Reading Time: < 1 minute கனடாவின் எட்டோபிகோக்கிலுள்ள வர்த்தக கட்டடத் தொகுதியொன்றில் காருக்குள் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் பிராம்ப்டனைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க அமீர் நரேன் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 7.30 அளவில் கிப்லிங் மற்றும் ஸடீல்ஸ் அவனியு பகுதியில் குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கடுமையான காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயேRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் நடப்பு ஆண்டில் 325 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ரொறன்ரோ பொலிஸாரின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. நடப்பு ஆண்டிலிருந்து கடந்த 23ஆம் திகதி வரையிலான தரவுகளை கொண்டே, இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ரொறன்ரோ நகரில் பதிவாகியுள்ள 325 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், காயமடைந்த 484 பேரில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ டவுன்ரவுன் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் காயங்களுடன் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 50 வயதான றொபின் பெஸ்டியோ எனவும், அவருக்கு நிலையான முகவரி இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 24ஆம் திகதி முற்பகல் 11:40 அளவில், யோங் வீதி மற்றும் இஸ்சபெல்லா வீதிப் பகுதியில் அமைந்துள்ள ஜோர்ஜ் ஸிஸ்லொப் பூங்காவில் இருந்து, மீட்கப்பட்ட இவர், மருத்துவமனையில் சிகிச்சைRead More →

Reading Time: < 1 minute ஒஷாவாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வைத்து சுடப்பட்ட 17 வயதுச் சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், இச்சம்பவம் குறித்த விசாரணைகளை டூர்ஹம் பிராந்திய பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்தில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில், பின்னர் அங்கே தடயவியல் ஆய்வு அதிகாரிகளும் பிரசன்னமாகி ஆதாரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார்,Read More →

Reading Time: < 1 minute கிளிமஞ்சாரோ மலைப் பகுதியில், பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலைப்பகுதி முன்னணி சுற்றுலா தலமாக விளங்கிவரும் நிலையில் உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் இங்குவந்து மலையேறுவதும், பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபடுவதும் வழக்கம். இந்தநிலையில் கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் கைலோ என்ற சுற்றுலா பயணி, மலை உச்சியில் பாராக்லைடிங் சாகசத்தில்Read More →

Reading Time: < 1 minute லண்டன் பகுதியில் பெண்னொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபரை அடையாளம் காண, லண்டன் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த சந்தேகநபர், நடுத்தர உடற் தோற்றம், 5 அடி 10 அங்குலம், முழு முகம் கொண்ட மோட்டார் சைக்கிள் அணித்திருந்தார் என பொலிஸார் விபரித்துள்ளனர். மைட்லேண்ட் வீதிக்கு அருகிலுள்ள டன்டாஸ் வீதியில் ஒரு பெண் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது, ஒரு கருப்பு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவரை அணுகியதாகவும்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் 2010ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், 662 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வுத் தகவலொன்று தெரிவிக்கின்றது. இதன்மூலம், ஆண்டுக்கு சராசரியாக 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளதனை தெட்டத் தெளிவாக உணர்த்துகின்றது. பாதிப்புக்குள்ளான மக்களுக்கான கனேடிய உள்நாட்டு படுகொலை தடுப்பு முயற்சி (சி.டி.எச்.பி.ஐ.வி.பி) நடத்திய தேசிய ஆய்வின்படி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி மற்றும் குயெல்ப் பல்கலைக்கழகம் தலைமையிலான ஆராய்ச்சியின் ஒரு பகுதி புள்ளிவிபரங்கள் கனடாRead More →

Reading Time: < 1 minute ஒட்டாவாவில் அமைந்துள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தைப் பார்வையிட காத்திருப்போருக்கு, பொது சேவைகள் மற்றும் கொள்முதல் கனடா பிரிவு, அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மாத நடுப்பகுதியில் தேசிய போர் நினைவுச்சின்னத்தையொட்டிய பகுதியில், பாதை திருத்தும் வேலைகள் இருப்பதால், குறித்த பகுதி சில தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள நடைபாதைக் கற்களுக்கு இடையில் மணல் மற்றும் பாலிமர் கலவையை குழுவினர் மாற்றவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியின் போது, 81 வயதான நினைவுச்சின்னத்தின்Read More →

Reading Time: < 1 minute ஹெமில்டன் கிழக்கு பகுதியில் பெண்னொருவரை அச்சுறுத்தி பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற மூவரை பொலிஸார், தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) டக்செடோ அவென்யூ வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த பெண்னை, அச்சுறுத்தி கொள்ளையடித்து விட்டு, மூன்று பேர் கொண்ட குழுவொன்று தப்பிச் சென்றுள்ளது. இதன்போது, அவர்களிடன் கைத் துப்பாக்கியொன்று இருந்தாக, குறித்த பெண் பொலிஸாரிடம் சாட்சியம் வழங்கியுள்ளார். இவர்கள், கருப்பு நிறRead More →

Reading Time: < 1 minute நோர்த் யோர்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து இன்று மாலை 26 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Bathurst Streetற்கு தெற்கே, Sunnycrest வீதி மற்றும் Rockford வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில், இன்று மாலை 5:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, அங்கே குறித்த அந்த ஆண் உயிராபத்தான காயங்களுடன்Read More →

Reading Time: < 1 minute நேற்று பிற்பகல் ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பருவநிலை மாற்ற பாதுகாப்பினை வலியுறுத்தும் பேரணியில் 15,000ற்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர். மதியத்திற்கு முன்னதாகவே அங்கு கூடிய ஆயிரக்கணக்கானோர், “சுற்றுச்சூழல் உங்களது அரசியல் விளையாட்டுத் திடல் அல்ல” “உங்கள் மனச்சாட்சிப்படி நடந்துகொள்ளுங்கள்” உள்ளிட்ட கருத்துப்படும் படியான பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இளைஞர்காளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணியில் பல்வேறு வயதினரும் கலந்துகொண்டதுடன், பேரணியில் சுமார் 20,000 பேர் வரையில் கலந்துகொண்டதாக காவல்துறையினர்Read More →

Reading Time: < 1 minute தண்டர் பே- கெனோராவில் இந்த வாரம் பெண்னொருவர் கரடியின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) காலை 11:15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரைஸ் லேக் வீதியில் நடந்து கொண்டிருந்தபோது, கருப்பு கரடியால் தான் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இதன்பிறகு ரைஸ் லேக் வீதிப் பகுதியில் குறித்த கரடியை கண்டுபிடித்த பொலிஸார், இந்த தாக்குதலை பின்னர் உறுதி செய்தனர். இந்த மாதம்Read More →