Reading Time: 2 minutes கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் தேசிய செயல்பாட்டாளர் சுரேஸ் பலி. இன்று மாலை (May 15, 2020, 5:30 PM) கனடா ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே (Smiths Falls) மின் கம்பம் ஒன்றுடன் மோதிய மற்றொரு ஓட்டுநருக்கு உதவ தனது வாகனத்தை நிறுத்திய சுரேஷ் அவர்கள், உதவி செய்துகொண்டிருந்தவேளை 3வது வாகனம் விழுந்திருந்த மின் கம்பியின் மீது ஏறி உயரழுத்த மின்சாரம் தாக்கிRead More →

Reading Time: < 1 minute வன்கூவரில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவியதற்கு பின்னர் 83சதவீதம் தீ விபத்துகள், அதிகரித்துள்ளதாக பொலிஸ் அலுவலர் டானியா விசிண்டின் தெரிவித்துள்ளார். கடந்த 10 வாரங்களில், வன்கூவர் முழுவதும் தொடர்ச்சியான சந்தேகத்திற்கிடமான தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து டானியா விசிண்டின் கூறுகையில், ‘மார்ச் 1ஆம் திகதி முதல் மே 11ஆம் திகதி வரை 99 தீ வைக்கும் குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியிலிருந்து 83Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வானிலை மேம்படுவதால் எதிர்வரும் ஜூன் மாத ஆரம்பத்தில், சில தேசிய பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். பல வாரங்களாக வீடுகளிலேயே முடங்கி கிடந்த மக்களுக்கு பிரதமர் ஜஸ்டினின் இந்த அறிவிப்பு புத்துயிர் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும் அரசின் நோக்கத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகின்றது. இந்த அறிவிப்பின் மூலம், மக்கள்Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாணத்தின் மீட்பு கட்டத்தின் முதல் கட்டம் குறித்து முதல்வர் டக் ஃபோர்ட் விபரித்துள்ளார். குயின்ஸ் பூங்காவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நமது முயற்சிகள் பலனளிக்கின்றன. நாம் மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றினால், நாம் நமது காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், நாம் நிறைய வணிகங்களைத் திறந்து, அதிகமானவர்களை மீண்டும் வேலைக்கு அழைத்துச் செல்ல முடியும்’ எனRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 170பேர் உயிரிழந்ததோடு, 1,123பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,472ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 73,401ஆக அதிகரித்துள்ளது. மேலும், 31,838பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 36,091பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minute உலககெங்கும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ள இவ்வேளையில், தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிமுகாமில் உறவுகள் அடிப்படை உணவு வசதிகூட இன்றி அல்லல்ப்பட்டுவருகின்றனர். அகதிமுகாமிக்கு அரசின் எவ்வித உதவியும் இதுவரை வழங்கப்படாத நிலையில், கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்கள் (Carleton Tamil Alumni) உதவியுள்ளார்கள் . மே 11ம் திகதியன்று, கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்களின் நிதியுதவியுடன், தமிழ்Read More →

Reading Time: < 1 minute கனடிய பால்வள ஆணையத்தின் கடன் வரம்பு, 200 மில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் பால்வள ஆணையத்தின் கடன் வரம்பு 300 மில்லியன் டொலரிலிருந்து 500 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான பாலாடைக்கட்டி (சீஸ்) மற்றும் வெண்ணெய் சேமித்து வைப்பது தொடர்பான செலவுகளை இது ஈடுசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஒன்றாரியோ மாகாணத்தின் போராட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் ‘உண்மையான நாயகர்கள்’ என முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக பல வசதி மையங்களில் பணியிடங்களில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பயனாளிகளுக்கு சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வர் டக் ஃபோர்ட்; கூறுகையில், ‘நமது மருத்துவமனை ஊழியர்கள், நீண்டகால பராமரிப்பு இல்லங்கள், ஓய்வூதிய இல்லங்கள் மற்றும் குழு வீடுகள், வீடற்ற தங்குமிடங்கள் மற்றும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 133பேர் உயிரிழந்ததோடு, 1,121பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,302ஆ உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,278ஆக அதிகரித்துள்ளது. மேலும், 31,812பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 35,164பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minute கனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையிலான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு தடை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, குறித்த பயணத் தடை எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளதாக கனேடிய அரசாங்க ஆதாரமும் அமெரிக்காவின் உயர் அதிகாரியின் தகவல்களும் தெரிவிக்கின்றன. இரு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, ஏப்ரல் 18ஆம் திகதி எல்லை கட்டுப்பாடுகளை மே 21ஆம் திகதி வரை நீடிக்கRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை வெகுவாகக் குறைப்பதற்கான ஒரு சிறந்தவழி முககவசத்தை அணிவதே என கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கியூபெக்கர்கள் பொது வெளியில் இருக்கும்போது முக கவசங்களை அணிய வேண்டும் என்று நாங்கள் கடுமையாக பரிந்துரைக்கிறோம். கொவிட்-19 தொற்றை தவிர்ப்பதற்கு அடிக்கடி கை கழுவுதல் மற்றும்Read More →

Reading Time: < 1 minute பலரினதும் கவனத்தை ஈர்த்த, கல்கரி மிருகக்காட்சி சாலையின் இரண்டு பாண்டாக்களும், அதன் சொந்த நாட்டுக்கே செல்லவுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக கல்கரி மற்றும் சீனா இடையேயான நேரடி விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் மூங்கில் கிடைப்பது கடினமாகி வருகின்றது. இதனால், இரண்டு பாண்டாக்களையும் சீனாவுக்கே திரும்பி அனுப்ப மிருகக்காட்சி சாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கல்கரி மிருகக்காட்சிசாலையின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் க்ளெமென்ட் லாந்தியர் கூறுகையில்,“இந்த சவாலானRead More →