Reading Time: < 1 minute கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவுகளில் நடைபெற்ற தேர்தலில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தீவுகளில் தேர்தல் பிரச்சாரங்கள் சுகாதார காப்பீட்டினை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தலில் பிரின்ஸ் எட்வர்ட் தீவுகளின் முதல்வர் டென்னிஸ் கிங் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. மொத்தமாக 27 தொகுதிகளில் முதல்வர் டென்னிஸ் கிங், தலைமையிலான முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 22 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி மொத்தமாக 56Read More →

Reading Time: < 1 minute நாளாந்தம் மது அருந்துவது உடல் நலனுக்கு கேடில்லை என கனேடிய ஆய்வு நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நாள்தோறும் ஒரு கிளாஸ் பியர் அல்லது வைன் அருந்துவது உடல் நலனை பாதிக்கப் போவதில்லை என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அல்கஹோலினால் மனிதனின் ஆயுள் குறுகுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அவ்வாறான ஆபத்துக்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தளவு, நடுநிலையான அளவில் மது அருந்துவோருக்கும், மது அருந்தாதோருக்கும் இடையில் மரணமடையும் சாத்தியப்பாடுகளில் பாரியளவு மாற்றமில்லைRead More →

Reading Time: < 1 minute கனடா அமெரிக்க எல்லையில் 8 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களில், உயிரிழந்த இந்தியர்களின் அடையாளங்கள் வெளியாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை, அதாவது 30.3.2023 அன்று, கனடாவின் கியூபெக் மாகாணப்பகுதியில் அமைந்துள்ள St Lawrence நதிக்கரையோரமாக 8 உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது, உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்களில், நான்கு பேர் இந்தியாவின் குஜராத்திலுள்ள Manekpur என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அப்பகுதி பொலிஸ்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் 16 வயதான இளம் நீச்சல் வீராங்கனை இரண்டு உலக சாதனைகளை படைத்துள்ளார். சம்மர் மெக்கின்டோஸ் என்ற வீராங்கனை இவ்வாறு இரண்டு உலக சாதனை படைத்துள்ளார். உலக ஜூனியர் மற்றும் கனேடிய தேசிய நீச்சல் சாதனைகளை மெக்கின்டோஸ் படைத்துள்ளார். 200 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் மெக்கின்டோஸ் ஜூனியர் உலக சாதனையை படைத்துள்ளார். 200 மீற்றர் தூரத்தை 1.53.91 என்னும் நேரப் பெறுதியில் கடந்து சாதனை படைத்துள்ளார். சிலRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஒவ்வொரு 48 மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் என்ற அடிப்படையில் கொலைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையில் சுமார் 850 பெண்கள், சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி பலியாகும் பெண்களின் எண்ணிக்கை கனடாவில் வெகுவாக உயர்வடைந்துள்ளது. நீதி மற்றும் பொறுப்பு கூறலுக்காக கனேடிய பெண் கொலை கண்காணிப்பு அமைப்பினால் இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளைச் சம்பவங்களை தவிர்க்க விசேட சட்டம் அறிமுகம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சாரதிகள், எரிபொருள் நிரப்ப முன்னதாக, அதற்கான பணத்தை செலுத்துவதனை கட்டாயமாக்க உத்தேச சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் தீபக் ஆனந்த் இந்த பரிந்துரையை செய்துள்ளார். இந்த சட்டத்தின் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணியாற்றுவோர் தாக்குதல்களுக்கு இலக்காவதனை தடுக்க முடியும் என அவர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மிக மெதுவாக வாகனத்தைச் செலுத்தியதாக சாரதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில், குறித்த சாரதி மெதுவாக வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்ய வேண்டிய தடத்தில் குறித்த சாரதி 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்தார் என குற்றம் சுமத்பத்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தை மெதுவாக செலுத்துவது விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம்Read More →