Reading Time: < 1 minute ருமேனிய குடும்பத்தினர், கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம் காரணமாகவே மிக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது. கனடிய அமெரிக்க எல்லை பகுதியில் அண்மையில் படகு ஒன்று கவிழ்ந்து இரண்டு சிறார்கள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இளம் தந்தை ஒருவர் ருமானியாவிற்கு நாடு கடத்தப்படக்கூடிய நெருக்கடியை எதிர்நோக்கிய காரணத்தினால் அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு செல்ல முயற்சித்துள்ளார். இவரது 2Read More →

Reading Time: < 1 minute கனடாவில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸார் அறிவித்துள்ளனர். பிணையில் விடுதலை செய்யப்படும் நபர்களினால் வன்முறைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மாகாண முதல்வர்களுடன் அவசர சந்திப்பு ஒன்று நடாத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளது. அவசர சந்திப்பு ஒன்றுக்கு அனுமதி வழங்குமாறு மாகாண பொலிஸ் பிரதானிகள், மாகாண முதல்வர்களிடம் எழுத்து மூலம் கோரியுள்ளனர். அண்மைய நாட்களாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள்Read More →

Reading Time: < 1 minute போருக்குத் தப்பி வரும் உக்ரைன் பெண்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, பதிலுக்கு அவர்களிடம் பாலியல் ரீதியிலான பதிலுதவிகளை எதிர்பார்க்கும் ஆண்களைக் குறித்த செய்திகள் பல வெளியாகிவருகின்றன. தற்போது, உக்ரைன் அகதிகள் சிலருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள பெண் ஒருவரே, அவர்களிடம் பாலியல் ரீதியான விடயங்கள் தொடர்பில் அணுகியதாக பொலிசாருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் வாழும் ஒரு பெண், சில உக்ரைன் இளம்பெண்களுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார். அவர்களில்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒஷோவா பகுதியில் நோய் காரணமாக செல்லப்பிராணி ஒன்று உயிரிழந்துள்ளது. கனடாவின் பொது சுகாதார திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. காட்டுப் பறவை ஒன்றை கடித்த காரணத்தினால் நாயாயொன்றுக்கு பறவை காய்ச்சல் நோய் பரவியுள்ளது. வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த நாய் ஒன்று இவ்வாறு பறவை காய்ச்சல் நோய்க்கு உட்பட்டுள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட நாய் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனடாவின் பிராம்டன் மற்றும் கெலிடன் ஆகிய பகுதிகளில் இரண்டுRead More →

Reading Time: < 1 minute கனடா அமெரிக்க எல்லையில் இந்தியர்கள் உட்பட 8 பேர் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். கனடாவும் அமெரிக்காவும் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கனடா அமெரிக்க எல்லையில் புலம்பெயர்வோர் எல்லை கடக்கப் பயன்படுத்தும் Roxham Road என்னும் பகுதி மூடப்பட்டது. இது வேறு விதமான அபாயங்களை உருவாக்கும் என புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் எச்சரித்தன. Roxham Road மூடப்பட்டதால், வேறொருRead More →

Reading Time: < 1 minute முதன் முறையாக கனேடியர் ஒருவர் நிலாவிற்கு செல்லும் விண்கலத்தில் இடம்பெற்றுள்ளார். CF18 விமான விமானியான கேணல் ஜெர்மி ஹான்சன் இவ்வாறு விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். அமெரிக்காவின் நாசா மற்றும் கனடிய விண்வெளி ஆய்வு நிலையம் என்பன கூட்டாக இணைந்து இந்த விண்கலத்தை விண்ணுக்கு ஏவ உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Artemis II என்ற விண்கலம் எதிர்வரும் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் விண்ணுக்கு ஏவப்பட உள்ளது. விண்கலத்தில் நான்கு பேர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில், குடி போதையில் வாகனம் செலுத்திய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் பதவி இறக்கப்பட்டுள்ளார். போலீஸ் திணைக்களத்தின் ஒழுக்காற்று குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மேற்பார்வை உத்தியோகத்தராக கடுமையாற்றி வந்த ரியாஸ் ஹுசைன் என்ற அதிகாரியே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்து மேற்கொண்டதாக குறித்த அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதனை தொடர்ந்து ரியாஸ் ஹுசைனுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.Read More →