Reading Time: < 1 minute அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த இந்தியர்கள் உள்பட 8 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சியில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், கனடா எல்லை வழியாக இந்தியா மற்றும் ரோமேனியா நாடுகளை சேர்ந்த 2 குடும்பத்தினர் 7 பேர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சித்துள்ளனர். கனடாவில்Read More →

Reading Time: < 1 minute விண்ணப்பித்த 700 மாணவர்களின் அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். நடந்தது என்ன? இந்த மாணவர்கள், 2019 -19 காலகட்டத்தில் கனடாவுக்கு வந்துள்ளார்கள். அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போதுதான் தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்ட விடயம் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது. அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படRead More →

Reading Time: < 1 minute மன்னாரில் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் மன்னார் மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையில் மன்னார் மற்றும் தலைமன்னார் பிரதான வீதி ஆகிய இடங்களில் குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடம் இருந்து 16 கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யபட்டிட்டவர்கள் மன்னாரை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் 37Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் திகதி தொடக்கம் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 16.55 டொலர்களாக உயர்வடைந்துள்ளது. தற்பொழுது ஒன்றாரியோ மாகாணத்தில் குறைந்தபட்ச சம்பளமாக மணித்தியாலம் ஒன்றுக்கு 15.50 டொலர்கள் வழங்கப்படுகின்றது. இந்த தொகை 6.8 வீதத்தினால் உயர்த்தப்பட்டு 16.55 டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள் பணியாற்றும் ஒருவர் இந்த சம்பள அதிகரிப்பு மூலம் வருடமொன்றுக்கு 2200 டொலர்கள் கூடுதலாக சம்பளம் பெற்றுக்கொள்வார்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் Akwesasne Mohawk நகரின் சென் லோரன்ஸ் ( St. Lawrence) நதியில் இவ்வாறு ஒரு சிறு குழந்தை உள்ளிட்ட 6 பேரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட குழந்தையிடம் கனடிய கடவுச்சீட்டு மீட்கப்பட்டுள்ளது. கியூபெக், ஒன்றாரியோ மற்றும் நியூயோர்க் பகுதிகளின் எல்லைப் பகுதியில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர்களைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் நான்கு பதின்ம வயதினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவின் மானிடோபா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் கார் ஒன்றும் ட்ரக் வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரில் ஐந்து பதின்ம வயதினர் பயணித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த கார் நிறுத்தப்பட வேண்டிய இடத்தில் நிறுத்தாது பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 18 வயதான சாரதியும், 17 வயதான இரண்டு ஆண்Read More →

Reading Time: < 1 minute மெய்நிகர் வழியிலான அவசர மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேலும் 3 மாதங்களுக்கு ஒண்டாரியோ மாகாண அரசு நீடித்துள்ளது. இந்த வெள்ளிக்கிழமையுடன் அரசின் நிதி ஒதுக்கீடுகள் முடிவடைவதன் காரணமாக, மெய்நிகர் அவசர சிகிச்சை பிரிவுகளை மூடுவதற்கு பல மருத்துவமனைகள் தயாராகி வந்தன. இந்நிலையில், ஜூன் 30ஆம் திகதிவரை நிதியினை வழங்குவதற்கான ஒப்பந்தம், ஒண்டாரியோ மருத்துவ கழகத்துடன் எட்டப்பட்டுள்ளதாக, மாகாண சுகாதார அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அவசியமானRead More →