கனடாவில் அமைச்சரவையில் மாற்றம்!
Reading Time: < 1 minuteகனடாவில் நாளையதினம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பிரதி பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளை வகித்து வந்த கிறிஸ்டியா ப்ரீலாண்ட்ன் அண்மையில் பதவி விலகியுள்ளார். இந்த நிலையில் குறித்த வெற்றிடத்திற்காக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிறிஸ்டியா பிரீலாண்டின் பதவி விலகல் லிபரல் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது.Read More →