உலககெங்கும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ள இவ்வேளையில், தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிமுகாமில் உறவுகள் அடிப்படை உணவு வசதிகூட இன்றி அல்லல்ப்பட்டுவருகின்றனர்.
அகதிமுகாமிக்கு அரசின் எவ்வித உதவியும் இதுவரை வழங்கப்படாத நிலையில், கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்கள் (Carleton Tamil Alumni) உதவியுள்ளார்கள் .
மே 11ம் திகதியன்று, கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்களின் நிதியுதவியுடன், தமிழ் நாட்டில் உள்ள குமிடிப்பூண்டி ஈழத் தமிழர்கள் அகதி முகாமிற்கு, பழைய மாணவர்கள் சார்பில் ஒருவர் நேரடியாக சென்று, முதல் கட்டமாக 400 குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கான நிவாரண உணவை வழங்கியுள்ளார்கள்.
இந்த பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சி மாதிரி, மற்றைய பல்கலைக்கழக தமிழ் மாணவ அமைப்புக்களும் மற்றும் தமிழ் சமூக அமைப்புக்களும், இத் தருணத்தில் இந்திய அகதி முகாங்களில் வாழும், எம் உறவுகளிற்கு உதவிகளை செய்ய முன்வரவேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள 120 அகதி முகாங்களில் ஏறத்தாள 21,000 ஈழத் தமிழ் குடும்பங்கள் வாழ்கின்றார்கள். தற்போதைய சூழலில், அவர்களால் வெளியில் சென்று எந்த வேலைகளும் செய்ய முடியாத வேளையில், அவசர நிவாரண உணவு உதவியை மட்டும் கேட்கின்றார்கள்.
நல்ல உள்ளங்கள் யாரேனும், நிவாரண உதவி செய்ய விரும்பினால், இந்த whatsapp(1-647-998-3132) இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள். உங்களிற்கு சரியான ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
இவ்வாறு கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள்.