Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியா ஒன்றுகூடுதல் வரம்புகள் இப்போது வெளிப்புற வருகைகளுக்கு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியர்கள் இப்போது 10 பேர் கொண்ட குழுக்களாக ஒரு வெளிப்புற அமைப்பில் உடனடியாக செயற்பட முடியும் என அவர் கூறினார். இவர்கள் அதே 10 ஆட்களாக இருக்க வேண்டும். எனவே, நீங்கள் அதை சீராக வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர் ஹென்றி குறிப்பிட்டார். உட்புற ஒன்றுகூடுதல் விதிகளுக்கு எந்த புதுப்பிப்பும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 018பேர் பாதிக்கப்பட்டதோடு 36பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 99ஆயிரத்து 757பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 371பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30ஆயிரத்து 672பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 549பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வீட்டு வளாகத்தில் ஆயுதங்களுடன் நுழைந்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் திகதி கோரே ஹர்ரன் என்பவர் கைகளில் ஆயுதங்களுடன் நுழைந்த போது அவர் கைது செய்யப்பட்டார். அப்போது வீட்டில் பிரதமரோ, குடும்பத்தினரோ இல்லை என்ற போதிலும்ட, அவர் மீது பிரதமர் வீட்டு வளாகத்தில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து, பிரதமரை அச்சுறுத்த முயற்சித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தRead More →

Reading Time: < 1 minute கோவிட்19 தொற்று நோயால் இறந்தவர்களை நினைவு கூரும் தேசிய நினைவு தினம் இன்று கனடாவில் அனுஷ்டிக்கப்பட்டது. கோவிட்-19 தொற்று நோய் பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பால் பிரகடணப்படுத்தப்பட்டு இன்று ஓரு வருடம் நிறைவு பெற்றது. இதனையொட்டி இந்நாள் கனடாவில் தேசிய நினைவு நாாளக பிரகடணப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கோவிட்19 தொற்று நோயால் இறந்தவர்களை நினைவுகூர்ந்து நேற்று பொதுமன்றத்தில் பேசிய கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மார்ச் 11, 2020 கனடாவில் வாழ்க்கையைRead More →

Reading Time: < 1 minute தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியிலும் இவ்வாண்டு ஜனவரியில் சுமார் 24,665 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றுள்ளதாக கனடா புள்ளிவிபரவியல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தொற்றுநோய்க்கு முன்னராக காலப்பகுதியில் கனடா மாதாந்தம் வரவேற்ற புதிய குடியிருப்பாளர்களுக்கு நிகராக இது அமைந்துள்ளது. தொற்றுநோய்க்கு முன்னர் கனடா மாதத்திற்கு 25,000 முதல் 35,000 புதிய குடியேற்றவாசிகளை வரவேற்றது. கனடா கடந்த ஆண்டு மார்ச் 18-ஆம் திகதி முதல் கொரோனா வைரஸின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைRead More →

Reading Time: < 1 minute அமெரிக்கா மற்றும் கனடாவில் கோவிட்-19 தடுப்பூசி போடும் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் கோடையில் இரு நாடுகளின் எல்லைகளை மீண்டும் திறக்க வேண்டும் என அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் ஜனாதிபதி ஜோ பைடனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுடன் இணைந்து இந்தக் கோடை காலத்தில் எல்லைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோ பைடனுக்கு நியூயோர்க்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதி பிரையன் ஹிக்கின்ஸ்Read More →

Reading Time: < 1 minute கோவிட்19 தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஆண்டு கனடாவில் இறப்பு வீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட சராசரியை விட 13,798 அதிகப்படியான இறப்புகள் பதிவாகியுள்ளதாக கனடா புள்ளிவிவரவியல் பிரிவு நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் நடுப்பகுதி வரை கனடாவில் மொத்தம் 296,373 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது எதிர்பார்க்கப்பட்ட சராசரி வருடாந்த இறப்பு வீதத்தை விட 5 வீதம் அதிகமாகும்Read More →

Reading Time: < 1 minute பொது பிரிட்டிஷ் கொலம்பியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரில் கற்றல் வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேம்பட்ட கல்வி மற்றும் திறன் பயிற்சி அமைச்சர் அன்னே காங், மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி, அனைத்து பொது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தலைவர்களுக்கு இந்த செப்டம்பரில் வளாகக் கல்விக்கு முழுமையாக திரும்பத் தயாராகுமாறு அறிவுறுத்தியதாக கூறினர். அன்னே காங், இந்த வளர்ச்சியை ஊக்கமளிக்கும் என்று சொன்னாலும், சிலர் திரும்பிச்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்தைக் அண்மிக்கின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் எட்டு இலட்சத்து 96ஆயிரத்து 739பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 22ஆயிரத்து 335பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 221பேர் பாதிக்கப்பட்டதோடு 31பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30ஆயிரத்து 442பேர்Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் உள்ள 300க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் இந்த வாரம் முதல் கொவிட்-19 தடுப்பூசியை வழங்கவுள்ளன தெற்கு ஒன்றாரியோ முழுவதும் அமைந்துள்ள மருந்தகங்களின் முழு பட்டியலையும் மாகாண அரசாங்கம் வெளியிட்டது. அந்த மருந்தகங்கள் 60 முதல் 64 வயதிற்குட்பட்ட ஒன்றாரியர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அளவை வழங்கும். குறிப்பிட்ட வயதுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால், கனடாவின் நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய ஆலோசனைக் குழு அந்த வயதினருக்கான செயற்திறன் குறித்த வரையறுக்கப்பட்ட தகவல்கள்Read More →

Reading Time: < 1 minute கனேடிய இராணுவத்தின் துணைத் தளபதியாக முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். லெப்டினென்ட் ஜெனரல் பிரான்சிஸ் ஆலன் பாதுகாப்பு படைகளின் துணைத் தளபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்மிரல் மெக்டொனால்ட் மற்றும் ஜெனரல் ஜொனாதன் வான்ஸ் ஆகிய இரு மூத்த கனேடிய இராணுவ அதிகாரிகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக கனேடிய படைகளின் தேசிய புலனாய்வு துறையின் விசாரணைக்கு முகம் கொடுத்து வரும் நிலையில்Read More →

Reading Time: < 1 minute நோர்த் யோர்க் பகுதியில் கூரிய ஆயுதத்ததால் குத்தப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை 70 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலை 11.30 மணிக்கு இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே 70 வயதான நபர் சடலமாகக் காணப்பட்ட நிலையில், மற்றவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் தன்னைத் தானே குத்திக்Read More →