Reading Time: < 1 minute COVID தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான பயண கட்டுப்பாடுகள் குறித்து கனடிய மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகின்றது கனடிய துணைப் பிரதமர் Chrystia Freeland இந்தத் தகவலை வெளியிட்டார். வெளிநாடுகளில் அத்தியாவசியமற்ற பயணங்களிலிருந்து திரும்பும் விமான பயணிகளுக்கு கட்டாய விடுதி தனிமைப்படுத்தலும் இதில் அடங்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. புதிய பயண கட்டுப்பாடுகளை முன்னறிவிப்பின்றி கனடா விதிக்கக்கூடும் என கனடிய பிரதமர் Justin Trudeau கடந்த வாரம் அறிவித்திருந்தார்Read More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் தனது இரண்டாவது அவசரகால நிலை உத்தரவு மற்றும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை மேலும் இரண்டு வாரங்கள் நீடித்துள்ளது. அவசர நிலை மற்றும் வீட்டில் தங்கும் உத்தரவுகள் பெப்ரவரி 09-ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் தெரிவித்தார். ஒன்ராறியோவில் கடந்த ஜனவரி 12-ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இரண்டாவது அவசர கால நிலை அறிவிப்பைத் தொடர்ந்து மாகாணத்தில் உள்ளவர்கள் அத்தியாவசியRead More →

Reading Time: 3 minutes கனடாவில் முதியோர் நீண்டகால பராமரிப்பு மைய கட்டமைப்புக்களில் உள்ள தோல்விகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். கனேடிய பொதுமன்ற அமர்வில் நேற்று மெய்நிகர் வழியில் பங்கேற்றுப் பேசும்போதே அவா் இவ்வாறு வலியுறுத்தினார். கனடாவில் முதியோர் நீண்டகால பராமரிப்பு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஆயிரக்கணக்கான முதியவர்கள் இறந்துள்ளதுடன், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute பிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்காவில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகளுக்கு எதிராக தங்களது தடுப்பூசி சிறப்பாகச் செயலாற்றுவதாக நம்புவதாக மொடர்னா தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் நோயெதிர்ப்புத் திறனைப் பாதிக்கும் என நம்பப்படும் தென்னாபிரிக்காவில் பரவும் புதிய திரிவு வைரஸ் தொடர்பில் மேம்படுத்தப்பட்ட பரிசோதனைகள் நடைபெறும் எனவும் மொடர்னா அறிவித்துள்ளது. பிரிட்டனில் காணப்படும் திரிவு கொரோனா வைரஸூக்கு எதிராக மொடர்னா தடுப்பூசி செயலாற்றுகிறது. சிறப்பான நோயெதிர்ப்புத் திறனை உறுதிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கணவனின் கனவில் வந்த எண்களைக் கொண்டு லொட்டரி வாங்கிய பெண்ணுக்கு 60 மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் டொரோண்டோவில் வசிப்பவர் Deng Pravatoudom, வயது 57. இவர் 1980-இல் தனது 14 உடன்பிறப்புகளுடன் லாவோஸிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தார். பல தசாப்தங்களாக, அவரும் அவரது கணவரும் தங்கள் குடும்பத்தை ஆதரிக்க கடுமையாக உழைத்து வந்துள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னர் இந்த பெண்ணின் கணவனின் கனவில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக ஏழு இலட்சத்து 53ஆயிரத்து 11பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 19ஆயிரத்து 238பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டதோடு 144பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 62ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minute கேஸ்கேட் கிறிஸ்டியன் பாடசாலையில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து எச்சரிக்கையுடன் பாடசாலை நிர்வாகம், பாடசாலையை மூடியுள்ளது. இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை பாடசாலை அதன் கதவுகளை மூட முடிவு செய்துள்ளது. சுய கண்காணிப்பு அல்லது தனிமைப்படுத்தப்படுவதற்கு ஆலோசனை வழங்குவதற்காக, தனிமனிதர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் மற்றும் அவர்கள் யாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர் என்பதை தீர்மானிக்க தொடர்புத் தடமறிதல் தொடங்கப்படுகிறது. பாடசாலை சமூகத்துடன்Read More →

Reading Time: < 1 minute கனடாவில், இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தை கட்டுவதாக கனடாவின் பிரம்ப்டன் மேயர் பற்றிக் பிரவுண் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்கு கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை, பிரம்ப்டன் நகர சபை ஏகமனதாக வாக்களித்தாக பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டது. இது, உலகRead More →

Reading Time: < 1 minute மெற்றோ லிங் போக்குவரத்து நிறுவனம் கோவிட் தொற்றால் கோ போக்குவரத்து கழக 64 வயது சுத்திகரிப்பு ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளது. மெற்றோ லிங்கின் பேச்சாளர் Anne Marie Aikins உயிரிழந்தவரின் குடும்பத்திற்க்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், கடந்த பதினோறு வருடங்களாக பணிபுரிந்த குறித்த நேர்மையான ஊழியரை தாம் இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த உயிரிழந்த பணியாளர் பணியில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக தெரியவில்லை என்று அவர் கூறினார். புதன்கிழமைRead More →

Reading Time: < 1 minute விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ரொக்கெட் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன. இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் 2017ஆம் ஆண்டு 104 செயற்கைக் கோள்களை ஒரே ரொக்கெட்டில் விண்ணில் செலுத்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்,Read More →

Reading Time: < 1 minute இலங்கை தூதுவராக நியமித்தவரை ஏற்றுக்கொள்வதை கனடா தாமதப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராக முன்னாள் விமானப்படை தளபதி எயர்சீவ் மார்சல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்கு நாடாளுமன்றத்தின் உயர்பதவிக்களுக்கான குழு கடந்த வருடம் நவம்பர்மாதம் ஒன்பதாம் திகதி அனுமதி வழங்கியிருந்தது. எனினும் அவரது நியமனத்தை அங்கீகரிப்பதை கனடா தாமதப்படுத்துகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய நாடுகளில் ஒன்றுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 19ஆயிரத்து 94பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 47ஆயிரத்து 383பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 852பேர் பாதிக்கப்பட்டதோடு 120பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 63ஆயிரத்து 668பேர்Read More →