Reading Time: < 1 minute கனடாவில் பனிக் காலம் தொடங்கியுள்ள நிலையில், வீடற்றவர்களுக்கு உதவும் வகையில் மனிடோபாவின் முதல் நாடுகளின் சுகாதார மற்றும் சமூக செயலகம் பொதுமக்களிடம் உதவிக் கோரியுள்ளது. ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த உதவித் திட்டத்தின் மூலம், இம்முறை 400 உதவிப் பொருட்கள் கொண்ட பொதிகளை உருவாக்க செயலகம் திட்டமிட்டுள்ளது. இதனால் குளிர்காலத்தில் அவதிப்படும் வீடற்றவர்களுக்கு உதவ முதல் நாடுகளின் சுகாதார மற்றும் சமூக செயலகம், நன்கொடைகளை எதிர்பார்த்துள்ளது. வின்னிபெக்கில் வணிகங்கள் மற்றும் சமூகRead More →

Reading Time: < 1 minute கல்கரியில் வீடு விற்பனை மந்தமான நிலையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், தனி வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2018ஆம் ஆண்டு முதல் செப்ரெம்பர் 2019ஆம் ஆண்டு வரையிலான கனடா புள்ளிவிபரம் வெளியிட்டுள்ள புதிய வீட்டு விலைக் குறியீட்டில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய வீட்டின் சராசரி விலையில் 2.2 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதனை, குறித்த அறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது. எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில்Read More →

Reading Time: < 1 minute அல்பேர்ட்டா பொலிஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் மில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள போதை மருந்துகள், பணம் மற்றும் துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளனர். மிகப்பெரிய போதைப்பொருள் வலையமைப்பின் மையத்தில் இருப்பதாகக் கூறப்படும் ஒரு கல்கரி நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் 53 வயதான வாரன் லோவ் என பொலிஸார அடையாளம் வெளியிட்டுள்ளனர். கல்கரி அதிகாரிகள் தலைமையிலான இரண்டு ஆண்டு விசாரணையின் பின்னரே, குறித்த ஆபத்தான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, 15 மில்லியன்Read More →

Reading Time: < 1 minute கனடிய மக்களின் நிதிசார்ந்த தகவல்கள், கனடிய அரசினால் அமெரிக்க அரசுடன் பகிரப்படும் அளவு வெகுவாக உயர்வடைந்துள்ளமை தொடர்பில், கனடிய இறையாண்மையை பாதுகாப்பதற்கான கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு இருநாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது முதல், இவ்வெண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக அது சுட்டிக்காட்டியுள்ளது. வரி அறவிடும் நோக்கங்களுக்காக, கனடிய வருமானவரி திணைக்களத்தால், 2014ஆம் ஆண்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனடியர்களின் நிதிசார் தரவுகள், அமெரிக்க உள்ளக வருமானவரி திணைக்களத்துடன் பகிரப்பட்டிருந்தன.Read More →

Reading Time: < 1 minute லண்டன் கிழக்கு பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 2 துப்பாக்கிகள், ஒரு பாலிஸ்டிக் உடை மற்றும் வெடிமருந்துகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அடிலெய்ட் வீதி மற்றும் ஹாமில்டன் வீதிக்கு அருகிலுள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே குறித்த தடைசெய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், இந்த சம்வத்துடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் டிசம்பர் பிற்பகுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல்Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ- தேம்ஸ்ஃபோர்ட் வடகிழக்கில் இடம்பெற்ற மூன்று வாகனங்கள் தொடர்புபட்ட வாகன விபத்தில் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார். ஆக்ஸ்போர்ட் கவுண்டியைச் சேர்ந்த பெண்னொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் மற்றும் அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஒரு மினி வான், பிக்-அப் டிரக் மற்றும் ஒரு டிராக்டர்-டிரெய்லர் ஆகியவை அடங்கும். மினி வானின் சாரதியான 53 வயதான பெண்னொருவரே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, உயிரிழந்தார். பிக்கப் டிரக்கின்Read More →

