Reading Time: < 1 minute கனடா, ரொறன்ரோவில் உள்ள ஈட்டன் சென்ரரில் இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு 11:30 மணிக்குப் பின்னர் வாகனத்தில் வந்த ஒருவர் ஈட்டன் சென்ரர் வடகிழக்கு மூலையை அணுகி H&M கடைக்கு அருகே பல முறை துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்குRead More →

Reading Time: < 1 minute ஸ்காபரோ றீஜென்ட் பார்க் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒருவர் பலியானதாகவும், மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு பத்து மணியளவில், Middlefield Road மற்றும் McNicoll Avenue பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போது, அங்கே ஆண் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் காணப்பட்டுள்ளார். குறித்த அந்தRead More →

Reading Time: < 1 minute பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருப்பு நிற ஒப்பனை ஒளிப்படமொன்று வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து அவர் இதற்காக மனம்வருந்தி மன்னிப்பு கேட்டுள்ளார். 18 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படம், பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் வெளியாகியிருப்பது ஜஸ்டின் ட்ரூடோவின், முன்னகர்வுக்கு தடையாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில், இதற்காக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் எனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கான வாய்ப்பை உருவாக்கவும்,Read More →

Reading Time: < 1 minute Cherry Beach பகுதியில் இடம்பெற்றுள்ள இரண்டு வெவ்வேறு பாலியல் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, ரொரன்ரோ காவல்துறையினர் பொதுமக்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். அண்மைய சம்பவம் கடந்த 15ஆம் திகதி Cherry Beachற்கும் Regatta Roadற்கும் இடைப்பட்ட பகுதியில், Martin Goodman Trailஇல் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்தப் பகுதியில் அதிகாலை நான்கு மணிக்கும் ஐந்து மணிக்கும் இடையே நடந்து சென்றுகொண்டிருந்த பெண்மீது , இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் தாக்குதல்Read More →

Reading Time: < 1 minute ஹமில்டனின் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Reid Avenue பகுதியில் நேற்று இரவு 6:15 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, அங்கே ஆண் ஒருவர் மிக மோசமான காயங்களுடன் காணப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து இருவர்Read More →

Reading Time: < 1 minute கடந்த ஆண்டில் ஒன்ராறியோவில் மட்டும் அளவுக்கு அதிகமான போதை மருந்துகளைப் பயன்படுத்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 1,500ஆக பதிவாகியுள்ளது. ஒன்ராறியோ பொதுச் சுகாதாரப் பிரிவு அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில், கடந்த 2018ஆம் ஆண்டில் இவ்வாறு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,473 எனவும், இது கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை 2016ஆம் ஆண்டில் 867ஆக இருந்த இவ்வாறான மரணங்கள், 2017ஆம் ஆண்டில் 45Read More →

Reading Time: < 1 minute கனடா மற்றும் அமெரிக்கா வில் 3 பில்லியனுக்கும் குறைவான பறவைகளே உள்ளதாக, அதிர்ச்சி ஆய்வுத் தகவலொன்று வெளியாகியுள்ளது. புதிதாக மேற்கொள்ளப்பட்ட பாரிய ஆய்வு நடவடிக்கையின் பின்னரே, இந்த அதிர்ச்சி ஆய்வுத் தகவல் வெளிவந்துள்ளது. 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர், வட அமெரிக்காவில் 29 சதவீதமான பறவைகள் அழிந்துள்ளதாக, குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிய நாடுகளிலும் இதே நிலைமை நிலவுவதாக இந்த அறிக்கையில், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தோனேசியாவில் கூடுகளில் அடைத்துRead More →

Reading Time: < 1 minute யோர்க் பிராந்தியத்தில் உள்ள கிங் நகரத்தைச் சேர்ந்த ஒருவக்கு வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கியுள்ளதனை உறுதிப்படுத்தியுள்ள யோர்க் பிராந்திய பொது சுகாதார நிலையம், அங்குள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. கடந்த, 2019ஆம் ஆண்டில் இப்பகுதியில் வெஸ்ட் நைல் வைரஸ்க்கு இலக்கான முதல் மனிதராக இவர் பதிவு செய்யப்பட்டுள்ளார் இதனால் இப்பகுதியை அண்டிய மக்களை அவதானமாக இருக்குமாறு யோர்க் பிராந்திய பொது சுகாதார நிலையம், அறிவுறுத்தியுள்ளது. மேலும், யோர்க் பிராந்தியRead More →

Reading Time: < 1 minute நேற்று இரவு பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், வாகனத்தினால் மோதுண்டு பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். Wanless Drive மற்றும் Queen Mary Drive பகுதியில், நேற்று இரவு 8:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தின் போது படுகாயமடைந்த ஆண், உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து வி ட்டதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதிRead More →

Reading Time: < 1 minute மார்க்கம் பகுதியில் இன்று மாலை வேளையில் இடம்பெற்ற, பல்வேறு வாகனங்கள் தொடர்புபட்ட மோசமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Ninth Line மற்றும் நெடுஞ்சாலை 7 பகுதியில், இன்று மாலை நான்கு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை உறுதிப்படுத்தியுள்ள யோர்க் பிராந்திய காவல்துறையினர், இந்த விபத்தில் ஐந்து வாகனங்கள் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் சிக்குண்ட இரண்டு வெவ்வேறு வாகனங்களின் சாரதிகள் பலத்தRead More →

Reading Time: < 1 minute வடக்கு மனிடோபாவில் அநாதரவாக இருந்த 40இற்கும் மேற்பட்ட நாய் குட்டிகள், கல்கரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ரொக்கி மவுண்டன் மிருக மீட்பு இயக்குனர் ரோரி ஓ நீல்லின் உதவியுடன் குறித்த நாய் குட்டிகள், கொண்டு வரப்பட்டுள்ளன. எந்த உணவும் தங்குமிடமும் இல்லாமல் சுற்றித் திரிந்து, இடிபாடுகளில் வசித்து வந்த நாய் குட்டிகளே, இவ்வாறு மீட்கப்பட்டதாக ரோரி ஓ நீல் தெரிவித்தார். அங்கு வசிக்கும் ஒரு பெண்மணியால் குறித்த நாய் குட்டிகள், கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,Read More →

Reading Time: < 1 minute பிரம்டனில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பாரதூரமான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 58 வயது பெண் ஒருவர், சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்து விட்டதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 410 மற்றும் Sandalwood Parkway East அருகே, Checkerberry Crescent மற்றும் Serenity Lane பகுதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து, கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4:30 அளவில் குறித்த அந்தப் பெண் அதிகாரிகளால் மீட்கப்பட்டார். காவல்துறையினர் சம்பவRead More →