Reading Time: < 1 minute ரொறன்ரோவில் கடந்த மாதம் உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த நிலையில் அடையாளங் காணப்பட்டுள்ளனர். கொலை மற்றும் தற்கொலை மூலம் உயிரிழந்ததாக கூறப்படும், இருவரில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் அடங்குகின்றனர். இதில், 22 வயதான ரொறான்ரோவைச் சேர்ந்த பெத்தேல்ஹெம் கெலெட்டா, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவரை கொலை செய்தவராகச் சந்தேகிக்கப்படும் ரொறான்ரோவைச் சேர்ந்த 30 வயதானRead More →

Reading Time: < 1 minute மனித உடலின் நலனை மேலும் அதிகரிப்பதற்கு தோலின் மீது தினமும் சிறிதளவாவது சூரிய ஒளி படவேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். ஆனால், தோல் மீது சூரிய ஒளிபடுவதற்கும், மனித குடலுக்குள் வசிக்கும் லட்சக்கணக்கான பயன்மிக்க நுண்ணுயிரிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை, முதல் முறையாக கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சூரிய கதிரிலுள்ள புற ஊதா கதிர்கள், தோலின் மீது படும்போது, விற்றமின் – டி, நம் உடலில் உற்பத்தியாகிறது.Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள சானிச் பாடசாலை ஊழியர்களின் போராட்டம், மூன்றாவது வாரமாகவும் தொடர்கின்றது. கடந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டுவரும் சானிச் பாடசாலை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்புப் போராட்டத்தினால், 700இற்கும் மேற்பட்ட மாவணர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாவணர்களின் நலன் கருதி, சானிச் பாடசாலை ஊழியர்களும், பாடசாலை மாவட்ட நிர்வாகத்தினரும் ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கு தீர்மானித்தனர். இதனால் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அந்தப்Read More →

Reading Time: < 1 minute ப்ளஃபர்ஸ் (Bluffs) பூங்காவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து, ரொறன்ரோ பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சடலம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும், குறித்த சடலம் குறித்த எவ்வித தகவலையும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பிரிம்லி வீதியின் அடிவாரத்தில் உள்ள பூங்காவின், வாகன நிறுத்துமிடத்தில் எரிந்து கொண்டிருந்த வாகனத்திலிருந்து நேற்றுRead More →

Reading Time: < 1 minute வடக்கு டகோட்டாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மசகு எண்ணெய் கசிவு, சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு டகோட்டாவில் கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி, 1.4 மில்லியன் லிட்டர் (9,120 பீப்பாய்கள்) எண்ணெய் கொட்டப்பட்டதை அடுத்து கீஸ்டோன் குழாய் மூடப்பட்டது. இதனையடுத்து இந்த கசிவினை சீரமைக்கும் பணியில், டி.சி எனர்ஜி முன்னெடுத்து வந்தது. இந்த நிலையில் இப்பணி சீராமைக்கப்பட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழமைக்கு திரும்பியது. தற்போது மசகு எண்ணெய், குறைந்தRead More →

Reading Time: < 1 minute சர்ரே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 104 அவென்யூவின் 13200 தொகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வேளையில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குவாண்ட்லன் பார்க் மேல்நிலைப்பள்ளிக்கு அருகிலேயே குறித்த நபர், இலக்கு வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்தபோது, குறித்த நபர் உயிராபத்தான நிலையில் இருந்ததாகவும் பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மாயமான சிறுமியும் சிறுவனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் அவர்களின் தந்தையே கடத்தியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுங் லீ (13) என்ற சிறுவனும் ஜுங் லீ (15) என்ற அவனது சகோதரியும் கடந்த 6ஆம் திகதி காணாமல் போயிருந்தனர். இதனைத் தொடர்ந்து Amber Alert எனப்படும் சிறுவர்கள் கடத்தப்பட்டால் விடப்படும் எச்சரிக்கையையும் பொலிஸார் விடுத்திருந்தனர். இந்நிலையில் சுங் லீ மற்றும் ஜுங் லீ ஆகிய இருவரும் பொலிஸாரால்Read More →

Reading Time: < 1 minute எட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கார் ஒன்றும், பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கார் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் சில பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனேடிய காலநிலை அவதான நிலையத்தினை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனது. ஒட்டாவா, எட்மன்டன், லண்டன் உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு கடும் குளிருடனான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள மக்கள், அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute லண்டன் பகுதியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 31 பேர் ஓபியாய்ட் தொடர்பான, அதிகப்படியான மருந்துகளால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மிடில்செக்ஸ்- லண்டன் அவசர மருத்துவ சேவைகளின் செயற்பாட்டு கண்காணிப்பாளர் ஆடம் பென்னட், கூறுகையில், ‘இந்த ஆண்டு 438 அதிகப்படியான அழைப்புகளுக்கு துணை மருத்துவர்கள் பதிலளித்துள்ளனர். மேலும் 161 பேருக்கு, ஓபியாய்டுகளின் விளைவுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் 219 டோஸ் நலோக்சோன் வழங்கியுள்ளனர்’Read More →

Reading Time: < 1 minute வடக்கு ஒன்றாரியோ நெடுஞ்சாலைகள் 11 மற்றும் 17இல், குளிர்கால வீதி பராமரிப்பை மேம்படுத்துவதற்கான சட்டமூலம் குறித்து விவாதிக்க, (முஷ்கெகோவுக்- ஜேம்ஸ் பே என்டிபி எம்.பி.பி) கை போர்கோயின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்காக குயின்ஸ் பூங்காவில் கை போர்கோயின் பத்திரிகையாளர் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். வடக்கு ஒன்ராறியோ நெடுஞ்சாலைகளை பாதுகாப்பானதாக்குவது மிக முக்கிமானதொரு விடயம் என்பதனை அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். குளிர்காலத்தில் மோசமாக பராமரிக்கப்படும் வீதிகளில் ஏற்படும் விபத்துக்களினால், பலRead More →

Reading Time: < 1 minute சட்பரியில் உள்ள ஹெல்த் சயின்சஸ் நோர்த் (எச்.எஸ்.என்), நாள்தோறும் அதிகரிக்கும் நோயாளிகளின் கூட்டத்தை குறைக்க புதிய தீர்மானமொன்றை தீர்மானித்துள்ளது. குறித்த மருத்துவமனையிலிருந்து, குழந்தைகள் சிகிச்சை மையத்தை அகற்றுவதன் மூலம், நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்ற முடிவுக்கு ஹெல்த் சயின்சஸ் நோர்த் நிர்வாகம் வந்துள்ளது. இவ்வாறு ஹெல்த் சயின்சஸ் நோர்த்திலிருந்து குழந்தைகள் சிகிச்சை மையத்தை அகற்றுவதன் மூலம், 56 புதிய மருத்துவமனை படுக்கைகளை உருவாக்க முடியுமென மருத்துவமனை நிர்வாகம் நம்புகின்றது.Read More →