Reading Time: < 1 minute எட்மண்டனில் தேசிய பூங்கா ரயில்களால் அதிகளவான கிரிஸ்லி கரடிகள் மோதப்பட்டு உயிரிழப்பதாக ஆல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணர் மற்றும் உயிரியல் பேராசிரியரான கொலின் கசாடி செயின்ட் கிளெய்ர் தலைமையிலான குழு பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனடா பூங்காக்கள் மற்றும் கனடிய பசிபிக் ரயில்வே அதிகாரிகள் 2000ஆம் ஆண்டில் பான்ஃப் தேசிய பூங்காவில் ரயில்களால் கிரிஸ்லி கரடிகள் கொல்லப்படுவதை அவதானித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute சவுதி அரேபியாவில் இருந்து பயணித்த விமானம் கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த 2 வயது குழந்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் விமானம் தரையிறக்கப்பட்டது. எனினும் குழந்தை உயிரிழந்துள்ளது. சவுதியின் ஜெட்டாவில் இருந்து நேற்று (செவ்வாய்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு பயணிகள் விமானம் வொஷிங்ரனை நோக்கிப் பயணித்தது. இந்நிலையில் விமானத்தில் இருந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் விமானமானது கனடாவின் நியூபௌண்ட்லான்ட் (Newfoundland) மாகாணத்தில்Read More →

Reading Time: < 1 minute ரஷ்யா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல் குறித்து கனடா தெளிவான பார்வையை (clear eyed) கொண்டிருக்க வேண்டும் என கனடாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரிச்சார்ட் ஃபடென் தெரிவித்துள்ளார். குறித்த இரு நாடுகளும் ஏற்படுத்தும் அபாயங்கள் நிச்சயமாக வேறுபட்டவை எனவும் அவை பொதுவாக அந்நாடுகளின் நலன் சார்ந்தவையாகவும் மேற்கு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் அமைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது முன்னோடியான ஸ்டீபன் ஹார்ப்பர்Read More →

Reading Time: < 1 minute கனடா – ரொறென்ரோ நகரில் எட்டாவது மாடி யன்னலிலிருந்து வளி சீராக்கி குளிர்சாதனம் ஒன்று குழந்தைகளை கொண்டு தள்ளுவண்டியின் மீது வீழ்ந்ததில் 2 வயதுச் சிறுமியொருவர் உயிரிழந்தார். ரொறென்ரோ நகரில், பிள்ளையைத் தள்ளுவண்டியில் வைத்துத் தாயார் ஒருவர் நடத்து சென்றுகொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளிர்சாதனம் விழுந்ததில் சிறுமியின் தாயாருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி பலத்த காயங்களின் காரணமாக சிகிச்சைRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் கடந்த மாதம் உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த நிலையில் அடையாளங் காணப்பட்டுள்ளனர். கொலை மற்றும் தற்கொலை மூலம் உயிரிழந்ததாக கூறப்படும், இருவரில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் அடங்குகின்றனர். இதில், 22 வயதான ரொறான்ரோவைச் சேர்ந்த பெத்தேல்ஹெம் கெலெட்டா, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவரை கொலை செய்தவராகச் சந்தேகிக்கப்படும் ரொறான்ரோவைச் சேர்ந்த 30 வயதானRead More →

Reading Time: < 1 minute மனித உடலின் நலனை மேலும் அதிகரிப்பதற்கு தோலின் மீது தினமும் சிறிதளவாவது சூரிய ஒளி படவேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். ஆனால், தோல் மீது சூரிய ஒளிபடுவதற்கும், மனித குடலுக்குள் வசிக்கும் லட்சக்கணக்கான பயன்மிக்க நுண்ணுயிரிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை, முதல் முறையாக கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சூரிய கதிரிலுள்ள புற ஊதா கதிர்கள், தோலின் மீது படும்போது, விற்றமின் – டி, நம் உடலில் உற்பத்தியாகிறது.Read More →