Reading Time: < 1 minute ரொறன்ரோ- பிராம்ப்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், பெண்னொருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளார். ஃபயர்சைட் ட்ரைவ் மற்றும் நேவி கிரசண்ட் பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இத்தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், பெண்னொருவரை சடலமாக கண்டெடுத்துள்ளனர். எனினும், குறித்த பெண் தொடர்பாகவோ அல்லது இந்த தீவிபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பாகவோ பொலிஸார் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.Read More →

Reading Time: < 1 minute வின்ஸ்டர்- அம்பஸ்டர் பாலத்தின் வழியாக சென்ற வணிக டிரக் ஒன்றை சோதித்த கனடா எல்லை சேவைகள் நிறுவனம், சுமார் 200 கிலோகிராம் சந்தேகத்திற்குரிய மெத்தாம்பேட்டமைன்னை கைப்பற்றியுள்ளது. மேலும், அம்பஸ்டர் பாலத்தின் வழியாக பயணித்த இந்த டிரக்கிலிருந்து, 96 கிலோகிராம் சந்தேகத்திற்குரிய கோகோயினையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதவிர பல கைத்துப்பாக்கிகள் மற்றும் அரை தானியங்கி துப்பாக்கிகள் என்பவற்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தெற்கு ஒன்றாரியோ பிரிவின் முகவர்கள் வெளியிட்டுள்ள செய்தியின் படி,Read More →

Reading Time: < 1 minute அப்பர் வெலிங்டனில் பகுதியில் பாதசாரியொருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகன சாரதியொருவரை, பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 12:15 மணியளவில், இன்வெர்னஸ் அவென்யூ கிழக்கில் அப்பர் வெலிங்டன் பகுதியில் நடந்துக் கொண்டிருந்த 29 வயதான ஆனொருவர் மீதே இவ்வாறு வாகனம் மோதியுள்ளது. எனினும், இந்த விபத்தின் பின்னர், வாகனத்தால் மோதப்பட்ட அந்த நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய குறித்தRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல இடங்களிலும் கடுமையான பனி பொழிவு நிலவுவதால், வாகன சாரதிகள் எச்சரிக்கையாக வாகனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான குளிர்கால சூழ்நிலை காரணமாக சில்லிவாக் மற்றும் ஹோப் இடையேயான நெடுஞ்சாலை 1 இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஹோப் மற்றும் மெரிட் இடையேயான நெடுஞ்சாலை 5 கோக்கிஹல்லா இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் தேவையற்ற பயணங்கள் அனைத்தையும் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கிழக்கு கனடாவைச் சேர்ந்த அனைத்து ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள பிக்கரிங் அணுமின் நிலையத்தில், தவறான அபாயத்தைக் குறிக்கும் எச்சரிக்கை அலாரம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையங்களில் ஒன்றான, பிக்கரிங் கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான டொறாண்டோவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த பகுதியில், நேற்று காலை 7:30 மணிக்கு திடீரென எச்சரிக்கை ஒன்றுRead More →

Reading Time: < 1 minute இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழ்க் கவிஞரான சேரனின் ‘அஞர்’ கவிதைத்தொகுப்புக்கு 2019-ம் ஆண்டுக்கான விகடன் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பிரபல ‘ஆனந்தவிகடன்’ வார இதழை வெளியிட்டுவரும் விகடன் குழுமத்தின் சார்பில் தமிழில் வெளியாகும் கதை, கவிதை, கட்டுரை, புதினங்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான இலக்கியப் படைப்புகளுக்கான விருதுகள் இன்று வெளியான ஆனந்தவிகடன் இதழில் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது, சேரன் எழுதியRead More →

Reading Time: < 1 minute உக்ரைக் விமானம் விபத்து குறித்த விசாரணை தொடர்பாக ‘உலகம் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது ஈரான்’ என கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்கோஸ் எச்சரித்துள்ளார். அத்துடன் இந்த விபத்துக்கு காலம் நிச்சயம் பதில் செல்லும் என்றும் ஈரானின் வெளிப்படைத் தன்மையை சர்வதேச சமூகம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணித்த உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில்Read More →

Reading Time: < 1 minute பிரின்ஸ் எட்வர்ட் கவுண்டியில் இடம்பெற்ற விபத்தில், ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றாரியோ கான்செகன் அருகே உள்ள கவுண்டி வீதி 1 மற்றும் அலெக்சாண்டர் வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. எனினும், எவ்வாறு விபத்து நிகழ்ந்தது, இந்த விபத்தில் எத்தனை வாகனங்கள் தொடர்பு பட்டுள்ள என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. காயமடைந்தவர்களில் தெரியாதRead More →

Reading Time: < 1 minute லண்டன் பகுதியில் வீடற்றவர்களுக்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரி, சுமார் இரண்டு டஸன் கணக்கானோர் போராட்டம் நடத்தினர். வெலிங்டன் மற்றும் ஹார்டன் வீதிகளுக்கு அருகிலுள்ள சால்வேஷன் ஆர்மி வளாகத்திற்கு அருகாமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தின் போது, குளிர்ந்த தூறலையும் பொருட்படுத்தாது அணிவகுத்த போராட்டக் காரர்கள், தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான பதாதைகளை ஏந்திய வாறு, டஃபெரின் அவென்யூவில் உள்ள நகர மண்டபத்தை நோக்கி நகரத்தின் வழியேRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் இந்த வார இறுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு. சில பகுதிகளில் உறைபனி மழையும் இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மொத்த அளவுகள் குறித்து ‘கணிசமான நிச்சயமற்ற தன்மை’ இருப்பதாக தேசிய வானிலை நிறுவனம் ஒப்புக் கொண்டாலும், 25 முதல் 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும்Read More →

Reading Time: < 1 minute மத்திய ஒட்டாவாவின் மேற்கே அடுக்குமாடி கட்டடமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரிட்டானியா பூங்காவின் கிழக்கு எல்லையின் ஜெஃபிர் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி கட்டடமொன்றிலேயே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2:50 மணியளவில் இந்த தீவிபத்து சம்பவித்துள்ளது. இந்த தீவிபத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், உணர்வற்ற நிலையில் ஒருவரை கண்டுள்ளனர். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதனை உறுதி செய்தனர். இதன்பிறகு படுகாயங்களுடன் காணப்பட்டRead More →

Reading Time: < 1 minute மெட்ரோ வன்கூவரில் எதிர்வரும் நாட்களில் அதிகமான பனிப்பொழிவு ஏற்படும் என்பதால், அங்குள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மெட்ரோ வன்கூவர், ஃப்ரேசர் பள்ளத்தாக்கு மற்றும் வான்கூவர் தீவின் சில பகுதிகளுக்கு தற்போது சிறப்பு வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில், மெட்ரோ வன்கூவரில் எதிர்வரும் நாட்களில் 25 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆகையால் வாகன சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும்,Read More →