Reading Time: < 1 minute ‘பாங்க் ஒஃப் கனடா அதன் முக்கிய வட்டி விகிதத்தை இன்று (புதன்கிழமை) மாற்றாமல் விட்டுவிடும் என்று கனடா பங்குச்சந்தை கண்காணிப்பு நிபுணர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விகிதக் குறைப்பு மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து கூர்மையாக அவதானித்து வருகின்றனர். அதேவேளை, ‘பாங்க் ஒஃப் கனடா அதன் வட்டி விகிதத்தை ஒரே இரவில் 1.75% ஆக வைத்திருக்கும் என்று கணித்துள்ளது. தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஒரு கணக்கெடுப்பில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பெண்ணொருவர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆர்யன் ஷபாசி என்ற 55 வயதான பெண்ணை கடந்த 29 ஆம் திகதி மாலை 6 மணி முதல் காணவில்லை என ரொறென்ரோ பொலிசார் சமூகவலை தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆர்யன் – எம்.ரி. பிலசன்ட் பாதை மற்றும் எர்க்கின் அவனியு பகுதிகளில் கடைசியாக காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பெண்ணின் உயரம், உடல்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ நகரின் மேற்கு முனையில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருளில் மூழ்கியிருந்த நிலையில், இந்நிலைமை தற்போது முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளதாக ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் இருளில் மூழ்கியிருந்ததாக கூறப்படுகின்றது. மாலை 6 மணிக்கு முன்னதாக ஏற்பட்ட இந்த மின் தடையால், ப்ளூர் ஸ்ட்ரீட் மற்றும் குயின்ஸ்வே, கிப்ளிங் அவென்யூ டு விண்டர்மீர் அவென்யூ இடையேயான பகுதிகளில் சுமார் 6,000Read More →

Reading Time: < 1 minute கனடாவின் கிங்ஸ்டனுக்கு கிழக்கே 401 ஆவது நெடுஞ்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பல வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். 15 வது நெடுஞ்சாலை மற்றும் மொன்றியல் வீதிக்கு இடையில் பிற்பகல் 2:30 அளவில் நெடுஞ்சாலை 401 இன் மேற்குப் பாதையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 முதல் 40 வாகனங்கள் மற்றும் உழவு இயந்திர டிரெய்லர்கள் மோதிக் கொண்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute ரொறெண்றோ பொலிசார் கடந்த மாதம் ஸ்கார்பரோ நகர மையத்தில் இடம்பெற்ற இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி மாலை 6 மணியளவில் ஒரு வர்த்தக வளாக வாகன நிறுத்துமிடத்தில் முதல் சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர்களுடன் சிறப்பு அங்காடிக்கு சென்றிருந்த 19 வயதான இளைஞர் ஒருவர் தனது காரில் ஏறுவதற்கு சென்ற போது,Read More →

Reading Time: < 1 minute மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக ஒன்ராறியோ ஆண்டுக்கு, 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்கிறது. இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பினை, ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது முற்றிலும் யாருக்கும் ஏற்படலாம், இவர்கள் எங்கள் குழந்தைகள், அவர்களைப் பாதுகாப்பது நமது பொறுப்பு. புதிய மூலோபாயம் வலுவானதாக இருக்கும். தப்பிப்பிழைப்பவர்கள் ஆதரிக்கப்படுவதையும், குற்றவாளிகள் பொறுப்புக்கூறப்படுவதையும் உறுதி செய்வார்கள்” எனRead More →

Reading Time: < 1 minute எதிர்வரும் 2020ஆம் ஆண்டிற்கான தனது முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை, ரொறன்ரோ பொலிஸ் சேவை வெளியிட்டுள்ளது இந்த வரவு செலவுத் திட்டமானது, நடப்பு 2019ஆம் ஆண்டை விட 3.9 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட கோரிக்கை மொத்தம் 1.076 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும் என ரொறன்ரோ பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது. இந்த அதிகரிப்பின் பெரும்பகுதி கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தங்களில் தேவைகளை நோக்கி செல்லும் எனRead More →

Reading Time: < 1 minute அல்பேர்ட்டாவில் ஹெல்த் சர்வீசஸ் (ஏ.எச்.எஸ்)இல் பாரிய ஆட்குறைப்பு நிகழவுள்ளதனை, அல்பேர்ட்டா ஐக்கிய செவிலியர்கள் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய, 750இற்க்கும் மேற்பட்ட முன்னணி வரிசை செவிலியர்களை ‘அல்பேர்ட்டா ஹெல்த் சர்வீசஸ்’ இழக்கவுள்ளது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல், முன்றாண்டுகளுக்கு இந்த ஆட்குறைப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை ஏ.எச்.எஸ்ஸின் முன்னணி பேச்சாளர் ரெய்லீன் ஃபிட்ஸ், அறிவித்ததாக, அல்பேர்ட்டா ஐக்கிய செவிலியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி,Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் சில பகுதிகளில் பல மணிநேர உறைபனி மழை அல்லது பனித் துகள்களைக் காணலாம் என கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சுற்றுச் சூழல் திணைக்களம், ரொறன்ரோ நகரத்திற்காக வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையிலேயே, இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் அதிகமான பனிப்பொழிவு ஏற்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமை திங்கட்கிழமை வரை தொடரும் எனவும், திங்கள்கிழமை காலைக்குள் சிலRead More →

Reading Time: < 1 minute லோவர்மெயிண் லேண்ட்டில் கடந்த 30 மணித்தியாலங்களில் மூன்று பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக, பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளிலேயே இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மாலை, லாட்னர் ட்ரங்க் வீதி மற்றும் ஹார்வெஸ்ட் டிரைவ் சந்திக்கும் இடத்தில் இடம்பெற்ற விபத்து 30வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேபோல, வியாழக்கிழமை கிளியர்ப்ரூக் பகுதியில் பிக்கப் டிரக் வாகனமொன்று மோதிய விபத்தில் 40 வயதான பெண் பாதசாரியொருவர் உயிரிழந்தார். புதன்கிழமைRead More →

Reading Time: < 1 minute ஸ்கார்பாரோவில் கடந்த மாதம் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார், கைதுசெய்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி, பார்மசி அவென்யூ அருகே எல்லெஸ்மியர் வீதிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 20 மாத குழந்தை, தாய் மற்றும் பாட்டி ஆகியோர் மீது வாகனம் மோதியதில் மூவரும் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அக்காரில் பயணித்த 40 வயது மதிக்கதக்க ஒருவரையே தற்போது பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் மீது, உதவி செய்வதைத்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ- மிசிசாகாவில் இரண்டு வாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மில்க்ரீக் ட்ரைவ் மற்றும் எரின் மில்ஸ் பார்க்வே பகுதியில், நேற்று (வியாழக்கிழமை) இரவு 9:30 மணிக்கு முன்னதாக இந்த விபத்து சம்பவித்துள்ளது. லொறி மற்றும் ட்ரக் வாகனங்களே இந்த விபத்தில் தொடர்புபட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற பின்னர், லொறி சாரதி சம்பவ இடத்திலேயே தரித்து நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து எவ்வாறுRead More →