Reading Time: 2 minutes இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கனடா நாட்டுக்கான பிரதிநிதியாக கனடாவைச் சேர்ந்த முன்னாள் வர்த்தகர் ஆனந்தம் இரத்தினகுமார் (முன்னாள் டொராண்டோ SunSonic இணைய சேவை நிறுவன உரிமையாளர்) நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் நேற்று (15) புதன்கிழமை விசேட நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நியமனத்தை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் எஸ். அமுனுகம இளம் வர்த்தகருக்கு வழங்கியுள்ளார். இதனையடுத்துRead More →

Reading Time: < 1 minute பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டு விழா நிகழ்வினை முன்னிட்டு கனடாவில் விசேட நிகழ்வு நடைபெறவுள்ளது. எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி முடிசூட்டு விழா நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு கனடாவிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸுடன் கடந்த ஐம்பது ஆண்டுகளாக கனடாவிற்கு நெருங்கிய நட்புறவு காணப்படுவுதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் மீதும் முடியாட்சிRead More →

Reading Time: < 1 minute கனடா பொதுத்தேர்தலில் சீனாவின் தலையீடு தொடர்பில் விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் லிபரல் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. இதில் லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் (Justin Trudeau) தற்போது ஆட்சி நடந்து வருகிறது. இங்கு கடந்த இரண்டு முறை நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் சீனாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது தங்களுக்கு ஆதரவாக இருக்கும் லிபரல் கட்சி ஆட்சிக்குRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வீட்டு வன்முறைச் சம்பவமொன்றை தீர்த்து வைப்பதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் எட்மோன்ரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடு ஒன்றில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதன் போது பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 30 வயதான கான்ஸ்பிள் பிரட் ரயன் மற்றம் 35Read More →

Reading Time: < 1 minute கனடாவின் சிறைச்சாலைக்கு புறாவொன்று கழுத்தில் பையுடன் சென்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் அமைந்துள்ள சிறைச்சாலை ஒன்றுக்கு இவ்வாறு புறா சென்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட இரண்டாவது புறா இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சிறைச்சாலைக்கு போதைப் பொருளை கடுத்தவதற்காக இந்தப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்ஸ் கொலம்பியாவின் ப்ரேசர் வெலியின் மாட்ஸ்க்யூ சிறைச்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பகுதியில் பாலர் பாடசாலையொன்றும் காணப்படுவதாகவும்,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ஹோண்டா ரக வாகனம் வைத்திருப்பவருக்கு அவசர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் சுமார் 5 லட்சம் வாகனங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட (recall) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலும் அமெரிக்காவிலும் மொத்தமாக சுமார் ஐந்தரை லட்சம் ஹோண்டா ரக வாகனங்கள் இவ்வாறு மீள பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகவும், கனடாவில் 52000 வாகனங்கள் மீள பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வாகனத்தின் இருக்கை பட்டியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்த வாகனங்கள் மீள பெற்றுக்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட மூத்த இராணுவ அதிகாரி ஒருவர், பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக 6 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கில், மேஜர்-ஜெனரல் டேனி ஃபோர்டின் தமது சக இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட 16 நபர்களின் பெயர்களை இணைத்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தமக்கு இழப்பீடாக 6 மில்லியன் கனேடிய டொலர்கள் அளிக்கRead More →