Reading Time: < 1 minuteபழமைவாதக் கட்சியின் கல்கரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தீபக் ஓப்ராய் மிக மோசமான ஈரல் புற்றுநோய்யினால் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். நாடாளுமன்றில் பெரிதும் மதிக்கப்படும், விரும்பப்படும் நபராக விளங்கிய அவரின் இந்த இழப்பு குறித்த செய்தி சனிக்கிழமை காலையில் வெளியான நிலையில், எதிர்பாராத இந்தச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த மாதத்தில் தனது 69ஆவது வயதை எட்டிய அவருக்கு, கடந்த மாதமளவில் தான் புற்றுநோய் உச்ச நிலையில் இருந்தமை கண்டறியப்ப்டடது.Read More →

Reading Time: < 1 minuteவெள்ளிக்கிழமை இரவு உந்துருளி ஒன்று சிற்றூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 29 வயதான உந்துருளி ஓட்டுனர் மருத்துவனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு 10:35 அளவில், Islington Avenue மற்றும் Beaumonde Heights Drive பகுதியில் தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த இந்த உந்துருளி சிற்றூர்தியுடன் மோதுண்டு்ளளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான உந்துருளி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,Read More →

Reading Time: < 1 minuteநேற்று சனிக்கிழமை காலை ஸ்காபரோ Agincourt பகுதியில் வாகனம் ஒன்று கட்டிடம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 26 வயதான வாகனத்தின் சாரதி, உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Middlefield வீதி மற்றும் Scottsfield Drive பகுதியி்ல், நேற்று காலை 5:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. ஒரு வாகனம் மட்டும் தொடர்புபட்டுள்ள இந்த விபத்துக்கு, அளவுக்கு அதிகமான வேகம் காரணமாக இருக்கக்கூடும் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம்Read More →

Reading Time: < 1 minuteஇன்று காலை வேளையில் நெடுஞ்சாலை 401இல் கார் ஒன்று பேரூந்துடன் மோதுண்டு தீப்பிடித்து எரிந்ததில், பாரதூரமான காயங்களுக்கு உள்ளான காரின் சாரதி உயிராபத்தான நிலையில் மீட்கப்பட்டு உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை 401இன் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், போர்ட் யூனியன் வீதிப் பகுதியில் இன்று காலை சுமார் எட்டு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. மிகவும் வேகமாக பயணித்த குறித்த அந்தக் கார் பேரூந்தின் பின்னால் சென்றுRead More →

Reading Time: < 1 minuteலாசல்லே பகுதியில் உள்ள கஞ்சா விற்பனை நிலையத்திற்கு முன்பாக, சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். எசெக்ஸ் கவுண்டி ஒன்ராறியோ மாகாண பொலிஸ், மாகாண கூட்டுப் படைகள் கஞ்சா அமுலாக்கக் குழு, சமூக வீதி குற்றப் பிரிவு மற்றும் லாசாலே பொலிஸ் படை உறுப்பினர்களின் துணையுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கஞ்சாவை உட்செலுத்தக் கூடிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டRead More →

Reading Time: 3 minutes30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அழிந்துபோன இலங்கையின் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கையும் கிழக்கையும் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் செய்யும் முயற்சிகள் எப்படியெல்லாம் வீணாக்கப்படுகின்றன என்பதற்கு இந்தப்பதிவு ஒரு சிறு உதாரணம். ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விடயம்……… புலம் பெயர்ந்த தமிழ் பணக்காரர்களில் இவரும் ஒருவர். நானும் அவரும் வன்னி மக்களின் நிலைமை பற்றி கலந்துரையாடினோம். வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் இருதய நோய் மற்றும் கான்சர் போன்றவற்றால் பலர்Read More →

Reading Time: < 1 minuteலாரன்டியன்ஸில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த குழந்தை விவகாரம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். லாரன்டியன்ஸில் ஆற்றில் 6 மாத குழந்தை ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுகுறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை ஒட்டாவாவிலிருந்து வடக்கே 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஃபெர்ம்-நியூவ்,லாரன்டியன்ஸில் ஆற்றில் குறித்த குழந்தை அடித்துச் செல்லப்பட்டள்ளது. பின்னர், பாதுகாப்புRead More →

Reading Time: < 1 minuteபிரம்டன் பகுதியில் காரை உடைத்து மர்ம இளைஞர்கள் நடத்திய கத்தி குத்து தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய, பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். 20 வயதிற்குட்பட்ட கருப்பு நிற தோற்றத்துடன் உள்ள ஒருவரை பொலிஸார் தேடிவருவதாகவும், இவர் குறித்து தகவல் தெரிந்தவர் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். காஸில்மோர் மற்றும் கோர்வே டிரைவ் பகுதியில் உள்ள லேன் ப்ரூக் டிரைவில் நேற்று அதிகாலை 2:20 மணியளவில்Read More →

Reading Time: < 1 minuteஓட்டாவா, குடியிறுப்பொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி, ஒருவர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 251 டொனால்ட் செயின்ட் பகுதியில் உள்ள குடியிறுப்பொன்றின் 14 மாடியிலேயே நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 63 வயதான ஆணொருவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், இந்த தீ விபத்தின் போது 20 பேர் இடமாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தீ விபத்தின் போது குறித்த பகுதியேRead More →

Reading Time: < 1 minuteகனேடிய பொலிஸ் சேவையில் பணிபுரிந்த ஈழத்தமிழரான நிஷாந்தன் துரையப்பா (Nishan (Nish) Duraiappah), Peel பிராந்திய காவல்துறையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நிஷாந்தன் துரையப்பா, யாழ். முன்னாள் மேயர் அல்பிரெய்ட் துரையப்பாவின் பேரன் என்பதுடன், தனது மூன்று வயதில் அவர் கனடாவுக்கு குடிபெயர்ந்திருந்தார். கனடாவின் ஹால்டன் பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்துகொண்ட நிஷாந்தன் துரையப்பா, அவரின் அதீத திறமையின் மூலம் படிப்படியாக முன்னேறி ஹால்டன் பிரதி பொலிஸ்Read More →

Reading Time: < 1 minuteமார்க்கம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Laidlaw Boulevard மற்றும் நெடுஞ்சாலை 7 பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த வர்த்தக வளாகத்தில் நேற்று இரவு 11 மணிக்குச் சற்றுப் பின்னராக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து தாங்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்த போது, அங்கேRead More →

Reading Time: < 1 minuteஒஷாவா வீட்டுத்திட்டப் பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 18 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். Ritson Road மற்றும் Taunton Road பகுதியில், Pentland Streetஇல் உள்ள குடியிருப்புப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக நள்ளிரவு வேளையில் கிடைத்த பல முறைப்பாடுகளை அடுத்து அங்கு விரைந்ததாகவும், சம்பவ இடத்தில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இளைஞர் அங்கேயே உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விசாரணைகள்Read More →

Reading Time: < 1 minuteபிரம்டனில் உள்ள வீடு ஒன்றுக்கு வெளியே வைத்து மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 63 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Castlemore Drive மற்றும் Goreway Drive பகுதியில், Lanebrook Driveவில் உள்ள வீடு ஒன்றுக்கு வெளியே இன்று அதிகாலை 2:20 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்கள் சிலருடன் ஏற்பட்ட தகராற்றைத் தொடர்ந்து வீதியில் வைத்து இந்த கத்திக்Read More →