கிப் பலியான சம்பவம் ஒன்ராறியோவின் மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் எல்லையுடன் அமைந்துள்ள Red Pine Island பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர், நாய்களைப் பார்வையிடச் சென்ற தமது மகள் வீடு திரும்பாததை அடுத்து அவரது பெற்றோர் தமக்கு முறைப்பாடு வழங்கியதாகவும், தாம் சம்பவ இடத்திற்கு சென்று தேடிய போதுRead More →