Reading Time: < 1 minuteஅல்பேர்ட்டா சட்டமன்றில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில், மாநில முதல்வருக்கான சம்பளம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பளம் ஆகியன குறைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழு ஏகமனதாக நேற்று மேற்கொண்ட இந்த முடிவின் அடிப்படையில், தேர்தலில் வெற்றிபெற்று தேர்வான சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ஐந்து சதவீதத்தினாலும், முதல்வர் ஜேசன் கெனியின் சம்பளம் மேலும் ஐந்து வீதம் அதிகரித்து பத்து சதவீத்தினாலும் குறைக்கப்படவுள்ளது. கடந்த ஏப்ரல் மாத்தில் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையைப்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ 24 மணிநேரத்தினுள் இரு மடங்காக பரவி, சுமார் 2.5 சதுரக்கிலோமீட்டர் பரப்பளவு வரையில் கொழுந்துவிட்டு எரிந்து வருவதாக அந்த மாநில காட்டுத்தீ முகாமைத்துவத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஒலிவர் பிராந்தியத்தின் வடபகுதியில் கடந்த நான்காம் திகதி ஆரம்பித்த இந்த காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் விமானங்கள், பாரிய உபகரணங்கள் சகிதம் நூற்றுக்கும் அதிகமானோர் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வெப்பத்துடன் கூடிய வானிலையுடன், சரிவான மலைப்பகுதியில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுற்றுலா பயணிகள் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ள பொலிஸார், இது மூவரின் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக அமையும் என கூறியுள்ளனர். கில்லாம் (Gillam) அருகே உள்ள நெல்சன் ஆற்றில் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அலுமினிய படகை அடுத்து, தேடுதலில் ஈடுபட்ட பொலிசார், தற்போது கொலை வழக்கிற்குRead More →

Reading Time: < 1 minuteகடற்படையில் பணிபுரிவோர் தாய்நாட்டுக்கு திரும்பும்போது அவர்களை துறைமுகத்திற்குச் சென்று வரவேற்பது அவர்களின் குடும்பங்களுக்கு என்றும் சளைக்காத விடயமாகும். அவ்வாறு கடற்படை பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய கடற்படை வீரர் ஒருவர் ’வரவேற்பு நிகழ்ச்சியில்’ தன்னை வரவேற்க வந்த காதலிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். HMCS Toronto என்னும் கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பல் ஹாலிஃபாக்ஸ் துறைமுகத்தை சென்றடைந்த போது, ஆறு மாதங்களுக்குப் பின் திரும்பும் தங்கள் உறவினர்களைRead More →

Reading Time: < 1 minuteகடந்த வார இறுதியில் ரொரன்ரோவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் குறித்து நேற்று தகவல் வெளியிட்ட ரொரன்ரோ காவல்துறை தலைமை அதிகாரி மார்க் செளன்டர்ஸ், கடந்த வார இறுதி நாட்கள் வழக்கத்துக்கு மாறான நாட்களாக காணப்பட்டதாகவும், சனிக்கிழமையில் இருந்து 11 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றுள்ள 33 சதவீத சம்பவங்கள் ரொரன்ரோ நகரின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், அனேகமானRead More →

Reading Time: < 1 minuteசீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியரை பீஜிங்கில் உள்ள கனேடிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளதாக கனேடிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும், எனினும் இந்தச் சந்திப்பு குறித்த மேலதிக விபரங்களை அந்தரங்க இரகசியப் பாதுகாப்பு கருதி வெளியிட முடியாது என்றும், தொடர்ந்தும் அவருக்கான தூதரக உதவிகள் வழங்கப்படும் என்றும் வெளியுறவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த இந்தக் கைதினை சீன அரசின்Read More →

