Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக, சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதார அமைச்சர் டிக்ஸ் ஆகியோர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர். இது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் கொண்டாட்ட விருந்துகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் இளையவர்களால் பெரும்பாலும் தூண்டப்படுகிறது என அவர்கள் கூறியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 339பேர் பாதிப்படைந்ததோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 10ஆயிரத்து 338ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 852பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 4 ஆயிரத்து 435பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 97 ஆயிரத்து 051பேர் பூரணRead More →

Reading Time: < 1 minute அல்பர்ட்டாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில், எத்தனை பேர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர் ஆகிய தகவல்கள் உடனடியாக வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது இது தொடர்பாக முழுமையான விபரம் வெளியாகியுள்ளது. அல்பர்ட்டாவின் ஜாஸ்பர் அருகே கொலம்பியா ஐஸ்ஃபீல்ட்ஸ் என்ற இடத்தில், நேற்று முன் தினம் (சனிக்கிழமை) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் உயிரிழந்ததோடு, 14 பேர் உயிருக்கு ஆபத்தான காயம் அடைந்தனர். பேருந்து விபத்துக்குள்ளானபோது 27Read More →

Reading Time: < 1 minute அழிந்துவரும் காட்டு தேனீக்களை காப்பாற்ற உதவுமாறு, யோர்க் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியரும் காட்டு தேனீ மரபியல் நிபுணருமான சாண்ட்ரா ரெஹான், கனேடியர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். கனடியர்கள் காட்டுப்பூக்களை நடவு செய்வதன் மூலம் உயிரினங்களை காப்பாற்ற தங்கள் பங்களிப்பை வழங்கலாம்’ என அவர் கூறினார். கடந்த ஆண்டு 120க்கும் மேற்பட்ட காட்டு தேனீ இனங்களிடையே மேற்கொண்ட ஆய்வில், 14 இனங்கள் அழிவடைந்துள்ளன என்று ரெஹான் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளில், தாவர-மகரந்தச் சேர்க்கைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாத்திரம் புதிதாக 405 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், நேற்றைய தினம் 12 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேற்று வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 669 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் எட்டாயிரத்து 839 பேர் உயிரிழந்துள்ளதுடன், 96 ஆயிரத்து 689 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடா மற்றும் மெக்ஸிகோ இடையே கடந்த 4 மாதங்களாக தொடரும் எல்லை மூடல் தொடர்ந்து நீடிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்படி மெக்ஸிகோ – கனடாவுக்கு இடையிலான எல்லையை எதிர்வரும் ஓகஸ்ற் 20 ஆம் திகதிவரை தொடர்ந்து மூடுவதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக நாளொன்றுக்கு 70 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுவரும் நிலையில் எல்லையை தொடர்ந்து மூடுவதற்காக முடிவை மெக்ஸிகோ-கனடா ஆகிய நாடுகள் எடுத்துள்ளன.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 435பேர் பாதிப்படைந்ததோடு, 17பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 9ஆயிரத்து 264ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 827பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 27 ஆயிரத்து 601பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 72 ஆயிரத்து 836பேர் பூரணRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளுடன் முன்னேறுவது குறித்து, சீன அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொவிட்-19 தடுப்பூசியின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த வேலை தடையின்றி தொடர முடியும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்து சீன அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். உலகளாவிய தொற்றுநோயைRead More →

Reading Time: < 1 minute கனேடிய எல்லையின் ஊடாக நுழைவதற்கு 5,000 அமெரிக்க குடிமக்கள் முயற்சி செய்ததாக, கனடா எல்லை சேவைகள் முகவரகத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. கனடாவுக்குள் கடைகளுக்குச் செல்லவும், இடங்களைப் பார்வையிடுவதற்கும் அல்லது பொழுதுபோக்கிற்காகவும் கனடாவுக்குள் நுழைய இவர்கள் முயற்சித்துள்ளனர். மார்ச் 22ஆம் திகதி முதல் ஜூலை 12ஆம் திகதி வரை 10,329 அமெரிக்க குடிமக்கள் எங்கள் பகிரப்பட்ட எல்லையிலிருந்து விலகிச் செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொவிட்-19 தொற்றுநோய் இருந்தபோதிலும், அவர்கள் கனடாவுக்கு வருகைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் புதிதாக பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம் 331 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், எட்டு பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். அத்துடன், அங்கு நேற்று வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து எட்டாயிரத்து 486 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 72 ஆயிரத்து 170 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் அங்கு எட்டாயிரத்து 798 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 565பேர் பாதிப்படைந்ததோடு, 7பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 8ஆயிரத்து 155ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 790பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 27 ஆயிரத்து 524பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 71 ஆயிரத்து 841பேர் பூரணRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவின் 34 உள்ளூர் பொது சுகாதார பிரிவு பிராந்தியங்களில், பெரும்பாலானவை ஜூலை 17ஆம் திகதி முதல் மூன்றாம் நிலைக்கு முன்னேறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்மைய, உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள் மற்றும் உட்புற உணவகங்கள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து வணிகங்களும் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் உள்ள சுகாதார அலகுகள், நயாகரா மற்றும் வின்ட்சர் போன்ற சிலவற்றோடு, மூன்றாம் நிலைக்கு முன்னேறும் பகுதிகளின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.Read More →