Reading Time: < 1 minute கனடாவின் எயார் கனடா விமான சேவை பாலின ரீதியான மதிப்பளித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு திட்டமிடலை மேற்கொண்டுள்ளது. இதன்படி பயணிகளை வரவேற்கும் போது பாலின குறிப்புகளை கூறி வரவேற்பதை கைவிட எயார் கனடா திட்டமிட்டுள்ளது. அதாவது ‘பெண்கள் மற்றும் தாய்மார்களே’ என்று வரவேற்பதை நிறுத்தி பொதுவான வரவேற்பை வழங்கவுள்ளனர். திருநங்கைகள் குறித்து அக்கறை கொண்டுள்ள அவர்கள், ஆண் அல்லது பெண் என்று அடையாளத்தை விழிப்பூட்டும் சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்கவுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் உலுக்கிய இரட்டைக் கொலை வழக்கில் சந்தேகநபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த சந்தேகநபர் முன்னாள் மனைவியை கொடூரமாக கொலை செய்ததுடன், தப்பித்துச் செல்லும் நோக்கில் மூதாட்டி ஒருவரையும் கொலை செய்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி 41 வயதான Veronique Barbe என்பவரின் சடலம் அவரது குடும்ப இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டது. அவரது உடலில் மொத்தம் 17 கத்திக் குத்து காயங்கள்Read More →

Reading Time: < 1 minute நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாதசாரி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். புதன்கிழமை இரவு 8:30 அளவில், நெடுஞ்சாலை 401இல், Woodstockற்கு கிழக்கே இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்தப் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு அதற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது, நெடுஞ்சாலையில் கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பிறிதொரு வாகனம் அவர் மீது மேதிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. உயிராபத்தான நிலையில்Read More →

Reading Time: < 1 minute ரொரன்ரோவின் வடபகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றிற்கு வெளியே இன்று காலையில் சடலம் ஒன்றினை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். றிச்மண்ட்ஹில்லில் உள்ள Sixteenth Avenue அரச பாடசாலை வளாகத்தில் இருந்து இன்று காலை 8:30 அளவில் இந்தச் சடலம் மீட்கப்பட்டதாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த அந்தப் பாடசாலையில் இன்று வகுப்புகள் இடம்பெற்றதாகவும், மாணவர்களுக்கு சிறப்பு உதவிகளை வழங்க உளவியல் உத்தியோகத்தர்களும், சமூகப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டதாகவும், யோர்க்Read More →

Reading Time: < 1 minute காம்ப்பெல் நதிப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை, பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையின்போது சந்தேகநபரொருவர் காயமடைந்ததாகவும், பொலிஸார் எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் சந்தேகநபர்களான இவர்கள், வான்கூவரில் கண்காணிக்கப்பட்டதாகவும், வான்கூவர் பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இப்போது காவலில் வைக்கப்பட்டிருந்தாலும், எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் அவர்கள்மீது சுமத்தப்படவில்லை. வெர்மொன்ற் ட்ரைவ் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 2:30Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ, ரொறன்ரோ, கியூபெக் என பல்வேறு மாநிலங்களில் அதிர்ச்சிக் குற்றப்பின்னணியை கொண்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 300 இற்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இந்தக் கும்பலின் கடத்தல் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முயற்சித்த இரண்டு பெண்கள் பொலிஸாரைத் தொடர்பு கொண்டதை அடுத்து, கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் இருந்து குறித்த இந்த விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதனடிப்படையிலேயே இந்தக்Read More →

Reading Time: < 1 minute வின்னிபெக்கைத் தாக்கிய பனிப் புயலில் சுமார் 30,000 மரங்கள் சேதமடைந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வீதியோரங்களிலும், அப்பகுதி மக்களுக்கும் இடையூறை ஏற்படுத்தும் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  இதற்காக, கல்கரி பூங்கா ஊழியர்கள், வின்னிபெக்கிற்கு சென்றுள்ளனர். இந்த பணியில் நூற்றுக் கணக்கான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த துப்பரவுப் பணிகள் நிறைவடைய ஒருமாத காலம் ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பின்னர், வின்னிபெக்கில் இப்படியானதொரு மோசமான பனிப் புயல்Read More →

Reading Time: < 1 minute இன்று காலை வேளையில் மிசிசாகாவில் இடம்பெற்ற கோரமான வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். Hurontario Street மற்றும் Matheson Boulevard East பகுதியில், இன்று காலை 5:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. பாரவூர்தி ஒன்று தொடர்புபட்ட வாகன விபத்து நேர்ந்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினரும் அவசர மருத்துவப் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அங்கே ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minute நேற்று இரவு நெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலையின் மேற்கு நோக்கிய வழித்தடத்தில் இருந்து இஸ்லிங்டன் அவனியூவுக்கு வெளியேறும் பகுதியில், நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த அந்த ஆண் செலுத்திச் சென்ற வானம், சரக்கு ஊர்தியின் பின்புறத்தில் மோதுண்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து சுமார் 30 வயதுRead More →

Reading Time: < 1 minute 13 வயதுச் சிறுவன் ஒருவர் செலுத்திச் சென்ற SUV ரக வாகனம் ஒன்று பிறிதொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், வாகனத்தில் இருந்த பிறிதொரு 13 வயதுச் சிறுவன் உயிராபத்தான காயங்களுக்கு உள்ளான சம்பவம் நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று அதிகாலை 4:40 அளவில், Thornhill பகுதி, Dufferin Street மற்றும் Centre Street பகுதியில் சென்ற வாகனம் ஒன்றில் சந்தேகம் கொண்ட யோர்க் பிராந்திய காவல்துறையினர், அந்த வாகனத்தைRead More →

Reading Time: < 1 minute உலகில் அனைத்து பாலினத்தவர்களும் சமனானவர்கள் என்பதை உணர்த்தும் வகையில் எயார் கனடா விமான நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனடா அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னர் மூன்றாம் பாலினத்தவர்களின் கடவுச் சீட்டில் உள்ள பாலின அடையாளம் என்ற வரியில் ஆண் அல்லது பெண் என்பதற்கு பதிலாக non-binary ‘X (மூன்றாம் பாலினத்தவர்கள்) என குறிப்பிடலாம் என்று அறிவித்தது. இந்த நிலையில் குறித்த நடைமுறையை அமுல்படுத்தும் வகையில் எயார் கனடா விமானRead More →

Reading Time: < 1 minute துருக்கிப் படைகளினால் வடக்கு சிரியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலுக்கு பதிலடியாக அந்த நாட்டிற்கான ராணுவ உபகரணங்கள் தொடர்பான ‘புதிய ஏற்றுமதி அனுமதிகளை’ தற்காலிகமாக ரத்துச் செய்வதாக கனடா அறிவித்துள்ளது. சிரியாவுக்குள் துருக்கியின் படை நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டின் சர்வதேச விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருதலைப்பட்ச போர் நடவடிக்கை ஏற்கனவே பலவீனமாக உள்ள பிராந்தியத்தை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன் மனிதாபிமான நிலைமையையும்Read More →