Reading Time: < 1 minuteகனடாவில் பெண்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுவதில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வாரமொன்றில் ஆண்களில் 68 வீதமானவர்கள் விளையாட்டுகளில் பங்குபற்றுவதாகவும், பெண்களில் 63 வீதமானவர்களே பங்குபற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆறு முதல் 18 வயது வரையிலான பெண் பிள்ளைகள் கூடுதல் எண்ணிக்கையில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குழுவாகவும், தனியாகவும் ஒப்பீட்டளவில் பெண்களின் விளையாட்டுப் பங்களிப்பு ஆண்களை விடவும் குறைவானது என தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வின்னிப்பெக் பகுதியில் நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரை காயப்படுத்தியுள்ளார். விசாரணை ஒன்றின் போது இவ்வாறு குறித்த நபர், பொலிஸ் உத்தியோகத்தரை கடித்து, காயப்படுத்தியுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் அச்சுறுத்தி அவரது கையை கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார். 26 வயதான ராவ்டீப் சிங் என்ற நபர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தியமை, அவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடபகுதியில் இருந்து அல்பர்ட் பயணம் செய்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். குறித்த மூவரையும் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். ஹாரூன் ஹோம் மற்றும் இரண்டு பிள்ளைகள் இவ்வாறு காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூவருக்கும் என்ன நேர்ந்தது என்பது குறித்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 38 வயதான ஹாரூன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இயற்கை உர வகைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கரட் வகைகளை கொள்வனவு செய்பவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த கரட் உட்கொண்டவர்களுக்கு ஈகோலி தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வகை கரட்களை உட்கொண்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார், எனவும் 39 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த வகை கரட் சந்தையிலிருந்து மீளப்பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு இந்த கரட் வகைRead More →

Reading Time: < 1 minuteகனடிய மற்றும் அமெரிக்க எல்லை பகுதிகளை கடப்பது தொடர்பான புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் ஆண்டு முதல் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய எல்லை சேவை முகவர் நிறுவனம் இந்த மாற்றத்தை அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்வரும் ஆண்டு முதல் கனடிய அமெரிக்க எல்லை பகுதிகள் பலவற்றின் ஊடாக எல்லைகளையே கடக்க முடியும் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எல்லைகளை கடப்பதற்கான நேரங்களில் மாற்றம் அறிமுகம் செய்யப்படRead More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தென் அமெரிக்க நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார். பிரேஸில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு விஜயம் செய்துள்ளார். முதலில் அவர் பேருவிற்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது. பிரேஸிலின் ரியோ டி ஜெனய்ரோவில் ஜீ20 மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகில் நிலவி வரும் பட்டினி நிலைமை முதல் டிஜிட்டல் நாணயங்கள் வரையில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட உள்ளது. அமெரிக்காவில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம் பெற்ற படகு விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் லாம்டோன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட மீட்பு பணியாளர்களின் மீட்பு பணிகளுக்கு அமெரிக்க கரையோர பாதுகாப்பு பிரிவினரும் உதவி வழங்கியுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு தேவையற்ற வகையில் வருகை தருவதனை தவிர்க்குமாறு போலீசார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோ நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்தனர். TTC பஸ் ஒன்றும் வாகனம் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இவ்வாறு காயம் அடைந்தவர்களில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்ஸில் பயணம் செய்த சாரதி உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காரில் பயணம் செய்தவர்களும் இவ்வாறு காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடுங்குளிரில், உறைபனியில், நடந்தே நுழைய முயன்று, ஒரு குடும்பமே பனியில் உறைந்து இறந்துகிடந்த சம்பவம் மூன்று நாடுகளை அதிரவைத்த விடயம் நினைவிருக்கலாம். இந்நிலையில், அந்தக் குடும்பம் உட்பட புலம்பெயர்வோர் பலரை அமெரிக்காவுக்குள் கடத்த உதவிய இருவர் வழக்கில் விசாரணை இன்று துவங்க உள்ளது. 2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒஷாவா பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் கணவர் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். டர்ஹம் பிராந்திய போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். 48 வயதான பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வீட்டில் கிடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிர்காப்பு முதலுதவிகளை வழங்கி வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். இந்த படுகொலைRead More →