கொவிட்-19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 121பேர் உயிரிழப்பு- 1,182பேர் பாதிப்பு
Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 121பேர் உயிரிழந்ததோடு, 1,182பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,152ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81,324ஆக அதிகரித்துள்ளது. மேலும், 33,457பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 41,715பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →