Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கனடா எல்லை பகுதியில் தனது படையினை நிறுத்தும் அமெரிக்காவின் யோசனைக்கு கனடா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் குறித்த முன்னெடுப்பு தேவையற்ற ஒன்று எனவும், குறித்த நடவடிக்கையினால் இரு தரப்பு உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு எனவும் கனடா நேற்று தெரிவித்துள்ளது. மேலும் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்துடன் கடந்த 18 மாதங்களாக தாம் நல்ல உறவினை பேணிவரும்Read More →

Reading Time: < 1 minute ஒண்டாரியோவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் 85 புதிய நோயாளர்கள் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளதாக சற்றுமுன் ஒண்டாரியோ அரசு தெரிவித்துள்ளது . நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து செல்வத்தையும், நிலைமை எல்லை மீறி போவதாகவும், நிலைமை இப்படியே தொடர்ந்தால், மேலும் கடும் நடவடிக்கையை எடுத்து இந்த நிலைமையை சமாளிக்க வேண்டி ஏற்படும் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minute இவ்வருடம் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற இருந்தது. ஆனால், தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கொரோனா அச்சம் காரணமாக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டு ஒலிம்பிக் கமிட்டிகள் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கனடாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13 பேரும் ஒன்ராறியோவில் 6 பேரும் கியூபெக்கில் 04 பேரும் அல்பேர்ட்டாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு இத்துறவை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2,091 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதிலும் ஒன்ராறியோவில் 503 பேரும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 472Read More →

Reading Time: < 1 minute ரொறோண்டோவைச் சேர்ந்த 70 வயதுள்ள ஒருவர் கோவிட்-19 வியாதிக்குப் பலியாகியுள்ளதாக ரொறோண்டோ பொதுச் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவரது மரணம் ரொறோண்டோவின் முதலாவது கொரோனாவைரஸ் மரணமாகக் கருதப்படுகிறது. இன்று (ஞாயிறு) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில், மரணமாகியவர் சமீபத்தில் இங்கிலாந்துக்குச் சென்று வந்தவர் என சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரொறோண்டோவிலுள்ள ஒரு மருத்துவமனையில் அவர் பரிசோதிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அவர் சுய தனிமையைப் பேணியிருந்தார் எனவும் அவர் பற்றிய தகவல்கள் மருத்துவமனையினால் பொதுச்சுகாதாரத்Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸினால் கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1231 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) வெளியான முடிவுகளின் படி, ஒன்ராறியோவில் 377 பேரும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 348 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆல்பேர்ட்டாவில் 226 பேர், கியூபெக்கில் 202 பேர், சஸ்காட்செவன்னில் 25 பேர், மனிடோபாவில் 17 பேரும் என நாடு முழுவதும் 1231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அதிக எண்ணிக்கையிலானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் விவசாய உணவு உற்பத்தியில், எல்லைக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து உணவு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் அல்லது அமெரிக்கர்கள் அல்லாத பயணிகளுக்கு எல்லை கட்டுப்பாடுகளை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதில் இராஜதந்திரிகள், விமான ஊழியர்கள் மற்றும் அவர்களது உடனடி குடும்பங்களுக்கு சில விதிவிலக்குகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும், கனடா தனது எல்லைகளை எப்போது திறக்கும் என்பதை ட்ரூடோ குறிப்பிடவில்லை, இதனால், சுமார் 50,000 புலம்பெயர்ந்தRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிதாக 45பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் மைக் ஃபார்ன்வொர்த், பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாகாண அவசரகால நிலையை அறிவித்த அதே நாளில் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதன்மூலம் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 231ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் ஏழு பிரிட்டிஷ் கொலம்பியர்கள் உயிரிழந்துள்ளனர். 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 7 பேர் தீவிரRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை நாடுகளான கனடாவும், அமெரிக்காவும் எல்லையை மூடுவது தொடர்பாக முடிவெடுத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் ட்ரூடோவும் நேற்று (புதன்கிழமை) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அத்தியாவசியப் பொருட்களை தவிர மற்ற எந்த பொருட்களையும் இருநாடுகளும் தற்காலிகமாக பகிர்ந்து கொள்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இருநாடுகளும் எல்லையை மூடுவது என்றும்,Read More →

Reading Time: < 1 minute உலகம் முழுவதும் உயிர்களைக் காவுகொண்டுவரும் கொரோனொ வைரஸ் (COVID-19) நெருக்கடியிலிருந்து கனேடியர்களுக்கும் வணிகங்களுக்கும் உதவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதன்படி, 25 பில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள பாரிய உதவித் திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக Cottage இல் உள்ள பிரதமர் இல்லத்துக்கு வெளியில் ஊடகங்களுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த உதவித்திட்டம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. இது, வேலைவாய்ப்பு காப்பீடு மற்றும் கனடா குழந்தைகள்Read More →

Reading Time: < 1 minute Ontario மாகாண முதல்வர் Doug Ford, COVID-19 எதிரொலியாக அவசரகால நிலையை அறிவித்துள்ளார். பாடசாலைகள், நூலகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள், திரையரங்குகள், உட்கார்ந்து சாப்பிடும் உணவகங்கள், மதுபான நிலையங்கள் அனைத்தும், குறைந்தது மார்ச் 31வரை மூடப்படும். 50 பேருக்கு மேல் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute மானிடோபாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளதாக மானிடோபா மாகாணம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்துவந்த 80 வயதான ஒருவருக்கு புதிததாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சமீபத்திய பயணத்தின் மூலமே அனைவருக்கும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மாகாணம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, மானிடோபா மேலும் இரண்டு கொரோனா வைரஸ் திரையிடல் மையங்களை – ஃபிளின் ஃப்ளோன் மற்றும்Read More →