Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோயின் பாதுகாப்புக் கவலைகளுக்கு மத்தியில், கனடாவில் முதல் முறையாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Shan Manojkumar

பொதுப் போக்குவரத்து, வாகன வாடகைகள் மற்றும் சவாரி-பகிர்வு பயன்பாடுகளுக்கான பயணத்தை குறைத்துக்கொண்டுள்ள கனேடியர்கள், தற்போது ஒரு காரை சொந்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளனர்.

ஆட்டோட்ரேடரின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கனடாவில் முதல் முறையாக கார் வாங்குபவர்கள் அனுபவம் வாய்ந்த வாங்குபவர்களை விட மூன்று மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.

10 பேரில் ஒருவர், கார் வாங்குவதற்கான முடிவு தொற்றுநோயின் நேரடி விளைவாகும் என பதிலளித்துள்ளனர்.

இணைய வாகன சந்தையின் 600 பயனர்களை இந்த நோய்த்தொற்றின் போது தங்கள் வாகன கொள்வனவு பழக்கம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதுகுறித்து ஆட்டோட்ரேடரின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி இயன் மெக்டொனால்ட் கூறுகையில், ‘சுகாதார நெருக்கடி தொடர்பான பல காரணிகள் உள்ளன. அவை இளைய மற்றும் முதல் முறையாக வாங்குபவர்களை சந்தையில் கார் வாங்கும் நிலைமைக்கு சென்றுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்ட 1,000 கடைக்காரர்களின் முந்தைய ஆட்டோட்ரேடர் ஆய்வில், முன்னர் பொது போக்குவரத்தை ஒரு வழக்கமான அடிப்படையில் பயன்படுத்தியவர்களில் 62 சதவீதம் பேர், இப்போது ஒரு வாகனத்தை வைத்திருப்பது மிகவும் விரும்பத்தக்க விருப்பமாக கருதுகின்றனர். அவர்களில் 40 சதவீதம் பேர் தொற்றுநோய்க்குப் பிறகு மீண்டும் பொது போக்குவரத்தை பயன்படுத்தத் திட்டமிடவில்லை’ என கூறினர்.