Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் புதிய மண்டலங்களுக்குள் இரண்டு பிராந்தியங்கள் நுழைகின்றன. ஹமில்டன் பொது சுகாதார சேவைகள் நகரம் சாம்பல்- பூட்டுதல் மண்டலத்திற்கும் கிழக்கு ஒன்றாரியோ சுகாதாரப் பிரிவு சிவப்புக் கட்டுப்பாட்டு மண்டலத்திற்கும் நகரும். இந்த மாற்றங்கள் மார்ச் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மதியம் 12:01 மணிக்கு நடைமுறைக்கு வரும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொவிட்-19 தொற்று அதிகரிப்பு காரணமாக, டிமிஸ்கேமிங் சுகாதாரப் பிரிவு சிவப்புக் கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் நுழைந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐந்தாயிரத்து 093பேர் பாதிக்கப்பட்டதோடு 36பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 56ஆயிரத்து 655பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22ஆயிரத்து 826பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40ஆயிரத்து 360பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 661பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute மெட்ரோ வன்கூவரில் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் போக்குவரத்து கட்டணம் 2.3 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கு காலாண்டு பொதுக் கூட்டத்தில் டிரான்ஸ்லிங்கின் இயக்குநர்கள் குழு ஏகமனதாக ஒப்புதல் அளித்தது. முன்னமே ஏற்றப்பட்ட காம்பஸ் அட்டையைப் பயன்படுத்தி, வீத மாற்றங்கள் ஒரு மண்டல வயது வந்தோருக்கான கட்டணத்திற்கு 5 சென்ட் காசுகள், இரண்டு மண்டல வயதுவந்தோர் கட்டணத்தில் 10 சென்ட் காசுகள் மற்றும் மூன்று மண்டல கட்டணத்தில் 10 சென்ட்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒன்பது இலட்சத்து 51ஆயிரத்து 562பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், 22ஆயிரத்து 790பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 192பேர் பாதிக்கப்பட்டதோடு 31பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 38ஆயிரத்து 922பேர்Read More →

Reading Time: < 1 minute அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியை தொடர்ந்து பயன்படுத்தும் கனடாவின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது. அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரத்தம் உறைதல் சிக்கல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்தத் தடுப்பூசி போடும் பணிகளை இடைநிறுத்தியுள்ளன. எனினும் இரத்தம் உறைதல் சிக்கலுடன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்குத் தொடர்புள்ளதாக எந்த ஆதாரங்களும் இதுவரை இல்லை என என ஹெல்த் கனடா கூறியுள்ளது. இந்தியாவின்Read More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் மூன்றாவது அலை முதல் மற்றும் இரண்டு அலைகளை விட இன்னும் மோசமாக இருக்கலாம் என தொற்று நோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஒன்ராறியோ கோவிட்19 தொற்று நோயின் மூன்றாவது அலைக்குள் நுழைந்துள்ளதாக மாகாண தலைமை சுகாதார வைத்திய அதிகாரி திங்கட்கிழமை அறிவித்தார். இந்நிலையிலேயே தொற்று நோயின் மூன்றாவது அலை முன்னைய அலைகளை விட மோசமாக இருக்கும் என மாகாண தொற்று நோய் நிபுணர் டாக்டர்Read More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள பெற்றோர்கள் மாகாண அரசின் மற்றொரு சுற்று தொற்றுநோய் உதவி தொகையைப் பெறவுள்ளனர். இம்முறை முன்னர் வழங்கப்பட்டதை விட இரட்டிப்பாக இந்த உதவி தொகை வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு பாடசாலை செல்லும் வயதுள்ள சிறுவர்களின் குடும்பங்களுக்கு உதவு தொகையான 200 டொலர்களை மாகாணம் வழங்கியது. இந்நிலையில் இவ்வாண்டு இந்தத் தொகை 400 டொலர்களாக அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், விசேட தேவையுடைய சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு இந்தத் தொகை 500Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 050பேர் பாதிக்கப்பட்டதோடு 24பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 46ஆயிரத்து 370பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 759பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 37ஆயிரத்து 099பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 586பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 09 இலட்சத்து 42 ஆயிரத்து 320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 03 ஆயிரத்து 601 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 19 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 22 ஆயிரத்து 735 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில், 80 வயதுக்கு மேலானவர்கள் கோவிட் 19 தொற்றுக்கு இலக்காகும் அளவு குறைவடைந்துள்ளதாக, தலைமை சுகாதார வைத்திய அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்துள்ளார். தடுப்பூசி வழங்கல்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த சாதகமான சூழல் எதிர்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். முதியோர் மத்தியிலும், நீண்டகால பராமரிப்பு நிலையங்களிலும் வைரஸ் பரவல் குறைவடைந்துள்ளமை, தடுப்பூசிகள் இன்னும் பல அனுகூலங்களை தரும் என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கனடாவின் பல மாகாணங்கள், தமதுRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அல்பர்ட்டாவில் மூன்றாவது கட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தாமதமாகும் என சுகாதார அமைச்சர் டைலர் ஷான்ட்ரோ தெரிவித்துள்ளார். மீண்டும் திறப்பதற்கான மூன்றாவது கட்டத்திற்குள் செல்ல மருத்துவமனையில் சேர்க்கும் அளவுகோல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், படி 3க்குள் முன்னேற வேண்டாம் என்று மாகாணம் முடிவு செய்துள்ளது. இதில் தனியார் உட்புறக் கூட்டங்களை மீண்டும் அனுமதிப்பதும் அடங்கும். இதுகுறித்து சுகாதார அமைச்சர் டைலர் ஷான்ட்ரோRead More →

Reading Time: < 1 minute சீனாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள கனேடியர்கள் மீதான இரகசிய விசாரணை கண்டனத்துக்குரியது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கனடா நாட்டைச் சேர்ந்த இரண்டாவது நபர் மீது பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணை தொடங்கியது. இந்த விசாரணை நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்ற அடிப்படையில், மூடப்பட்ட அறைக்குள் நடத்தப்பட்டது. இதுகுறித்து தலைநகர் ஒட்டாவாவில் கருத்து தெரிவித்த பிரதமர், ‘கனடா நாட்டினரைRead More →