Reading Time: < 1 minuteWhite Rock பகுதியில் தனது இரண்டு நாய்கள் தொடரூந்தில் மோதப்படுவதில் இருந்து காப்பாற்ற முயன்ற Surreyஐச் சேர்ந்த 58 வயது ஆண் ஒருவர் தொடரூந்தினால் மோதப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில், Semiahmoo பூங்காவுக்க அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த அந்தப் பகுதியில் உள்ள தொடரூந்து தடத்தில் அவரது இரண்டு நாய்களும் நின்றுகொண்டிருந்த போது, அந்த வழியே தொடரூந்து ஒன்று மெதுவாக நகர்ந்து வந்ததாகவும்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பூமியின் வரைபடத்தில் உள்ள உட்கட்டமைப்புக்களை ஒளிரும் முப்பரிமாணத் தொழில்நுட்பம் மூலம் மாணவர் ஒருவர் வகைப்படுத்திக் காட்டி பாராட்டுக்களை பெற்று வருகிறார். நோவா ஸ்காடியாவை சேர்ந்தவர் 23 வயதான பீட்டர் அட்வு என்ற இளைஞர் கட்டிடக் கலை கல்வியை தொடர்ந்து வருகிறார். உலகின் எல்லைகளைப் பிரிக்க பல வரைபடங்கள் இருந்தாலும், டிஜிட்டல் முறையில் ஒவ்வொரு உள்கட்டமைப்பையும் தனித் தனியே பிரித்துRead More →

Reading Time: < 1 minuteஹொங் கொங் விடுதலையை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மக்கள் இணைந்து ரொறென்ரோவில் உள்ள ஹொங் கொங் பொருளாதார வர்த்தக மையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹொங் கொங் ஆட்சியாளர்களின் சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த போராட்டம் இடம்பெற்றது. 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கணிக்கீட்டின்படி சுமார் 3 இலட்சம் ஹொங் கொங் மக்கள் கனடியப் பிரஜாவுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வருகின்றனர். சர்ச்சைக்குரிய சட்டமூலத்தின் அடிப்படையில் ஹொங்Read More →

Reading Time: < 1 minuteஇன்ஸ்ரகிராம் சமூக வலைத்தளத்தில் பிரபலமடைவதற்காக இளம்பெண்ணொருவர் செய்த மோசமான காரியம் வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில், கனடா முழுவதிலும் அவருக்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. தான் பிரபலமாவதற்காக அஞ்சல் பெட்டிக்குள் குளிர்பானத்தை ஊற்றிய கனடாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். கனடாவைப் பொருத்தவரையில் அஞ்சல் பெட்டியை சேதப்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும். அவர் இதுதொடர்பாக வௌியிட்டுள்ள காணொளி ஒன்றில், அஞ்சல் பெட்டியின் மூடியைத் திறக்கும் அந்த இளம்பெண், தனதுRead More →

Reading Time: < 1 minuteநேற்று பிற்பகல் வேளையில் லிபேர்ட்டி விலேஜ் பகுதியில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ரொரன்ரோ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Strachan Avenueவிற்கு மேற்கே, East Liberty Street மற்றும் Pirandello Street பகுதியில் நேற்று பிற்பகல் 4:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போதிலும், அங்கு காயமடைந்தவர்கள் எவரும்Read More →

Reading Time: < 1 minuteநேற்று காலை Bridle Path பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Timberglade Court பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு நேற்று காலை ஆறு மணியளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்ட போதிலும், வெளியேதான் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தாங்கள் நம்புவதாக ரொரன்ரோ காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தாங்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்த போது, அங்கே குறித்த அந்த ஆண்Read More →

Reading Time: < 1 minuteYork University Heights பகுதியில், பெருமளவானோர் நிறைந்திருந்த கேளிக்கை விடுதி ஒன்றில் இன்று அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். Finch Avenue West மற்றும் Keele Street பகுதியில் அமைந்து்ளள District 45 எனப்படும் இரவுக் கேளிக்கை விடுதியினுள், இன்று அதிகாலை 2:15 அளவில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. அங்கு துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்த போதுRead More →